Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 23.05.2025
Share:

By Village Missionary Movement

Friday, 23-May-2025

இன்றைய தியானம்(Tamil) 23.05.2025

 

யுத்தம் கர்த்தருடையது

 

"கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்" - யாத். 14:14

 

ஒரு நாள் நான் கார்-ல் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு வேலைக்காக காரை ஓரமாய் நிறுத்தினேன். திடீர்னு காரின் கண்ணாடியை யாரோ ஒருவர் தட்டுற சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தால் ஒரு பயங்கரமா, கோவமாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். யார்டா இவர், இவ்வளவு உயரமா, போலீஸ் யூனிபார்மும் போடல என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே அவர் காரின் கதவை திறப்பதற்கு முயற்சித்தார். என்ன விஷயம் என்று கேட்கலாம்னு கதவை கொஞ்சம் திறந்துவிட்டேன். அப்போது அவர் வாயிலிருந்து பயங்கர கோவமான சத்தம். ஆனால் வார்த்தை ஏதும் வரவில்லை. ஓரிரு வினாடிகளில் பேச இயலாதவர் என புரிந்துகொண்டேன். அவர் திரும்ப திரும்ப கதவை திறக்க முயற்சித்து எப்படியோ கார் சாவியை எடுத்து விட்டார்.    

 

ரோட்டில் சென்றவர்கள் எல்லாம் சற்று நின்று எங்கள் இருவரையும் பார்த்தார்கள். நான் சாவியை கேட்கவே என்னை அடிக்க கையை ஓங்கினார். அவர் பிசாசினால் கட்டப்பட்டிருக்கிறார் என்பதை என்னால் தெளிவாய் உணர முடிந்தது. எங்கள் இருவர் கண்ணுக்கும் தெரியாத ஒரு கடிசஉந அவரை தள்ளியது. அவரது கண்களில் பயம் தெரிந்தது. என்னை அடிக்க இயலாததால் எரிச்சலடைந்து சாவியை ரோட்டில் எறிந்துவிட்டார். இவ்வளவு நடந்தும் பரிசுத்த ஆவியானவரின் சமாதானத்தை நான் முழுமையாக அனுபவித்தேன். அப்போதுதான் அவர் கைகளில் இருந்து இரத்தம் வடிவதை பார்த்தேன். ஆனால் என் உடம்பில் ஒரு சிறு காயம்கூட இல்லை. ஆம், நமக்காக தேவன் யுத்தம் செய்கிறார்.

 

வேதத்தில் எசேக்கியா ராஜா அரசாண்ட நாட்களில் (2 இராஜா. 18:5) அவனுக்கு முன்னும் பின்னும் வேறெந்த ராஜாவும் அவனைப் போல் தேவன் பேரில் நம்பிக்கை கொண்டதில்லை என்ற அளவுக்கு நம்பிக்கை உள்ளவனாயிருந்தான். அவனுக்கு எதிராக அசீரிய ராஜா சனகெரிப் மிகப்பெரும் படையுடன் வந்தான். எசேக்கியாவை அவதூராய் பேசினான், கர்த்தரையும் நிந்தித்தான். எசேக்கியாவும், அவன் ஜனமும் மவுனமாயிருந்தார்கள் (2 இராஜ. 18:36). அன்று இராத்திரியில் அசீரிய படைக்கு விரோதமாய் கர்த்தருடைய ஒரு தூதன் புறப்பட்டுச் சென்று 1,85,000 பேரை சங்கரித்தான். சனகெரிப் வெட்கி திரும்பி போனான். தன்னுடைய சொந்த குமாரர்களாலே சனகெரிப் வெட்டி கொல்லப்பட்டான். 

 

ஆம், பிரியமானவர்களே, யுத்தம் கர்த்தருடையது. "நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்; என் சத்துருக்களின் கோபத்துக்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்; உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும்"(சங்.138:7) என்ற வார்த்தையின்படி கர்த்தர் நம்மை பாதுகாத்துக் கொள்வார். இயேசு நம்மை நேசிக்கிறார். ஆமென்.

- Dr. ஸ்டெஃபான் லைசாண்டர்

 

ஜெபக்குறிப்பு:-

VBS செல்கிற பிள்ளைகள் அனைவரின் உள்ளங்கள் திறக்கப்பட, மனந் திரும்ப ஜெபியுங்கள். 

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet betplay jojobet esbet sonbahis tambet grandpashabet betgit mercurecasino matbet