By Village Missionary Movement
Sunday, 27-Apr-2025இன்றைய தியானம்(Tamil) 27.04.2025
பிடிவாத பினு
"இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டு விடுங்கள்" - கொலோசெயர் 3:8
பினுவும், பிரின்சியும் அக்கா, தம்பி. இருவரும் அப்பா அம்மாவுக்கு செல்லப்பிள்ளைகள். தம்பி பினு பயங்கர வாலு, எதற்கெடுத்தாலும் அடம்பிடிப்பான். எதாவது தேவையென்றால் உடனே அடம்பிடித்து அம்மாவிடம் வாங்கிவிடுவான். அவன் சிறுவனாக இருப்பதால், கடையில் ஏதாவது சின்ன பொருட்கள் வாங்க அவனை அனுப்புவார்கள். பிரின்சி கொஞ்சம் பெரிய பிள்ளையாக இருப்பதால் அவளை அம்மா வீட்டு வேலை செய்வதற்கு Help க்கு வைத்துக்கொள்வார்கள். பிரின்சி தினமும் அம்மாவுடன் சேர்ந்து பாத்திரம் கழுவுகிறது, வீட்டை சுத்தம் செய்வது, துணிகளை மடித்து வைப்பது என்று சில வேலைகளை செய்வாள்.
ஒரு நாள் அம்மா பினுவிடம் கடையில் போய் சோப்பு வாங்கிவர சொல்ல, அவனோ பிடிவாதமாய் நான் போகமாட்டேன். தினமும் நான் தானே போகிறேன் இன்றைக்கு அக்காவை அனுப்புங்கள் என்று கத்தி கூச்சலிட்டான். உடனே பிரின்சி, அம்மா அவனை ஒன்றும் சொல்லாதீர்கள் நான் போய் வேகமாக வாங்கி வருகிறேன் என்று சொல்லி கடைக்குச் சென்றாள். போகும் வழியில் ஒரு நாய் இவள் பின்னாடி வர இவளோ பயத்தில் ரோட்டு பக்கம் ஓடினாள். ஓடினவள் ரோட்டில் வந்த Bike - ஐ கவனிக்காததினால் அந்த Bike ல் மோதி கீழே விழுந்தாள். இவளது கால் எலும்பு உடைந்துவிட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் அவளை தூக்கி கொண்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
வீட்டில் அம்மா பினுவிடம் என்னடா இன்னும் அக்காவை காணோம் என்று கூற, அவனோ நான் 20 நிமிடத்தில் ஓடிப்போய் வந்திருப்பேன் இவளை இன்னும் காணோமே, நான் போய் பார்த்து வருகிறேன் என்று கிளம்பினான் பினு. அந்நேரத்தில் தெரியாத நம்பரிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வரவே அவர்கள் யார் என்று விசாரிக்க, மறுபக்கம் நாங்கள் ஆஸ்பத்திரியில் இருந்து Call பண்ணுகிறோம். உங்கள் மகள் அடிபட்டு இங்கு இருக்கிறாள், உடனே வாருங்கள் என்றார்கள். உடனே அம்மா, பினுவையும் கூட்டிக்கொண்டு பதட்டத்துடன் ஓடினார்கள். அங்கு போய் தன் மகளின் நிலையை பார்த்து கண்ணீர் வடித்தார்கள். பினுவும் அக்காவை பார்த்து அழுது என்னுடைய பிடிவாத குணத்தினாலே என் அக்காவை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டேனே என்று அக்காவிடம் மன்னிப்பு கேட்டான்.
அன்பான தம்பி தங்கச்சி! பிடிவாதம் பிசாசோட தீய குணம். அதற்கு நீ இடம் கொடுத்து விடக்கூடாது. நீங்களும் உங்க அண்ணன், அக்கா, தம்பி, தங்கச்சிக்கிட்ட விட்டு கொடுத்து போகணும். பிடிவாத குணம் பல பிரச்சனைகளை கொண்டு வந்துவிடும். விட்டுக்கொடுத்தால் சந்தோஷமாக வாழலாம். O.k...
- Mrs. சாராள் சுபாஷ்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864