Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 06.11.2024 (Gospel Special)
Share:

By Village Missionary Movement

Wednesday, 06-Nov-2024

இன்றைய தியானம்(Tamil) 06.11.2024 (Gospel Special)

 

யாரையும் பயன்படுத்த முடியும்

 

"…ஞானிகளை வெட்கப்படுத்தி, அவர்கள் அறிவைப் பைத்தியமாகப் பண்ணுகிறவர்" - ஏசாயா 44:25

 

D.L மூடி பிரசங்கியார் தனது பிரசங்கத்தை முடித்து மேடையை விட்டு கீழே இறங்கினார். அப்பொழுது ஒரு ஆங்கிலேய விரிவுரையாளர் அவரைச் சந்தித்து, உங்களது பிரசங்கம் மிக அருமையாக இருக்கிறது. ஆனால் உங்கள் English Grammar தான் மிகவும் மோசமாக உள்ளது என்றாராம். உடனே D.L மூடி சிரித்துக் கொண்டே நான் என்னுடைய மோசமான ஆங்கிலத்தை வைத்து இத்தனை பேரை ஆண்டவருக்குள் நடத்தி இருக்கிறேன். நல்ல ஆங்கிலம் பேச தெரிந்த நீங்கள் எத்தனை பேரை ஆண்டவருக்குள் நடத்தினீர்கள் என்று கேட்டார். உடனே தலைகவிழ்ந்தவாரே சென்றுவிட்டார் அவர். D.L மூடி மரித்தவுடன் அவர் மூலமாய் எத்தனை பேர் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள் என்று ஒரு கடிதம் அனுப்பும்படி விளம்பரம் செய்து இருந்தார்கள். சுமார் ஐந்து லட்சம் பேர் தாங்கள் னு.டு மூடி பிரசங்கியாரின் பிரசங்கத்தின் மூலம் ஆசீர்வதிக்கப்பட்டதாக, இரட்சிக்கப்பட்டதாக கடிதம் எழுதியிருந்தார்கள்.

 

வேதத்திலும் இஸ்ரவேல் ஜனங்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும்படி மோசேயை தேவன் அழைத்த போது நான் திக்குவாயும், மந்தநாவும் உள்ளவன் என்று காரணம் சொன்னாலும், வாயை உண்டாக்கினவர் நானல்லவா என்று தேவன் அவரை உற்சாகப்படுத்தி மோசேயைப் பயன்படுத்தினார். அதேபோலதான் எரேமியாவும் கூறுகிறார், எனக்கு பேசத் தெரியாது. நான் சிறுபிள்ளை என்கிறார். ஆண்டவர் கூறும் பதில் என்ன தெரியுமா? நீ சிறுபிள்ளை என்று சொல்லாதே. நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய் நான் கட்டளையிடுகிறவைகளை பேசு. அவர்களுக்கு பயப்படாதே என்று கூறி ஆண்டவர் தனது கரத்தால் எரேமியாவின் வாயைத் தொட்டு என் வார்த்தையை உன் வாயிலே வைத்தேன் என்றார்.

 

இதை வாசிக்கின்ற அன்பான சகோதரியே, சகோதரனே! நீங்களும் கூட உங்கள் குடும்பத்தின் ஏழ்மை, இயலாமை, நான்தான் என் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பொறுப்போ எனக்கு படிப்பு குறை, திறமை இல்லை, பேச தெரியாது, என்னால் என்ன செய்ய முடியும் என்றோ யோசித்துக் கொண்டிருக்கலாம். மோசேயை, எரேமியாவைப் பயன்படுத்திய தேவன் உங்களையும் பயன்படுத்த ஆயத்தமாயிருக்கிறார். அவரை நம்பி அவர் கையில் ஒப்பு கொடுக்கும்போது மோசேயை போன்று இலட்சங்களுக்கு ஆசீர்வாதமாக உங்களைப் பயன்படுத்த முடியும். அவர் ஆசீர்வதிக்க, பயன்படுத்த மனிதர்களைத் தேடிக் கொண்டிருக்கிறார். ஆசீர்வதிக்கப்பட, தேவனுக்காக பயன்பட நீங்கள் ஆயத்தமா?

- Bro. அழகர்சாமி

 

ஜெபக்குறிப்பு:

ஒரு கிராமத்தில் சுவிசேஷம் அறிவிக்க ஆயிரம் ரூபாய் கொடுக்கும் மக்கள் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş matbet giriş matbet matbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet jojobet jojobet jojobet jojobet betgit radissonbet grandpashabet romabet nesinecasino grandpashabet casibom