Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 29.08.2024
Share:

By Village Missionary Movement

Thursday, 29-Aug-2024

இன்றைய தியானம்(Tamil) 29.08.2024

 

கலந்து விடாதிருக்க கவனமாயிருங்கள்

 

"...உங்களை மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்த உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே” - லேவியராகமம் 20:24

 

ஒரு காட்டில் தவளையும், எலியும் நண்பர்களாக இருந்தன. அவர்களுடைய Friendship எந்த அளவுக்கு என்றால், கயிறை எடுத்து ஒரு பக்கம் தவளையும் மறுபக்கம் எலியும் முடிச்சு போட்டுக் கொண்டு காடெங்கும் சுற்றித் திரியும் அளவுக்கு! மழைக்காலம் வந்தது. காட்டில் உள்ள குளங்கள் எல்லாம் நிரம்பினது. தண்ணீரைக் கண்டதும் தவளை தன் நண்பனை மறந்து குளத்தில் குதித்து அங்குமிங்கும் சுற்றி நீந்தியது. ஆனால் மறுபக்கம் கட்டப்பட்டிருந்த எலியின் நிலையோ பரிதாபமானது. மூச்சுத் திணறி முடிவில் செத்தே போய்விட்டது. செத்த எலியை கண்ட ஒரு பருந்து எலியை தூக்கும் போது கூடவே தவளையும் அதற்கு உணவாய் மாறினது. தகாத நட்புறவினால் ஏற்பட்ட விளைவுதான் இது.                   

 

இந்த உலகத்தில் நாம் வாழ்ந்தாலும், நாம் இந்த உலகத்திற்கு உரியவர்கள் அல்ல, பிரித்தெடுக்கப்பட்டவர்கள். நாம் என்றைக்கு இயேசுவுடைய இரத்தத்தால் கழுவப்பட்டோமோ அன்று உலகத்தாரை விட்டு வேறு பிரிந்த வாழ்விற்குள் வந்து விட்டோம். எப்படியும் வாழுங்கள் என்று கர்த்தர் விட்டு விடாமல் அவருடைய தீர்மானத்திற்குள், அன்பிற்குள் நம்மை கொண்டு வந்தார். நாம் கர்த்தருடைய ஜனமாக அவருடைய நாம மகிமைக்காக வேறு பிரிக்கப்பட்ட வாழ்க்கை வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம்.

 

இன்றைய நாளின் வேத பகுதியில், ஆண்டவர் ஆபிரகாமின் வாழ்வில் செய்த வேறு பிரித்தலை வாசித்தோம். எவற்றில் இருந்தெல்லாம் பிரிக்கிறார், முதலாவது அவருடைய தேசத்திலிருந்து, இரண்டாவது அவருடைய இனத்திலிருந்து, மூன்றாவது தகப்பன் வீட்டில் இருந்து. இதற்கு காரணம் என்ன? அந்த சமுதாயம் அவரைக் கறைபடுத்தக் கூடும். ஆகவே நீ பாபிலோன் தேசத்தில் இருந்து வேறு பிரிக்கப்பட்டவனாய் வெளியே வரவேண்டும் என்கிறார். தேவனுடைய பிள்ளைகள் உலகத்தோடு ஒத்து போய் விடக்கூடாது. தானியேலும், யோசேப்பும் வேறு பிரிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து கர்த்தர் தந்த ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டனர்.                  

 

பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! இதை வாசித்துக் கொண்டிருக்கின்ற நீங்களும் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். நாம் வாழும் இந்த நாட்களில் ஆத்துமாவை கறைபடுத்தக் கூடிய காரியங்கள் நம்மைச் சுற்றிலும் அனேகம் உண்டு. இந்த சமுதாயத்தில் காணப்படுகின்ற அந்நிய காரியங்கள், பிசாசின் கண்ணிகள், மாயைகள் போன்றவற்றில் சிக்கிக் கொள்ளாதபடி வேறு பிரிக்கப்பட்ட ஒரு வாழ்வை கர்த்தர் நம்மில் காண விரும்புகின்றார். இதை உணர்ந்தவர்களாய் இன்றே நம் வாழ்வை இயேசுவுக்கென்று சாட்சியாய் வாழும்படி கண்ணீரோடு அர்ப்பணிப்போம். தேவன் தருகின்ற ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள ஆயத்தமாவோம்.  

- Mrs. ஜெபக்கனி சேகர்

 

ஜெபக்குறிப்பு: 

பசித்தோர்க்கு உணவளிக்கும் திட்டத்தில் பயனடைபவர்கள் ஆண்டவரின் அன்பை ருசிக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al deneme bonusu deneme bonusu veren siteler online casino online casino perabet perabet giriş perabet perabet giriş perabet perabet giriş perabet güncel giriş jojobet jojobet giriş jojobet güncel giriş Holiganbet Holiganbet Giriş Holiganbet Güncel Giriş Superbetin Superbetin Giriş Superbetin Güncel Giriş pashagaming pashagaming giriş pashagaming güncel giriş betcio Betcio Giriş betcio güncel giriş atlasbet atlasbet giriş atlasbet güncel giriş Piabet Piabet Giriş Ngsbahis Ngsbahis Giriş İnterbahis İnterbahis Giriş Klasbahis Klasbahis Giriş Coinbar Coinbar Giriş Limanbet Limanbet Giriş İmajbet İmajbet Giriş Restbet Restbet Giriş Matbet Matbet Giriş Jasminbet Jasminbet Giriş Belugabahis Belugabahis Giriş Online casino nz Best payout online casino nz matbet jojobet jojobet giriş jojobet güncel giriş bahsegel bahsegel bahsegel matbet romabet lunabet