Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 11.06.2025
Share:

By Village Missionary Movement

Wednesday, 11-Jun-2025

இன்றைய தியானம்(Tamil) 11.06.2025

 

துரோகியை நம்பாதே

 

"ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது உடைந்த பல்லுக்கும் மொழிபுரண்ட காலுக்கும் சமானம்" - நீதி. 25:19

 

நதியோரத்தில் குடியிருந்த பாம்பும், தவளையும் ஒற்றுமையாக, நண்பர்களாக வாழத் தீர்மானித்தன. எனவே இந்த ஒற்றுமையை உறுதி செய்ய இருவரும் சேர்ந்து நதியின் மறுகரைக்குச் செல்லத் திட்டமிட்டன. பாம்பு தவளையை தூக்கிச் செல்ல வேண்டும் என்பது தான் நிபந்தனை. அவை இரண்டும் புறப்பட்டன. தவளை பாம்பின் வாயில் உட்கார்ந்து கொண்டது. மறுகரையை எட்டுவதற்கு சிறிது தூரமே இருக்கும் போது, தவளையின் வாயும் கண்ணும் மட்டுமே வெளியே தெரிந்தது. தன் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்த தவளை துடித்துக் கொண்டே, "அண்ணா! நீ என்னை விழுங்கவா செய்கிறாய்?" என்று பாம்பிடம் கேட்டது. அதற்கு அந்த பாம்போ, மற்ற எவ்விதத்திலும் நாம் சேர்ந்து வாழ வழியில்லையே என்று சொல்லிக்கொண்டே தவளையை விழுங்கி விட்டது.

 

பிரியமுள்ள தேவ பிள்ளைகளே! இன்று நாம் அன்பு, ஐக்கியம், ஒற்றுமை என்ற வார்த்தைகளை அடிக்கடி பேசுகின்றோம். ஆனால் நம்முடைய வாழ்க்கையில் உண்மையாகவே அவைகளை கடைப்பிடிக்கிறோமா? வேதம் சொல்கிறது, ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது உடைந்த பல்லுக்கும், மொழிபுரண்ட காலுக்கும் சமானம். பாம்பின் குணமே தவளையை உணவாக உண்பது. தவளைக்கு பாம்பானது என்றென்றும் துரோகி. இதை சரிவர தெரிந்து கொள்ளாமல் தவளை, பாம்பிடம் நட்பு வைத்தது. பாம்பை நம்பி பயணத்தை தொடர்ந்த தவளை தன் உயிரை இழந்தது.   

 

எனக்கருமையான மகனே! மகளே! இன்றைக்கு உங்களின் நட்பு எப்படி பட்டவர்களிடம் உள்ளது?. அவர்களது குணங்கள் எப்படிப்பட்டது என்று தெரியாமல் நட்பு கொள்கிறபடியினால், முடிவு பரிதாபமான நிலைமைக்கு தள்ளப்படுகிறது.

 

சாலொமோன் அந்நிய ஸ்திரீகளை நன்கு அறிந்திருந்தும் அவர்களோடே தன் உறவை மேற்கொண்டான். என்ன நடந்தது தெரியுமா? சாலெமோன் ராஜாவை அவனது மனைவிமார்கள், உருவ வழிபாட்டிற்கு நேராக வழிநடத்தி விட்டார்கள். தேவனது எச்சரிப்பை பெற்றும் அவன் தேவன் பக்கமாக திரும்பவில்லை. ஆதலால் தனக்கிருந்த 12 கோத்திரத்தில் 10 கோத்திரத்தை ஆளுகை செய்யும் உரிமையை இழந்தான். அருமையான தேவமக்களே! நாம் இந்த உலகத்தின் நட்பில் விழிப்பும், எச்சரிப்பும் இல்லை என்றால், கடைசியாக அண்ணே! என்றாலும், அக்கா! என்றாலும் முடிவு பரிதாபமே. நாம் யார் என்றும், மற்றவர்கள் யார் என்றும் பகுத்தறிந்து நட்பு கொள்ள வேண்டும். பகுத்தறிய தவறினால் பரிதாபமே! ஆமென்.

- Pr.எஸ்.ஏ.இம்மானுவேல்

 

ஜெபக்குறிப்பு:-

தெபொராள்கள் இல்லாத தாலுகாக்களில் தெபொராள்கள் எழுப்பப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom meritking perabet casibom holiganbet galabet casibom padişahbet padişahbet giriş grandpashabet jojobet cashwin grandpashabet radissonbet palacebet amgbahis cratosroyalbet grandpashabet betpuan betsalvador matbet meritking perabet perabet giriş instagram ban service betsilin betsilin giris pashagaming pashagaming giris gorabet gorabet giris kralbet holiganbet