By Village Missionary Movement
Monday, 26-May-2025இன்றைய தியானம்(Tamil) 26.05.2025
தாழ்மையின் உருவம்
"நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்;..." - மத்.11:29
சென்னையில் கத்தோலிக்க தியான ஆசிரமம் ஒன்று இருக்கிறது. அதில் பல அறைகள் உண்டு. கத்தோலிக்க ஆயர்கள் அங்கு வந்து தனியாக தியானம் செய்வது உண்டு. FMPB பேட்ரிக் ஜாஸ்வா அண்ணனும் மிஷனெரி பணித்தளங்களுக்குச் செல்ல முடியாவிட்டால் இரண்டு, மூன்று நாட்கள் அங்கு ஒரு அறையை வாடகைக்கு எடுத்து ஜெபிப்பது வழக்கம். ஒரு முறை அவர் அங்கு தங்கியிருந்த போது தினமும் வேஷ்டியும், பனியனும் அணிந்த ஒரு நபர் வந்து அறையைச் சுத்தம் செய்து, பழைய தண்ணீரை மாற்றி புதுத்தண்ணீர் எடுத்து வைப்பார். பேட்ரிக் அண்ணன் அவருக்கு நன்றி சொல்லி விட்டு, "இங்கு நீங்கள் என்னவாகயிருக்கிறீர்கள்" என்று கேட்டாராம். "நான் லயோலா கல்லூரியின் முதல்வராக இருக்கிறேன். சில நேரங்களில் இப்படி வந்து ஆசிரமத்தில் சேவை செய்ய என்னை அர்ப்பணித்திருக்கிறேன்" என்றாராம். கல்லூரியின் முதல்வராக இருந்தபோதிலும், தன்னுடைய படிப்பு, பதவி, அந்தஸ்து என எதுவுமே பார்க்காமல் ஆசிரமத்தில் வேலை செய்வதற்கு அர்ப்பணித்த அவருடைய அர்ப்பணிப்பு பேட்ரிக் ஜாஸ்வா அண்ணனை வெகுவாக பாதித்தது.
யோவான் 13 ம் அதிகாரத்தில் நாம் பார்க்கும் போது இயேசுவானவர் தனது 12 சீஷர்களுடன் இருக்கிறார். திடீரென அவர்களிள் கால்களை கழுவ ஆயத்தமாகிறார். என்ன ஒரு தாழ்மையின் அடையாளம். ஆண்டவராகிய இயேசு எதையுமே நம்மைச் செய்ய சொல்லி நிர்பந்திக்கிற தேவன் அல்ல. சீஷர்கள் 12 பேரும் காணும்படியாக தான் சீஷர்களின் கால்களை கழுவினார். இயேசுவானவர் செய்த காரியத்தை சீஷர்களும் பார்த்துக் கொண்டு தான் இருந்தனர் .
இதை வாசிக்கின்றதான நண்பர்களே! நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன். என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள் என இயேசு கிறிஸ்து கூறுகிறார். கிறிஸ்தவ வாழ்க்கையிலே மனத்தாழ்மையை அணிந்து கொள்வோம். தாழ்மையாய் இருப்பவர்களுக்கு தான் ஆசீர்வாதமும் கிடைக்கும். தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபை அளிக்கிறார் என வேதமும் கூறுகிறது. இயேசுவை போல நாமும் ஒவ்வொருநாளும் தாழ்மையாய் இருக்க கற்றுக் கொள்வோம். இயேசுவுடன் இருந்த சீஷர்கள் தாழ்மையாய் இருந்ததினால் தான் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டார்கள். நாமும் இந்த உலகத்திற்கு உப்பாக, வெளிச்சமாக மாற வேண்டும் என்றால் நிச்சயம் நமக்கு தேவை தாழ்மை!
- Mrs. ஜாஸ்மின் பால்
ஜெபக்குறிப்பு:-
VBS ஊழியத்தின் மூலம் சந்திக்கப்படும் சிறுவர்கள் கிறிஸ்துவின் அன்பினால் நிரப்பப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864