Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 25.12.2024
Share:

By Village Missionary Movement

Wednesday, 25-Dec-2024

இன்றைய தியானம்(Tamil) 25.12.2024

 

அற்பமான ஆரம்பங்கள்

 

"(மேய்ப்பர்கள்) தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும் முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்…" - லூக்கா 2:16

 

6 வயது சிறுமி, அவ்வப்போது தகப்பனாருடன் தங்கள் மாட்டுப்பண்ணைக்குச்சென்று மாடுகள் பால்கறப்பதை பார்ப்பதும், அவைகளுக்கு வைக்கோல் அள்ளிப்போடுவதும் வழக்கம். ஒரு நாள் அவளுடைய அப்பா, "இன்று பண்ணையின் தெற்கு பக்கம் கட்டியிருக்கும் மாடுகளை பார்த்துவிட்டு முன்னணையிலிருக்கும் மாடுகளுக்கு வைக்கோல் போட வேண்டும்" என்றார். "முன்னணை" என்ற வார்த்தையைக் கேட்டதும் குட்டிப்பொண்ணுக்கு கடும் உற்சாகம். பிறந்த இயேசு பாலகனை முன்னணையில் கிடத்தினார்கள் என்று அம்மா சொல்லியிருக்கிறார்களே. நமது மாட்டுப்பண்ணையிலும் ஒரு முன்னணையா என வியந்து, உடனே தன்னை அங்கு அழைத்துச் செல்லும்படி அப்பாவை வற்புறுத்தினாள். ஆர்வத்தோடு அங்கே சென்றபோது, சாதாரண அட்டைகளைக் கொண்டு செய்யப்பட்ட அடைப்புதான் முன்னணை என்று கண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தாள். இவ்வளவு எளிய இடத்திலா இயேசு பிறந்திருப்பார் என்று சந்தேகத்தோடு அப்பாவிடம் கேட்டு, தெளிவும் பெற்றாள்.

 

முன்னணை நமக்கு கூறுவதென்ன? இயேசுகிறிஸ்துவின் ஆரம்பமும் அற்பமான ஒரு இடத்திலிருந்து துவக்கப்பட்டதுதான். ஆகவே பிறருக்கு பயனுள்ள, ஆசீர்வாதமான வாழ்க்கை வாழ்வதற்கும் ஆண்டவரைப் பற்றி அறிவிப்பதற்கும் தொடக்கம் முக்கியமானதல்ல என்பதை உணர்த்துகிறது. இயேசு கிறிஸ்து தச்சனின் மகன், மாட்டுத் தொழுவத்தில் பிறந்தவர், முன்னணையில் கிடத்தப்பட்டவர், சாதாரண குற்றவாளியாக கொல்லப்பட்டவர். ஆனால் இவரே முழு மனுக்குலத்திற்கும் இரட்சகரானார் என்பது நினைத்துப் பார்க்க முடியாத உண்மையல்லவா?

 

சோர்ந்து போயுள்ள தேவஜனமே! உற்சாகம் கொள்ளுங்கள். சாதாரணமும் அற்பமுமான நாமும் தேவனுக்கு ஊழியம் செய்யவும், தேவனுடைய வார்த்தையை அறிவிக்கவும் தகுதியானவர்கள் என்பதை முன்னணை, சொல்லாமல் சொல்லுகிறதல்லவா? உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? தேவசெய்தி நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் மூலமே இவ்வுலகிற்கு அருளப்படுகிறது. ஆகவே உங்கள் ஆரம்பம் அற்பமாயிருந்தாலும் முடிவை தேவன் ஆசீர்வாதமாக்குவார். இயேசுகிறிஸ்துவின் ஆரம்பம் அற்பமானதுதான், ஆனால் முடிவோ அதிசயிக்கக் கூடியதாயிருந்தது. முன்னணை கற்றுக்கொடுத்த முத்தான சத்தியம் நம்மை கிறிஸ்துவ வாழ்வில் உற்சாகமாய் ஓடச்செய்வதாக. HAPPY CHRISTMAS

- M. ஷேரன் க்யூட்சர்

 

ஜெபக்குறிப்பு:

நம் வளாகத்தில் நடைபெறும் டியூஷன் சென்டருக்கு வரும் பிள்ளைகளின் பெற்றோர் இரட்சிக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking perabet casibom holiganbet galabet casibom perabet perabet giriş padişahbet padişahbet giriş grandpashabet kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet casinomilyon jojobet palacebet sonbahis wbahis grandpashabet betgit betsalvador matbet meritking