Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  25-04-2021 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 25-Apr-2021

இன்றைய தியானம்(Tamil)  25-04-2021 (Kids Special)

யாவையும் செய்பவர் 

“கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்;…” – சங்கீதம் 138:8 

ஹய்யா, Sixஸர் அடிச்சிட்டான் Super என்று சத்தம் போட்டு ஜாலியா விளையாடிக் கொண்டிருந்தான் ராபர்ட். கிரிக்கெட் விளையாட்டு, boys க்கு ரொம்ப பிடிக்கும்தானே! சரணும், ராபர்ட்டும் பக்கத்து வீட்டு நண்பர்கள். சரண் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். ஞாயிறு பள்ளிக்கு ஆசையாக செல்வான். அப்பா வீட்டில் குடித்து விட்டு பிரச்சனை பண்ணிக் கொண்டேயிருப்பார். சரண் வீட்டில் சாப்பிடும்போது இரண்டு கை கூப்பி ஜெபம்பண்ணி விட்டுத்தான் சாப்பிடுவான். அப்பா, அம்மாவையும் அப்படியே ஜெபம் பண்ண சொல்லுவான். நீங்களும் சாப்பிடும்போது, தூங்க போவதற்கு முன்னாடி, விளையாடும்போது ஜெபிக்க பழகணும் சரியா. இந்த சரண் மறக்காம ஜெபிப்பான். இதையெல்லாம் கவனித்த அப்பா குடிப்பழக்கத்தையே விட்டுவிட்டார். இப்படி வீட்டிலும், வெளியிலும் நல்ல பிள்ளையென்று பெயர் வாங்கினான் சரண். 

ஒரு நாள் ராபர்ட்டும், சரணும் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அம்மா ராபர்ட்டை கூப்பிட்டு கடைக்கு போகச் சொன்னார்கள். அவனும் கடைக்கு போனதால சரண் வீட்டிற்கு போய் விட்டான். ராபர்ட் வந்து பார்த்தபோது அவனோட கிரிக்கெட் ballஐ காணவில்லை. நானும், சரணும் மட்டும் தானே விளையாடிக்கொண்டிருந்தோம் சரண்தான் என்னோட ball ஐ எடுத்து விட்டான் என்று எல்லார்கிட்டேயும் சொன்னான் ராபர்ட். இது சரணுக்கு ரொம்பவே கஷ்டமாயிருந்தது. அதிலிருந்து ராபர்ட், சரண் என்னோட ball யை திருடினதினால் அவனோடு பேசமாட்டேன் என்று சொல்லி விட்டான். Friends கிட்ட தெருவில் உள்ளவங்க எல்லார்கிட்டேயும் பொய்யான செய்தியை சொன்னான் ராபர்ட். சரணுக்கு அழுகை அழுகையாய் வந்தது. செய்யாத தவறை ஊரெல்லாம் சொல்லி விட்டானே! என்று சாப்பிடாமல் கூட அழுது கொண்டேயிருந்தான்.  அம்மா சொன்னாங்க பொறுமையா இரு உண்மை ஒருநாள் தெரியும். நாம இயேசப்பாகிட்ட ஜெபம் பண்ணுவோம் என்று ஆறுதல்படுத்தினாங்க. சரணும் அம்மாவும் சேர்ந்து ஜெபிக்க ஆரம்பித்தாங்க. ஜெபம் பண்ணி முடித்ததும் ராபர்ட் வேகமாக ஓடி வந்தான். சரண் Very sorry டா உன்னை தப்பா நினைச்சுட்டேன். எங்க வீட்டு நாய்க்குட்டி ballஐ எடுத்துக்கொண்டு போய் தோட்டத்தில் போட்டுள்ளது. இன்றைக்கு தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்ற போனேனா அப்போ தான் இந்த ball ஐ பார்த்தேன். என்னை மன்னிச்சிடுன்னு சொன்ன ராபர்ட்டை பார்த்து புன்னகைத்த சரண், ஆண்டவரே நீங்க எனக்காக கிரியை செய்ததற்காக நன்றி என்று சொன்னான். எப்பொழுதும் போல இருவரும் இணைந்து விளையாட ஆரம்பித்தார்கள். 

செல்ல குட்டிகளே! நீங்களும் கூட செய்யாத தவறுக்காக அழுது கொண்டிருக்கிறீங்களா? Don’t worry இயேசப்பா உங்க பக்கத்தில் இருந்து உங்களுக்கு உதவி செய்வார். அதைவிட்டு எதிர்த்து சண்டை போட்டா, சமாதானமே போயிடுமில்லையா? இதனால் ஜெபித்து பொறுமையோடிருந்தால், இயேசப்பாவே உனக்காக வழக்காடுவாங்க, யாவையும் செய்து முடிப்பாங்க. 
Ok வா. 
-    Mrs. ஜீவா விஜய்

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet matbet giriş holiganbet holiganbet güncel holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet grandpashabet holiganbet grandpashabet grandpashabet grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş grandpashabet grandpashabet grandpashabet casinolevant grandpashabet meritking meritking giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş