By Village Missionary Movement
Sunday, 28-Jul-2024இன்றைய தியானம்(Tamil) 28.07.2024
மேலானதைத் தேடு
“பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்" - கொலோசெயர் 3: 2
ஹாய் குட்டீஸ், எல்லாரும் நல்லா இருக்கீங்களா? உங்களுக்கு மற்றவர்களிடமிருந்து வாங்குவது பிடிக்குமா? மற்றவர்களுக்கு கொடுப்பது பிடிக்குமா? வாங்குவதுதான் என்று நீங்க சொல்றது கேட்குது. நாம் மற்றவர்களின் சந்தோஷத்தை நாடுவது தேவனுக்கு ரொம்ப பிரியம். ஒருவர் தன் தியாகத்தால் எப்படி ஒரு நகரத்தையே உருவாக்கினார் என்ற உண்மை சம்பவத்தை கேட்போமா?
சாயர் என்ற போர்ச்சுக்கல் வியாபாரி இந்தியாவில் 1800 களில் வியாபாரம் செய்து வந்தார். இவர் இயேசு கிறிஸ்துவை அறிந்தவர் என்பதால், பார்க்கின்ற நபர்களுக்கெல்லாம் இயேசுவின் அன்பைப் பற்றி சொல்வார். கஷ்டப்படுகின்றவர்களுக்கு அவரால் முடிந்த உதவிகள் பல செய்து வந்தார். இதுவரை நடக்காத ஒரு காரியம் 1810ம் ஆண்டில் நடந்தது. அது என்னவென்று தானே நினைக்கிறீர்கள். இயேசப்பாவை ஏற்றுக் கொண்டவர்களை ஊரை விட்டுத் தள்ளி வைப்பது, துன்புறுத்துவது இப்படி பல தொல்லைகளை செய்தார்கள். இதனால் சிலர் இயேசுவை மறுதலித்தனர். இன்னும் சிலர் வேறு இடத்திற்கு மாறிச் சென்றனர். இன்றைக்கும் இப்படி பாதிக்கப்படுகின்ற மக்கள் இருக்கின்றார்கள். குட்டீஸ்! நீங்க இப்படிப்பட்டவர்களுக்காக ஜெபிக்க மறக்கக்கூடாது.
இந்த நிலையைக் கண்ட சாயர் 150 ஏக்கர் அளவில் ஓர் இடத்தை தன் சொந்த பணத்தால் வாங்கி அதில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களை குடியிருக்கச் செய்தார். இதனால் மக்கள் சந்தோஷமாகவும், பாதுகாப்பாகவும் இருந்தனர். தனக்கென்று சேமித்து வைத்திருந்த எல்லாப் பணத்தையும் கிறிஸ்துவுக்காக செலவு பண்ணினார். கஷ்டப்படுகின்ற மக்களுக்காக கண்ணீரோடு ஜெபித்தார். அப்பகுதியில் குடியேறின மக்களுக்காக அந்த இடத்தை சொந்தமாக கொடுத்துவிட்டார். இதனால் அது சாயர்புரம் என அழைக்கப்பட்டது. அவருடைய தியாகத்தால் ஒரு கிராமமே உருவானது.
குட்டிச் செல்லங்களே! இந்த சாயர் Uncle ரொம்ப Super ல எனக்குள்ளதை யாருக்கும் கொடுக்கமாட்டேன் என்று சுயநலமாய் வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள் மத்தியில் இயேசுவுக்காய் தன்னுடைய பணத்தையும் கொடுத்து அநேக ஜனங்களுக்கும் ஆசீர்வாதமாய் வாழ்ந்தார் சாயர் Uncle. நீங்களும் மற்றவர்களுக்கு கொடுத்து மேலானதைத் தேடி அநேகருக்கு ஆசீர்வாதமாய் வாழ்ந்து காட்டுங்க சரியா குட்டீஸ்.!
- Mrs. அன்பு ஜோதி ஸ்டாலின்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864