Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 06.04.2025
Share:

By Village Missionary Movement

Sunday, 06-Apr-2025

இன்றைய தியானம்(Tamil) 06.04.2025

 

காத்திடுவார்

 

"உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்" - சங்கீதம் 91:11

 

Exam என்றாலே பயம், Result வந்தா பயம், இப்படி நல்லா படிக்கின்ற பிள்ளைகள் கூட பயப்படுறாங்க இல்லையா? உங்களை படைத்த தேவன் நீ பயப்படாதே! என்று சொல்லி, உனக்கு உதவிசெய்ய ரெடியா இருக்கிறார். பிறகென்ன ! உனக்கிருக்கும் கஷ்டத்தை Jesus கிட்ட சொல்லிடலாம்தானே! O.K வா...Story கேட்கலாம். 

 

மெர்லின் என்ற குட்டி பாப்பா Friends கூட சேர்ந்து விளையாடுவாள். சில நேரம் சாப்பாட்டை கூட மறந்து ஜாலியா விளையாடிக் கொண்டே இருப்பாள். ஓ.... நீங்களும் அப்படித்தானா? லேட்டாகி அம்மாவை தேடவைத்து, கஷ்டப்படுத்தக் கூடாது. சீக்கிரமா வீட்டுக்குப் போகணும் சரிதானே! ஒரு நாள் மெர்லின் விளையாடிக் கொண்டிருக்கும் போது, தெரியாமல் அருகிலுள்ள குழியில் விழுந்து விட்டாள்.Please help me என்று சத்தம் போட்டாள், யாருக்கும் கேட்கவில்லை. மெர்லின் அம்மாவும் எல்லா இடங்களிலும் தேடினார்கள். கிடைக்கவில்லை குழியில் இருந்து கொண்டு, அம்மா கற்றுக் கொடுத்த வசனத்தை நினைத்து பார்த்தாள். ஆபத்து காலத்தில் இயேசுவை நோக்கி கூப்பிட்டாள். திடீரென்று ஒரு கை வந்து அவளை தூக்கி விட்டது. வெண்ணாடை தரித்த இந்த அழகான நபரை நம்ம தெருவில் இதுவரை பார்த்ததே இல்லையே என்று பேசுவதற்குள் மறைந்து விட்டார்.

 

அம்மாவிடம் சென்று நடந்ததை சொன்னாள். அம்மா சந்தோஷப்பட்டாலும், சீக்கிரமாய் வீட்டிற்கு வரும்படி கண்டித்தார்கள். மெர்லின் தம்பி கென்னடிக்கு துhக்கத்தில் எழுந்து நடக்கும் பழக்கமுண்டு. ஒரு நாள் இரவு காணாமல் போய்விட்டான். பதட்டத்தோடு ஊரெல்லாம் தேடினார்கள் பெற்றோர். மெர்லின் பயப்படாமல் ஜெபித்தாள் தேவ தூதனை அனுப்பும்படி கேட்டாள். சிறிது நேரத்தில் வாசல் படியில் கென்னடியின் கையை பிடித்து அதே வெண்ணாடை அணிந்த அழகான நபர் பத்திரமாய் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு போனார். உண்மையாகவே தேவதூதர்கள் நமக்கு உதவி செய்கிறார்கள் என்பதை அறிந்தும் கொண்டாள். 

 

குட்டிச் செல்லங்களே! நீங்க எல்லாருமே ரொம்ப Special தெரியுமா? உங்களுக்கான தேவ தூதர்கள் எப்பொழுதும் பரம பிதாவின் சமுகத்தை தரிசிக்கிறார்கள். நீங்க Prayer பண்ணும்போது, உங்களுக்கு உதவி செய்ய ரெடியா இருக்கிறார்கள். அப்போ நீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்கதானே! Daily JESUS கூட பேச மறக்கவே கூடாது. O.k

- Sis. தெபோராள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş holiganbet güncel holiganbet giriş holiganbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom meritking perabet casibom holiganbet galabet casibom padişahbet padişahbet giriş grandpashabet ibizabet tambet grandpashabet jojobet nesinecasino betbey betgit grandpashabet betpuan cashwin matbet meritking perabet perabet giriş instagram ban service betsilin betsilin giris pashagaming pashagaming giris gorabet gorabet giris kralbet holiganbet grandpashabet grandpashabet giriş holiganbet giriş çarkbet çarkbet giriş deneme bonusu