By Village Missionary Movement
Tuesday, 22-Oct-2024இன்றைய தியானம்(Tamil) 22.10.2024
தவறான ஒரு சிக்னல்
"…நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை…" - யோசுவா 1:5
1962 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி சரியாக காலை 9:47 மணியளவில் விண்வெளி ஊர்தி கொழுந்து விட்டு எரியும் நெருப்பின் நடுவில் புகையை கக்கிக்கொண்டு ஜான் கிலன் என்ற விண்வெளி ஆராய்ச்சியாளரை ஏந்திக் கொண்டு கிளம்பியது. அந்த ஊர்தியில் அவர் மட்டும் தனித்து பயணம் செய்தார்.
அந்த விண்கலம் பூமியை மூன்று முறை சுற்றி நான்கு மணி நேரத்தில் 80 ஆயிரம் மைல்களை கடந்து சென்று படங்களை எடுத்துவிட்டு பூமிக்கு திரும்ப ஆரம்பித்தது. அந்த ஊர்தி கீழே வந்து கொண்டிருந்தபோது, அதை கண்ட்ரோல் செய்து கொண்டிருந்த ஆராய்ச்சியாளருக்கு ஒரு எச்சரிக்கை வந்தது. அதன்படி "விண்கலத்திலிருந்து அக்கினி கேடகம் தனியே கழன்று கொண்டிருக்கிறது" என்று! நிமிடங்கள் வேகமாக கடந்து சென்று கொண்டிருந்தது. நாசா விஞ்ஞானிகள் என்ன செய்வது என்று அறியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். ஐந்து நிமிடங்கள் கழித்து, ஜானின் குரல் அவர்களுடைய ரேடியோவில் கேட்டது. ஜான் பூமியை நோக்கி பத்திரமாக வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அங்கிருந்தவர்களின் மத்தியில் ஏற்பட்ட சந்தோசம் அளவில்லாதது. பின்னர் தான் தெரிந்தது, அது ஒரு தவறான சிக்னல் (பிளாக் ஹோல்) என்று. ஜான் பத்திரமாக தரையிறங்கினார்.
வேதத்தில் யோசேப்பைக் குறித்தும் சகோதரர்கள் இப்படிதான் நினைத்தார்கள். இவன் கதை முடிந்தது என்று! யோசேப்பும் அப்படிப்பட்ட ஒரு நிலையில் தான் இருந்தார். அவருடைய சகோதரர்கள் அவரைத் தூக்கி ஒரு குழிக்குள் போட்டு விட்டார்கள். யாருடனும் அவருக்கு தொடர்பு இல்லாமல் போய்விட்டது. பின்னர் அவரை முன்பின் தெரியாத வியாபாரிகளிடம் விற்று போட்டார்கள். அவர் அநேக பாடுகளினூடே சென்றார்.
ஆனால் ஒரு நாள் வந்தது. கர்த்தர் அவரை எல்லோருக்கும் மேலாக உயர்த்தினார். யோசேப்புக்கு எதிர்பாராத உயர்வு அவருடைய வாழ்க்கையில் வந்தது. ஒருவேளை நீங்களும் கடும்பாடுகளுக்கு நடுவில் சென்று கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் படும்பாடுகளை அறிவார் யாரும் இல்லையா? நீங்கள் கூப்பிடும் சத்தம் கர்த்தருக்கும் கேட்கவில்லை என்று நினைக்கிறீர்களோ? உங்கள் வாழ்க்கை உங்களையும் மீறிப் போய்க் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறீர்களோ? தேவன் என்னைக் கைவிட்டார் என்று நினைத்து கொண்டிருக்கிறீர்களோ? நம்முடைய தனிமை மற்றும் துன்பமான நேரங்களில் நம்மை விட்டு தேவன் தூரப்போனார் என்று நாம் நினைத்தாலும் “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை" என்று சொன்ன தேவன் நம்மை விட்டு விலகாமல் நம் கூடவே தான் இருக்கிறார். ஆமென்.
- C. பால்ஜெபஸ்டின் ராஜ்
ஜெபக்குறிப்பு:
நம் வாலிபர் முகாமில் கலந்து கொண்ட வாலிபர்கள் எடுத்த தீர்மானத்தில் உறுதியாய் நிலைத்திருக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864