Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 28.08.2024
Share:

By Village Missionary Movement

Wednesday, 28-Aug-2024

இன்றைய தியானம்(Tamil) 28.08.2024

 

மனரம்மியமாக இருப்பதற்கான ஜெபம்

 

"…நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்" - பிலிப்பியர் 4:11

 

பரிசுத்தமுள்ள எங்கள் அன்பின் தேவனே! நீர் மனிதனுக்கு கொடுத்த அநேக குணாதிசயங்களில் மனரம்மியமும் ஒன்று. அதற்காக உமக்கு கோடான கோடி நன்றி செலுத்துகிறோம். பவுல் தனது வாழ்வில் எப்போதும் மனரம்மியமாக இருக்கக் கற்றுக் கொண்டதாக கூறுகிறார். ஆனால் உம்முடைய துணையின்றி எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. யோபுவின் வாழ்வில் அநேக பிரச்சினைகளின் வழியாக அவர் கடந்து வந்த போதும், அவர் எவ்விதத் தடுமாற்றமும் இன்றி கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் எனக் கூறினார். தேவன் நமக்கு எதைக் கொடுத்தாலும் நாம் அதை மிக மனரம்மியத்தோடு பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அவர் வாழ்விலிருந்து கற்றுக் கொள்கிறோம். மேலும் நாங்கள் எப்போதும், எல்லாவற்றிலும் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும் என பவுல் அப்போஸ்தலன் எங்களுக்கு கற்றுக் கொடுக்கிறார். இதுவே உம்முடைய சித்தம் என்பதையும் நாங்கள் அறிந்து கொள்கிறோம். நாங்கள் எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக வாழவே விரும்புகிறீர்.   

 

இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ உமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை எங்களுக்குக் கட்டாயம் தேவை. அவர் எங்களை பலப்படுத்தினால் மட்டுமே எங்களால் அனைத்தையும் செய்ய முடியும். எல்லா சூழ்நிலைகளிலும் எங்களை பலப்படுத்துகிறவர் அவர் மட்டுமே. பரிசுத்த ஆவியானவர் எப்போதும் எங்களை ஆளுகை செய்ய வேண்டும்.

 

அப். பவுலுக்குக் கூட ஒரு முள் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதோடு உமது கிருபையையும் நீர் அவருக்குக் கொடுத்திருந்தீர். அதன் மூலமாக அவர் உம்மிடமிருந்து உமது பிரசன்னத்தையும், தயவையும், வல்லமையையும் பெற்றுக் கொண்டார். எங்கள் வாழ்வில் எங்களுக்கு வரும் கஷ்டங்கள், பாரங்கள், கண்ணீர், எதிர்ப்புகள் இவை அனைத்தும் இறுதியில் தேவ பிள்ளைகளாகிய எங்களுக்கு நன்மையாகவே முடியப் பண்ணுகிறீர் என அறிவோம். 

 

வேதம் அநேக உவமைகளை எங்களுக்குப் போதிக்கிறது. பவுல் அப்போஸ்தலனை சிறையில் அடைத்த போது, மனரம்மியமாக உம்மைத் துதித்துப் பாடும் கிருபையை நீர் அவருக்குத் தந்தீர். பேதுரு சிறையில் எவ்வித கவலையுமின்றி உறங்க கிருபை கொடுத்தீர். கப்பல் சேதம் வந்த போது பவுல் தான் மனரம்மியமாக இருந்ததுடன் உடன் இருந்தவர்களையும் உற்சாகமூட்டி, பாதுகாப்பாக கரைவந்து சேர கிருபை பாராட்டினார். யோசேப்பு எல்லா சூழ்நிலைகளிலும் மனரம்மியத்தோடு கூட செயல்பட்டார். அவரோடு உமது கிருபை இருந்தது. இறுதியில் நீர் அவரை உயர்த்திக் கனப்படுத்தினீர். நாங்களும் இப்படிப்பட்ட மனரம்மியத்தோடு வாழ நீர் எங்களுக்கு பலன் கொடுக்கும்படி வேண்டுகிறோம். இயேசு கிறிஸ்துவின் திருநாமத்தில் கேட்டுக்கொள்கிறோம் எங்கள் அன்பின் தகப்பனே! ஆமென்.

- K .M. பிரசாத்

 

ஜெபக்குறிப்பு: 

மோட்சப்பயணம் பத்திரிக்கை வாசிக்கும் நபர்கள் தேவனுக்காக செயல்படுகிறவர்களாக எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet matbet giriş holiganbet holiganbet güncel holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet grandpashabet holiganbet grandpashabet grandpashabet grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş grandpashabet grandpashabet grandpashabet casinolevant grandpashabet meritking meritking giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş