Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 18.08.2024 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 18-Aug-2024

இன்றைய தியானம்(Tamil) 18.08.2024 (Kids Special)

 

சிறுவனும் - செல்வ சீமாட்டியும்

 

“…நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்" - மத்தேயு 21:22

 

Hello குட்டீஸ், நீங்க உங்களுக்கு தேவைப்படும் எல்லா காரியத்திற்கும் முதலில் இயேசப்பாவிடம் ஜெபம் செய்வீர்களா? அல்லது அப்பா அம்மாவிடம் தொந்தரவு பண்ணி வாங்குவீர்களா? இனி மழைக்காலம் வேற வரப் போகுது. அதுக்கு குடை வேணும், Raincoat வேணும். இதுக்கெல்லாம் இயேசப்பாகிட்ட prayer பண்ண வேண்டும். சரியா! எங்கக்கா நான் ஜெபம் பண்ணுனா இயேசப்பா ஒண்ணுமே தரமாட்றாங்க அப்படினுதானே சொல்லுறீங்க. அப்ப இந்தக் கதையை கேளுங்க. இயேசப்பா தருவாருனு நம்பிக்கை உங்களுக்கு வந்து விடும். கதைக்குள் போலாமா?

 

பல ஆண்டுகளுக்கு முன்பாக நியூயார்க் நகரிலே நடந்த உண்மைச் சம்பவம் இது. உடம்பை நடுங்க வைக்கிற குளிர் எல்லோரையும் உலுக்கிக் கொண்டிருந்தது. அந்தக் குளிரில் தான் உங்களைப் போல் ஒரு சிறுவன் கிழிந்த ஆடையுடன் காலில் செருப்பு இல்லாமல் நடுங்கிக் கொண்டிருந்தான். அப்பொழுது அந்த நகரில் உள்ள ஒரு செல்வ சீமாட்டி தனது குதிரைகள் பூட்டிய இரதத்தில் அந்தப் பக்கம் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் கண்ணில் அந்த சிறுவனின் பரிதாப நிலை தென்படவே, உடனே இரதத்தை நிறுத்தச் சொல்லி இறங்கி நேரே அந்த சிறுவனிடம் சென்றார்கள்.

 

சிறுவனின் தோளில் கைவைத்து, தம்பி நீ இந்தக் குளிரில் எதை இந்த ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று அன்போடு கேட்டார். உடனே சிறுவன் குளிரிலிருந்து கால்களைக் காத்துக் கொள்ள இயேசப்பாகிட்ட ஒரு ஜோடி Shoe கேட்டிருக்கிறேன். அவர் அதை எனக்கு எப்படி தரப் போகிறார் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று நிச்சயத்தோடு பதிலளித்தான். இவனுக்குள் இருக்கிற அந்த உறுதியான விசுவாசத்தைக் கண்டு அந்த சீமாட்டி மிகவும் ஆச்சரியப்பட்டு, தன்னுடைய விசுவாச அளவை சோதித்துப் பார்த்து வெட்கமடைந்தாள். பின்பு அன்போடு சிறுவன் கையைப் பிடித்துக் கொண்டு கடைக்குள் சென்றாள். கடை வியாபாரிகள் அனைவரும் ஒரு செல்வ சீமாட்டி இப்படி கிழிந்த ஆடையுடன் உள்ள சிறுவனை அழைத்துக் கொண்டு வருகிறாரே என்று ஆச்சரியப்பட்டு, அவருக்கு உதவி செய்ய எல்லோரும் முன் வந்தார்கள். முதலில் அவர்களிடம் ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீரும் துண்டும் வாங்கி அவனை நாற்காலியில் உட்கார வைத்து அவனின் கால்களைக் கழுவி துடைத்து விட்டு புது Shoe - வை மாட்டி விட்டு பின்பு ஐந்து ஜோடி Shoe வாங்கி அவனுக்கு கொடுத்து புது ட்ரெஸ் மற்றும் குளிருக்கு தேவையான ஆடைகளும் வாங்கிக் கொடுத்து அவனுக்கு அணிந்து முத்தம் கொடுத்து விட்டு சென்றார்கள். சிறுவனுக்கோ, ஒரே சந்தோஷம். இயேசப்பாவுக்கு ரொம்ப நன்றி சொன்னான்.

 

என்ன குட்டீஸ் பார்த்தீங்களா, நீங்களும் அந்த குட்டிப் பையனைப் போல நான் ஜெபிப்பதற்கு இயேசப்பா நிச்சயமா பதில் தருவாங்க அப்படினு நம்பணும். அவர் மேலே விசுவாசம் வைக்கணும். அப்படி விசுவாசமா இருக்கும் போது நீங்க கேட்கிறதெல்லாம் பெற்றுக் கொள்ள முடியும். Ok வா.

- Mrs. சாராள் சுபாஷ்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş meritking meritking giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet holiganbet grandpashabet grandpashabet