By Village Missionary Movement
Tuesday, 04-May-2021இன்றைய தியானம்(Tamil) 04-05-2021
மாஸ்க்! .... கட்டாயம்!
“...தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.” - எபேசியர் 6:11
இந்த முழு உலகமும் கொரோனாவோடு போராடிக்கொண்டிருக்கிறது. “மாஸ்க் அணிவது மிக முக்கியம்” என்ற வார்த்தைகள் கேட்காத மொபைல் ஃபோனே இல்லை. உலக வரலாற்றையே புரட்டிப் போட்ட இந்த கொரோனாவின் 2-வது அலை தற்போது உலகை அலைக்கழிக்கிறது. மருத்துவர்கள், அரசாங்கம் திரும்பத் திரும்ப வலியுறுத்தும் ஒரு காரியம் மாஸ்க் அணியுங்கள். அது நமக்கு பாதுகாப்பைத் தரும், நமக்கு அருகிலுள்ளவர்களுக்கும் பாதுகாப்பைத் தரும். ஒவ்வொரு நாளும், மற்றொரு நபருடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் போதும் சரி, வெளியிலே சென்றாலும் சரி மாஸ்க் அணிவது மிகமுக்கியம். கொரோனாவோடு போராட வேண்டுமென்றால் இதை நாம் செய்துதான் ஆக வேண்டும்.
பரிசுத்த வேதாகமம் மனுக்குலம் சந்திக்கும் ஒரு போராட்டத்தைக் குறித்து கூறுகிறது. அது வான மண்டலத்திலுள்ள சேனையோடுள்ள போராட்டம். இது ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் எதிர்கொள்ள வேண்டிய போராட்டம் பிசாசின் தந்திரங்களோடு நாம் எதிர்த்து நிற்க வேண்டிய காலம் இது. இந்த ஆவிக்குரிய போராட்டத்தில் நாம் நம்மையும் பாதுகாக்க வேண்டும். அதற்கு நாம் சத்தியம் என்னும் கச்சையைக் கட்டி, ஆயத்தம் என்னும் பாதரட்சையை போட்டு, விசுவாசம் என்னும் கேடகத்தை பிடித்து, இரட்சணியம் என்னும் தலைச்சீராவையும், தேவ வசனம் என்னும் ஆவியின் பட்டயமாகிய தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொண்டு விழித்திருந்து ஜெபிக்க வேண்டும். அப்போது நாம் பாதுகாக்கப்படுவோம்.
இதை வாசிக்கின்ற நண்பர்களே! கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை விடவும், நமக்குள்ளாக இருக்கும் இந்த போராட்டம் மிகவும் முக்கியம். இதிலே நாம் தோற்றுவிட்டால் வாழ்வில் சமாதானம், நிம்மதி போன்ற காரியங்களை தவற விட்டுவிடுவோம். மாஸ்க் அணிவது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் மேற்கண்ட காரியங்களை நாம் அனுதினமும் அணிய வேண்டும். நம் மாம்சீக மனிதனை பாதுகாக்க மாஸ்க் அணிகிறோம்; ஆவிக்குரிய மனிதனை பாதுகாக்க சர்வாயுதவர்க்கத்தை அணிந்து பிசாசின் தந்திரங்களோடும் அதன் சேனைகளோடும் ஜெபத்திலே போரிடுவோம். வெற்றி நிச்சயம்!
- T. சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
நமது மிஷனெரிகளின் பிள்ளைகளுக்கான கல்வி நிதி தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250