Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  21-05-2021
Share:

By Village Missionary Movement

Friday, 21-May-2021

இன்றைய தியானம்(Tamil)  21-05-2021

தோட்டம் போட குறிப்புகள்

“வசனத்தைக் கேட்டு, ஏற்றுக் கொண்டு, ஒன்று முப்பதும் ஒன்று அறுபதும் ஒன்று நூறுமாகப் பலன்கொடுக்கிறார்கள்; இவர்களே நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்....” – மாற்கு 4:20 

தோட்டம் போடுபவர்களுக்கான குறிப்புகள் அடங்கிய ஒரு புத்தகத்தை வாசித்த ஒருவருக்கு ஒரு சூப்பர் பாய்ண்ட் கிடைத்தது. “மண்ணைக் குறித்து கவனம் எடுத்துக்கொள்ளுங்கள். செடிகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. மண் நல்லதென்றால் விதை தானாக வளர்ந்து பலன் கொடுக்கும்” என்பதே அக்குறிப்பு. 

கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு, அதை ஏற்றுக்கொண்டு, அதன்படி நடந்து, கனிகொடுக்கிறவர்களை இயேசுகிறிஸ்து நல்ல நிலத்துடன் ஒப்பிட்டுள்ளார். நல்ல நிலமாகிய இருதயத்தில் போடப்பட்ட வார்த்தை, கிறிஸ்துவின் சாயல் நம்மில் உருவாகும் வரை செயல்படுகிறது. கீழ்ப்படியும் இருதயத்துடன் வேத வசனங்களை ஏற்றுக்கொண்டால், வசனம் வளர்ந்து கனி கொடுக்க ஆவியானவர் உதவி செய்கிறார். ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர, வேதவசனத்தை ஏற்றுக்கொள்ளவும் அதற்கு கீழ்ப்படியவும் நிலமாகிய இருதயத்தை பக்குவப்படுத்த வேண்டும். அப்போதுதான் நாம் நீதியின் விளைச்சலைக் கொடுக்கமுடியும். 

நம் இருதயம் எப்படிப்பட்ட நிலமாக விளங்குகிறது? சிந்தித்துப் பார்ப்போம். நம் இருதயம் மகா கேடுள்ளதாயிருக்குமென்றால், கீழ்க்கண்ட ஜெபத்தை உண்மை மனதோடு ஏறெடுப்போம், “கர்த்தாவே நீர் என் இருதயத்தை நல்ல நிலமாக மாற்றும்படி, என்னை இருக்கிற வண்ணமாகவே உம்மிடம் அர்ப்பணிக்கிறேன். எந்த மனுஷனையும் மாற்றும் வல்லமையுள்ள உம்முடைய வேதவசனத்தை என் இருதயத்தில் விதையும். வசனமாகிய விதை வேர்பற்றி வளரும்படிச் செய்யும். அவ்வசனத்திற்கு கீழ்ப்படிய என்னை அர்ப்பணிக்கிறேன். ஆமென்” விசுவாசத்தோடு இந்த ஜெபத்தை செய்யுங்கள். நிச்சயமாகவே இருதயமாகிய நிலத்தில் காணப்படும் கடினமான கற்கள் போன்ற சுபாவங்களை ஆவியானவர் தகர்ப்பார். ஆழமாக வேரூன்றியுள்ள களை போன்ற ஜென்ம சுபாவங்களை பிடுங்கிப் போடுவார். பெருமை, பொறாமை போன்ற பாறைகளை உடைப்பார். ஆவியானவர் பனியைப் போல இறங்கி இருதயத்தை நனைப்பார். அவருடைய கிருபையாகிய மழையைப் பெய்யப் பண்ணுவார். நீதியின் சூரியன் நம்மேல் பிரகாசிப்பார். நாம் வளர்ந்து கனிகொடுக்கிறவர்களாய் மாறுவோம். 

பிரியமானவர்களே, சங்கீதம் 1-ம் அதிகாரத்தில் வாசிக்கிறது போல, “இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன், நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரத்தைப் போலிருப்பான். அவன் செய்வது எல்லாம் வாய்க்கும்” என்ற வாக்குத்தத்தம் உங்களுக்குரியதே! அல்லேலூயா!
-    Mrs. கீதா ரிச்சர்ட் 
ஜெபக்குறிப்பு:
7000 மிஷனெரிகள், 7000 மிஷனெரிகளை தாங்கும் பங்காளர்கள், 7000 வீட்டு ஜெபக்குழுக்கள் ஆரம்பிக்கப்பட ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet holiganbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom meritking perabet casibom holiganbet galabet casibom padişahbet padişahbet giriş grandpashabet jojobet tambet grandpashabet jojobet nesinecasino betbey betgit grandpashabet betpuan cashwin matbet meritking perabet perabet giriş instagram ban service betsilin betsilin giris pashagaming pashagaming giris gorabet gorabet giris kralbet holiganbet grandpashabet grandpashabet giriş https://tr.holiganbet-30temmuz.art/ çarkbet çarkbet giriş