Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 21.11.2024 (Gospel Special)
Share:

By Village Missionary Movement

Thursday, 21-Nov-2024

இன்றைய தியானம்(Tamil) 21.11.2024 (Gospel Special)

 

தாமதம்

 

"…இப்பொழுதே இரட்சணியநாள்" - 2 கொரிந்தியர் 6:2

 

இன்று சுவிசேஷத்திற்கு திறந்த வாசல் இருக்கிறது. இந்த கடைசி காலத்தில் தீவிரமாய் பணி செய்தால் தேசத்தை சுதந்தரித்துக் கொள்ளலாம். ஆனால் கிறிஸ்தவர்கள் சுவிசேஷம் சொல்லும் படியான வாசல்கள் அடைப்பட்டு விட்டது என்கிறார்கள். அன்று கானான் தேசத்தை வேவு பார்த்தவர்கள் கூறியது போலவே, பலர் கூறுகிறார்கள். யோசுவா, காலேப் போன்ற சொற்ப ஊழியர்களே விசுவாசத்தோடு பரந்துவிரிந்த பாரத தேசத்தில் ஊழியம் செய்கிறார்கள்.

      

இன்று ஜனங்களின் நிலை எப்படி இருக்கிறதென்றால் சுவிசேஷம் கேட்டு அதை உண்மை என்று உணர்கிறார்கள். பின் சில காலம் அந்தரங்க கிறிஸ்தவர்களாகவே இருக்க முடிவு செய்து, ஞானஸ்நானம் எடுப்பதில் தாமதிக்கிறார்கள். திருச்சபை ஆராதனையில் பங்கு கொள்ள பயப்படுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையால் ஆத்தும இரட்சிப்பில்லாமல் பின்மாற்றமடைந்து செல்லும் கூட்டம் ஏராளமாகியுள்ளது. ஆம், ஜனங்களிடத்தில் காணப்படும் தாமதமும், ஊழியர்களிடத்தில் காணப்படும் மந்தநிலையும் எழுப்புதலுக்கு தடையாகவே உள்ளது.

         

ஆடம்பர ஹோட்டலில் நடனமாடும் பெண் ஒருவர், தன் வாழ்வில் சமாதானம் இன்றி கிறிஸ்தவ கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள சென்றாள். அங்கு அவருக்கு பூரண சமாதானம் கிடைத்தது. ஆனால் அவள் நடனம் ஆடுவதால் வரும் வசதி வாய்ப்பைத் தவறவிட மனமற்றவளாய் ஓரளவுக்கு பணம், வசதியைப் பெருக்கிக் கொண்டு, இயேசுவுக்கு பணியாற்றப் போவதாக தனது டைரியில் எழுதினாள். நீண்ட நாட்களுக்குப் பின் தனது டைரியில் எழுதியது அவளுக்கு ஞாபகத்திற்கு வந்தது. ஆனால் உலக ஆசைப்பற்று அவளை விட வில்லை. காலம் செல்லச் செல்ல மனதில் ஏற்பட்ட போராட்டத்தினால், ஒவ்வொரு நாளும் "நாளை நான் இயேசுவுக்கு முழுமையாக ஒப்புக் கொடுப்பேன்" என்று எழுதி வந்தாள். எதிர்பாராத விதமாக ஒருநாள் அவள் சென்ற Car விபத்துக்குள்ளாகி மரணம் அடைந்தாள். டைரியை புரட்டிப் பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்தனர். இது அமெரிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒரு எழுச்சியை உண்டு பண்ணியது.

          

இன்றைய கிறிஸ்தவர்கள், தாங்கள் சீஷர்கள் என்று உணராமல், கிறிஸ்துவின் பணியை செய்யாமல், காலங்களை தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறார்கள். "சீஷர்கள் தான் கிறிஸ்தவர்கள்" (அப். 11:26) சுவிசேஷம் அறிவிப்பது அவர்கள் மேல் விழுந்த கடமை. பவுல் அப்போஸ்தலன் சுவிசேஷத்தை நான் பிரசிங்கியாதிருந்தால் எனக்கு ஐயோ என்று கூறுகிறார். (1கொரி 9:16). தங்கள் ஆஸ்திகளால் அநேக பெண்கள் கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்தார்கள். (லூக்கா 8:3) இன்று கிறிஸ்து நமக்காக செய்த நன்மைக்கு நன்றிக் கடனாக, அவருக்கு ஊழியம் செய்வது நம் மேல் விழுந்த கடமையாக இருக்கிறது அல்லவா? காலம் தாழ்த்தாமல் செயல்படுவோம். தேசம் தேவனை அறியட்டும்.

- Mrs. பாத்திமா செல்வராஜ்

 

ஜெபக்குறிப்பு: 

Children’s club அனைத்து தாலுகாக்களிலும் ஆரம்பிக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet grandpashabet holiganbet grandpashabet grandpashabet grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet meritking meritking giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş