Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 22.03.2025
Share:

By Village Missionary Movement

Saturday, 22-Mar-2025

இன்றைய தியானம்(Tamil) 22.03.2025

 

எப்பொழுதும் ஜெபம் பண்ண வேண்டும்

 

"சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும்..." - லூக்கா 18:1

 

ஒரு கிராமத்தில் குடிக்க தண்ணீர் இல்லாத பஞ்சம் காணப்பட்ட போது மக்களெல்லாம் மூன்று மைல்களுக்கு அப்பால் இருந்து தண்ணீர் கொண்டு வந்தனர். அந்த கிராமத்தில் ஞானமுள்ள ஒரு தந்தை தன் இரண்டு வாலிப மகன்களையும் பார்த்து நமது வயலில் புதையல் இருக்கிறது. உடனே அதைத் தோண்டி எடுங்கள் என்று கட்டளையிட்டார். அந்த இருவரும் மகிழ்ச்சியோடு வயலுக்குச் சென்று தோண்டினார்கள். இடைவிடாமல் தோண்டி சோர்ந்து போனார்கள். புதையல் கிடைக்கும் என்ற நம்பிக்கை அற்றுப்போய் கண்களை மூடி பெருமூச்சு விட்டு உட்கார்ந்திருந்தபோது, அவர்கள் கால்களின் கீழ் ஈரம் கசிந்தது. கொஞ்ச நேரத்தில் ஆழத்திலிருந்து தண்ணீர் பீறிட்டு நதியைப் போல் வந்தது. தந்தையும் அந்த கிராம மக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அப்பா சொன்ன புதையல் இதுதான் என்று பிள்ளைகள் அறிந்து கொண்டனர். அந்த கிராமமே மறுரூபம் அடைந்தது. மக்கள் ஆனந்த சந்தோஷம் அடைந்தனர். 

  

வேதத்தில் ஒரு சம்பவம் உண்டு. ஆபிரகாமின் நாட்களில் வெட்டின துரவுகளை பெலிஸ்தியர் தூற்று போட்டார்கள். அது போல ஈசாக்கின் வேலைக்காரன் பள்ளத்தாக்கிலே துரவு வெட்டினார்கள். வெட்டும் போது சுரக்கும் நீரூற்றைக் கண்டார்கள். கேராருர் மேய்ப்பர் வந்து இந்த நீரூற்று எங்களுடையது என்று சொல்லி வாக்குவாதம் பண்ணி வாங்கிக் கொண்டார்கள். பின்னும் அவ்விடம் விட்டுப் போய் வேறொரு துரவை வெட்டினார்கள். இந்த நீரூற்றும் எங்களுடையது என்று வாங்கிக் கொண்டார்கள். ஈசாக்கின் வேலைக்காரர் பின்னும் ஒரு நீரூற்றைத் தோண்டினார்கள். அதற்கு வாக்குவாதம் பண்ண வரவில்லை. எனவே அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டார்கள்.   

 

ஜெபம் பண்ணி சோர்ந்து போயிருக்கும் அருமையான தேவனுடைய பிள்ளையே! ஜெபமும் நிலத்தைத் தோண்டுவது போல் ஒரு பயிற்சியாகும். அந்த வாலிபர்கள் இடைவிடாமல் தோண்டினது போல ஈசாக்கின் வேலைக்காரர்கள் விடாமல் தோண்டினதைப் போல தேவப்பிள்ளையே நீயும் சோர்ந்து போகாமல் ஜெபிக்கும்போது பரத்திலிருந்து நதியைப் போன்று உன் ஜெபத்திற்கு பதிலைத் தேவன் தருவார். இராக்கால தரிசனத்தில் உன்னோடு பேசுவார். உன் சத்துருக்களோடு சமாதானம் ஆகும்படி செய்வார். உன்னை உலகத்திற்கு வெளிச்சமாக்குவார். உன் தலை எண்ணெயால் அபிஷேகம் செய்யப்படும். உன் சத்துருக்களுக்கு முன்பாக பந்தியை ஆயத்தம் செய்வார். உன் தலையில் கிரீடம் பூக்கும். உன் வாழ்வும், ஊழியமும், குடும்பமும், மறுரூபம் அடையும். கேளுங்கள், அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். ( மத். 7:7)

- R. சலோமி

 

ஜெபக்குறிப்பு:-

நம் வளாகத்தில் ஜெபகோபுரம் கட்டப்படுவதற்கான தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al deneme bonusu deneme bonusu veren siteler online casino online casino perabet perabet giriş perabet perabet giriş perabet perabet giriş perabet güncel giriş jojobet jojobet giriş jojobet güncel giriş Holiganbet Holiganbet Giriş Holiganbet Güncel Giriş Superbetin Superbetin Giriş Superbetin Güncel Giriş pashagaming pashagaming giriş pashagaming güncel giriş betcio Betcio Giriş betcio güncel giriş atlasbet atlasbet giriş atlasbet güncel giriş Piabet Piabet Giriş Ngsbahis Ngsbahis Giriş İnterbahis İnterbahis Giriş Klasbahis Klasbahis Giriş Coinbar Coinbar Giriş Limanbet Limanbet Giriş İmajbet İmajbet Giriş Restbet Restbet Giriş Matbet Matbet Giriş Jasminbet Jasminbet Giriş Belugabahis Belugabahis Giriş Online casino nz Best payout online casino nz matbet jojobet jojobet giriş jojobet güncel giriş bahsegel bahsegel bahsegel matbet romabet lunabet