Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 07.11.2024 (Gospel Special)
Share:

By Village Missionary Movement

Thursday, 07-Nov-2024

இன்றைய தியானம்(Tamil) 07.11.2024 (Gospel Special)

 

மனுஷரின் தயவு

 

"இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்" - லூக்கா 2:52

 

54 வருடங்கள் சிறந்த மிஷனெரியாக ஸ்விட்சர்லாந்தில் பணி செய்த 'மாலாமொய்' என்பவர் மக்களோடு தன் வாழ்வை இணைத்துக் கொண்டவர். பின்னர் ஆப்பிரிக்க நாட்டிலும் பணிசெய்தார் இவர், மிஷனெரிகளுள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவர். ஏன் இவருக்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம்? ஏனென்றால், இவர் எங்கெல்லாம் சுவிசேஷத்தைச் சுமந்து செல்கிறாரோ அங்கெல்லாம் அந்தந்த மக்களோடு கலந்துவிடுவார். செய்த பணியிலே அர்ப்பணிப்பும், ஆனந்தமும் கண்டார். எந்தப் பணிக்களத்தில் பணி செய்தாலும் அம்மக்களோடு நல்ல ஐக்கியத்தை வைத்துக் கொண்டார். இந்த காரியங்கள் எல்லாம் இவருடைய சுவிசேஷ பணிக்கு மிகவும் உறுதுணையாக அமைந்தது. இதற்கு இன்னும் ஒரு மிக முக்கிய காரணமும் உண்டு. அதென்னவென்றால் இவருக்குக் கிடைத்த “மனுஷர் தயவு” தான். ஆப்பிரிக்க நாட்டிலும் டோரிக்கா என்ற பெண்மணியின் உதவியுடன் தேசத்தின் பல பாகங்களுக்கு சுவிசேஷத்தை சுமந்து சென்றார். ஆப்பிரிக்க தலைவர்களோடும் நல்ல ஐக்கியத்தை உருவாக்கிக் கொண்டார். அங்கே ‘பெத்தேல் நிலையம்’ என்ற மிஷனெரித் தளத்தையும் உருவாக்கினார்.   

 

இயேசு கிறிஸ்து பிறந்து வளரும்போதே அவருக்கு மனுஷர் தயவு கிடைத்தது. ஊழியம் செய்த போதும் மத்தேயு என்ற ஆயக்காரர், கானானியனாகிய சீமோன், மீனவரான பேதுரு என எல்லாரும் அவர் பின் சென்றனர். இவர்களெல்லாரும் இயேசுவின் சீஷர்களாகவும் இருந்தனர். ஆயக்காரர், பரிசேயர் வீடுகளிலும் சென்று உபதேசித்தார். அவர்கள் தங்கள் வீட்டிற்கு இயேசுவை அழைக்குமளவு மனதுள்ளவர்களாக இருந்தனர். மேலும் யூதருக்கு அருவருப்பானவர்களாக இருந்த சமாரியா தேசத்திலும் சுவிசேஷம் அறிவித்தார். அவர்கள் அவரை அன்போடு ஏற்றுக்கொண்டனர். இதே போல நீங்களும் யாருடனும் பழகும் சுபாவம் உள்ளவர்களா? உங்களுடன் பேசும் எந்த மனிதர்களையும் நண்பர்களாக மாற்றுபவர்களா? அநேக நண்பர்கள் உங்களுக்கு உண்டா? அப்படியானால் கர்த்தர் தான் இந்த கிருபையை உங்களுக்கு கட்டளையிட்டிருக்கிறார். எனவே காரியத்தை அவரே வாய்க்கச் செய்வார். தைரியமாய் அவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவியுங்கள். மனுஷ தயவு, ஒத்தாசைகள் கிடைக்கும்போது இது உங்களுக்கு தேவன் தந்த வாய்ப்பாக பயன்படுத்தி சுவிசேஷம் சொல்லுங்கள்.

 

அன்பான தேவபிள்ளைகளே! நாமும் கூட அந்தந்த இடத்தில் உள்ள மனிதர்களின் துணையோடும், மனுஷ தயவோடும் சுவிசேஷத்தை அறிவித்து ஜனங்களை ஆதாயம் செய்யலாமே! சுவிசேஷப் பணிக்கு செல்லும் இடங்களையும், கலாச்சாரங்களையும் கருத்தில் கொண்டு, நம் மக்களோடு 

மக்களாகவே நாம் வாழ்ந்து காட்டி, கிறிஸ்துவின் அன்பை வார்த்தையிலும், வாழ்க்கையிலும், செயலிலும் காட்டி இனிவரும் நாட்களில் சுவிசேஷ பணி செய்வோமாக.

- Mrs. பிரிசில்லா தியோபிலஸ்

 

ஜெபக்குறிப்பு:

சுவிசேஷ முகாம்கள் நடத்த தங்கள் இல்லங்களைத் திறந்து கொடுப்போர் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş matbet giriş matbet matbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet jojobet jojobet jojobet jojobet betgit radissonbet grandpashabet romabet nesinecasino grandpashabet casibom