Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 24.08.2024
Share:

By Village Missionary Movement

Saturday, 24-Aug-2024

இன்றைய தியானம்(Tamil) 24.08.2024

 

மோட்சப் பயணம்

 

"...உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்;..." - ஏசாயா 52:1 

 

என்னது! அலங்கார வஸ்திரங்களை நான் எதற்காக உடுத்திக் கொள்ள வேண்டும் என்கிற கேள்வி உங்கள் மனதில் தோன்றலாம். சொல்லுகிறேன் கவனமாகக் கேளுங்கள். மோட்சப் பயணம் என்னும் வாழ்க்கை பயணத்தில் மணவாளனை சந்திக்க ஆயத்தமாகும் நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் மணவாட்டிகளே! அனுதின வாழ்வில் நம் சரீரத்தை அலங்கரிக்கிறோம். ஆனால் நமது மணவாளன் உள்ளான வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பார்க்கிறார். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என பார்ப்போம்.

 

புதிய மனிதனைத் தரித்துக் கொள்ளுங்கள்:   

அந்தப்படி முந்தின நடக்கைக்குரிய மோசம் போக்கும் இச்சைகளாலே கெட்டுப் போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்து போட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி மெய்யான நீதியிலும், பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொள்ளுங்கள். (எபேசியர் 4:22-24) நம்மை நாமே சற்று ஆராய்ந்து பார்ப்போம், நான் புதிய மனிதனா, பழைய மனிதனா என்று. இந்த வசனத்தின் மூலம் உங்களை நீங்களே சீர்தூக்கிப் பாருங்கள். இன்றைய வேதபகுதியில் 17 விதமான மாம்சத்தின் கிரியைகளை வாசித்தோம். இந்த பாவங்கள் எல்லாம் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, புதிய மனிதனுக்குரிய ஆவியின் கனிகளைக் கொடுப்போம்.

 

வஸ்திரங்களைக் காத்துக்கொள்:

இதோ, திருடனைப் போல் வருகிறேன் தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக் கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக் கொள்ளுகிறவன் பாக்கியவான். (வெளி. 16:15) பொதுவாக நிர்வாணம் என்பது பாவத்தைக் குறிக்கிறது. பிசாசானவன் துணிகர பாவத்தினால் குற்ற உணர்வினால் நம்மை நிர்வாணப்படுத்திவிடாதபடிக்கு நம் இரட்சிப்பின் வஸ்திரத்தைக் காத்துக் கொள்ள வேண்டும். நம் தேசத்திலும் மணிப்பூர் மாநிலத்தில் தேவ பிள்ளைகள் நிர்வாணப்படுத்தப்பட்டனர். ஆனால் அவர்களுடைய பதில் எங்கள் சரீரப் பிரகாரமான ஆடைகளை இழந்தாலும் ஆவிக்குரிய வஸ்திரங்களை இழக்கவில்லை, காத்துக் கொண்டோம்.

 

பரம வாசஸ்தலத்தைத் தரித்துக் கொள்ளுங்கள்:

பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்து போனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். ஏனெனில் இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக் கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்.

 

பிரியமானவர்களே! நம்முடைய வாஞ்சை எதின் மேல் உள்ளது. பூமியின் மீதுள்ள மாயையான மனிதர்களிடத்திலா?ஆஸ்தி, உயர்வு, ஆசைகள் என்னும் பல உலக விருப்பங்கள் மேலோங்கி நிற்கிறதா? இல்லை தேவனுக்கு பிரியமானதை செய்து நமது மோட்சப்பயணத்தில் கவனமாய் செல்கிறவர்களாய் இருக்கிறோமா?

- Sis. செல்வமேரி டேனியல்

ஜெபக்குறிப்பு:

அனைத்து பணித்தளங்களிலும் சங்கிலி தொடர் ஜெபம் தடையின்றி நடைபெற ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking perabet casibom holiganbet galabet casibom perabet perabet giriş padişahbet padişahbet giriş grandpashabet kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet casinomilyon jojobet palacebet sonbahis wbahis grandpashabet betgit betsalvador matbet meritking