Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 02.11.2024 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 03-Nov-2024

இன்றைய தியானம்(Tamil) 02.11.2024 (Kids Special)

 

எது முக்கியம்

 

"பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்;” - மத்தேயு 6:20

 

Hello செல்ல குட்டிகளே! நாட்கள் எவ்வளவு வேகமாக ஓடுகிறது பார்த்தீர்களா? காலாண்டு தேர்வு முடிந்தது போல இருக்கு, அதுக்குள்ள அரையாண்டு தேர்வு வரப்போகுது அப்படித்தானே குட்டீஸ், நல்லா படிங்க Time ஐ வேஸ்ட் பண்ணாதீங்க. ஏன் தெரியுமா? காலம் பொன் போன்றது. தங்கம்னா எல்லாருக்கும் பிடிக்கும். ஒரு கம்மல் வாங்க எவ்வளவு பணம் கொடுக்க வேண்டியதாய் இருக்கிறது. தங்கம் தான் ரொம்ப முக்கியம் என்று தான் நினைக்கிறோம். ஆனால் எது முக்கியம் தெரியுமா? அதைப்பற்றி தான் இன்றைக்கு ஒரு கதை கேட்கப் போகிறோம். ஒரு பெரியவர் ரோட்டில் நடந்து போய்க் கொண்டிருந்த போது சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண் கழுத்தில் இருந்த செயினை அறுத்துக் கொண்டு ஒருவன் ஓடிவிட்டான். அந்தப் பெண் கீழே விழுந்து அடிபட்டு கிடந்தாள். ஒரு தங்கச் செயினை விட உயிர் மலிவாக போய்விட்டதே என எண்ணிக் கொண்டே கீழே விழுந்த பெண்ணுக்கு உதவி செய்து விட்டு, நடந்து போகும் போது, சிறுவயதில் நடந்த சம்பவங்களை நினைத்து பார்த்துக் கொண்டே சென்றார்.  

 

அவர் நண்பனோடு சண்டே கிளாஸ்க்கு செல்வதுண்டு. அங்கு பரலோகம், நரகம் என்பதைப் பற்றி சொல்லிக் கொடுத்ததை நினைத்துப் பார்த்தார். இயேசுவை குறித்து கேள்விப்பட்டும், ஏற்றுக்கொள்ளவில்லை. இப்பொழுது பெரிய பணக்காரராக கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு சொந்தக்காரராக முதிர்வயதுள்ளவரானார். ஒருநாள் முதியவர் எல்லா சொத்துக்களையும் விற்று, நிறைய தங்க நாணயங்களை சூட்கேஸ் நிறைய எடுத்து வைத்து நான் மரித்து பரலோகம் செல்லும் போது, சும்மா போகக்கூடாது இந்த தங்கத்தை எல்லாம் கொண்டு போக வேண்டுமென்று நினைத்தார். அதுபோலவே பரலோகம் சென்றார். தேவதூதன் அவரைப் பார்த்து சூட்கேஸ்ல என்ன இருக்குதுன்னு கேட்டார். இதற்குள் ரொம்ப விலையுயர்ந்த தங்ககாசு இருக்கிறது என சந்தோஷத்தோடு சொன்னார். உடனே தேவதூதன் ஐயோ இதையெல்லாம் இங்கே ரோடு போடுவதற்காக தான் பயன்படுத்துவோம். மற்றவர்களுக்கு நீ செய்த நன்மைகள், கண்ணீரோடு ஜெபித்த ஜெபங்கள், சுவிசேஷத்தால் ஆத்துமா ஆதாயம் செய்வது மட்டுமே பரலோகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று சொன்னதும் கண்ணை திறந்து பார்த்தார். ஆனால் அது கனவு.  

 

நல்ல வேளை இப்போதாவது பரலோகம் எவ்வளவு முக்கியம் என்பதை தெரிந்து கொண்டோமே! என்று தனக்கு உண்டானதை விற்று மற்றவர்களுக்கு உதவி செய்தார். பக்கத்தில் உள்ளவர்களுக்கு இயேசுவைப் பற்றியும் பரலோகத்தை பற்றியும் சொல்ல ஆரம்பித்தார். அன்பான தம்பி, தங்கச்சி அந்த வயதான தாத்தா மூலமா பரலோகம் எவ்வளவு முக்கியம், அங்க போக நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நல்லா தெரிந்து கொண்டோமல்லவா? நீங்க என்ன செய்யப் போறீங்க ஜீசஸ்க்காக? ஏதாவது செய்து பரலோகத்தில் பொக்கிஷங்களை சேர்த்து வையுங்கள். அங்கே பாதுகாப்பாக இருக்கும் o.k. தானே!   

- Mrs. தெபோராள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş matbet giriş matbet matbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet jojobet jojobet jojobet jojobet betgit radissonbet grandpashabet romabet nesinecasino grandpashabet casibom