Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 01.12.2024 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 01-Dec-2024

இன்றைய தியானம்(Tamil) 01.12.2024 (Kids Special)

 

இரண்டு வீடுகள்

 

"…திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்" - யாக்கோபு 1:22

 

கண்ணைக் கவரக்கூடிய அழகான இயற்கை காட்சிகளை பார்க்கும்போது, மனதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குந்தானே குட்டீஸ் . . . பச்சையான புல்வெளிகள், உயர்ந்த மலைகளுக்கு இடையே அழகான நீரோடைகள் பார்ப்பதற்கு சூப்பரா இருக்கும். Jesus இந்த உலகத்தில் வாழ்ந்த போது அவர் எங்கெல்லாம் போகிறாரோ அங்கெல்லாம் திரள் கூட்ட மக்கள் வந்து விடுவார்கள். இந்த மாதம் கூட இயேசு ராஜா பிறந்த நாளை கொண்டாடும் கிறிஸ்துமஸ் வரப்போகுது. அப்படித்தானே குட்டீஸ், உங்களுக்கெல்லாம் கொண்டாட்டமா? Super. சரி இன்றைக்கு இயேசப்பா சொன்ன ஒரு உவமையை கேட்போமா? உவமைனா எளிய உதாரணத்தோடு எல்லாருக்கும் புரியும் வகையில் சொல்வதுதான்.

 

Jesus சொன்னதைக் கேட்க ரொம்ப ஆசையோடு இருக்கீங்கன்னு நினைக்கிறேன் ok. ஒரு காலத்தில் ஒரே கிராமத்தில் வாழ்ந்த இரண்டு பேருக்கு புது வீடு கட்ட ஆசையாம். ஒருவன் நான் பாறை மீது வீடு கட்ட போறேன். அதுதான் உறுதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் என்று ரொம்ப கஷ்டப்பட்டு பாறையைத் தோண்டி ரொம்ப அழகான வீடு கட்டி முடித்தான். இன்னொரு மனிதன் நான் உன்னைப் போல கஷ்டப்பட்டு பாறையை உடைத்து வீடு கட்டப் போவதில்லை. நான் மணலின் மீது கட்டப் போகிறேன். அதுதான் ஈஸி சீக்கிரமாகவும் கட்டிவிடலாம் என்று நினைத்து மணல் மீது Super ரான வீட்டை கட்டி முடித்தான். இரண்டு பேரும் ரொம்ப சந்தோஷமாக வாழ்ந்தாங்க.

 திடீரென்று ஒரு நாள் மழை வந்தது, காற்று பலமாய் அடித்தது, பெரு வெள்ளம் வந்து மோதி அடித்தது. கற்பாறையில் கட்டின வீடு ஜம்முனு அசையாமல் நின்றது. ஆனா மணல் மீது கட்டப்பட்ட வீடோ, ஆட்டம் காண ஆரம்பித்தது. மணலை வெள்ளம் அரித்து சென்றதும், வீடு கொஞ்ச கொஞ்சமாய் இடிய ஆரம்பித்தது. ஐயோ, நான் என்ன செய்வேன் என்று சத்தம் கேட்டது அப்படியே வீடு முழுவதும் இடிந்து விழுந்து அழிந்து போனது.      

 

குட்டிச் செல்லங்களே, வாராவாரம் கதை கேட்கிறீங்கள்ல, அதன்படி வாழ்றீங்களா? இல்லேன்னா இனிமேலாவது இயேசப்பாவோட வார்த்தையைக் கேட்டு அதன்படி வாழ முடிவெடுங்க. அப்பத்தான் நீங்க கற்பாறையில் கட்டப்பட்ட வீட்டை போல உறுதியாய் இருப்பீங்க. ஒவ்வொரு வாரமும் வசனத்தை கேட்டும், ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில் விட்டு விட்டு, சாக்லேட்டையும்,Biscuits வாங்கி சாப்பிட்டு விட்டு மட்டும் வந்தீங்கன்னா உங்க வாழ்க்கை மணல் மீது கட்டப்பட்ட வீட்டை போல ஆகிவிடும், பிரச்சனைகள், கஷ்டங்கள், தோல்விகள் வரும்போது சோர்ந்து விழுந்திடுவீங்க, நீங்க ஜம்முனு நிலைத்திருக்கத்தானே ஆசைப்படுறீங்க. O.k முழங்கால் போடுங்க ஜெபிக்கலாம்.

   

இயேசப்பா உங்க வார்த்தையை கேட்பது மட்டுமல்ல, அதன்படி வாழ என்னை அர்ப்பணிக்கிறேன். நீங்க என் உள்ளத்தில் பிறந்து, புது சிருஷ்டியாய் வாழ உதவி செய்யும் ஆமென். O.k குட்டீஸ் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் Bye.

- Mrs. ஜீவா விஜய்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet betplay jojobet esbet sonbahis tambet grandpashabet betgit mercurecasino matbet