Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 03.08.2025 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 03-Aug-2025

இன்றைய தியானம்(Tamil) 03.08.2025 (Kids Special)

 

ஏற்ற காலத்தில்

 

"...ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்” - 1 பேதுரு 5:6

 

ஒவ்வொரு ஊரிலும் ஏதாவதொன்று famous ஆக இருக்கும். நான் இருக்கும் மதுரையில் ஜிகர்தண்டா, விருதுநகரில் புரோட்டா, சேலத்தில் மாம்பழம் நீங்க இருக்கிற ஊரில் என்ன famous சொல்லுங்க குட்டீஸ்! பார்க்கலாம் அப்பப்பா... கேட்கவே சந்தோஷமா இருக்குதே... இப்படி கேட்டா சொல்லிக் கொண்டேயிருப்பீங்க. இதே போலத்தான் நார்வே தேசத்தில் Mapel மரம் ரொம்ப Special ஆ இருக்குமாம். அதன் இலைகள் Red கலர்லதான் இருக்கும். இது 40 வருடம் கழித்துதான் பூ பூத்து, காய்காய்த்து, கனிகளை கொடுக்குமாம். இந்த பழத்தை சாப்பிடணும்னா பொறுமையாகத்தான் இருக்கணும். இதன் விலையும் அதிகமா இருக்குமாம். அடுத்து ஐரோப்பா தேசத்தில் பீச்மரம் Special. இதுவும் 20,000 டாலர் கொடுத்துத்தான் வாங்கணுமாம். இப்ப என்னதான் கதை சொல்லப்போறீங்கன்னு தானே நினைக்கிறீங்க. வாங்க குட்டீஸ்!

 

ஒரு Uncle ன் தோட்டத்தை போய் பார்த்துவிட்டு வருவோம். நியூயார்க்கில் உள்ள அந்த தோட்டம் ரொம்ப அழகாக இருந்தது. பீச்மரம், Mapel இன்னும் விதவிதமான நிறங்களில் மரங்கள் இருந்தது... ஓ...நீங்களும் தோட்டத்தில் நிறைய செடி வளர்க்கிறீங்களா? Super, Super அந்த Uncle ன் தோட்டத்தைப் பார்க்க ஒரு நபர் வந்தார். எல்லா மரங்களும் பார்க்க அழகாக இருந்தது. அவற்றில் காய்களோ, கனிகளோ இல்லை, ஆனால் விலையோ மிக அதிகம். அந்த தோட்டத்தைப் பார்க்க வந்த நபர் சொன்னார், என் தோட்டத்தில் நான் வாழைமரம் வைத்திருக்கிறேன். அது சீக்கிரமாய் வளர்ந்து கனிதந்துவிடும். அதன் சுவையும், பலன்களும் அதிகம். ஆனால் விலையோ மலிவு, எனவே அதை சாப்பிட்டு சந்தோஷமாய் இருப்போம் என்றார்.

 

நீங்க என்னடானா கனிகள் தராத மரங்களை இத்தனை வருஷமா வைத்திருக்கீங்களேன்னு கேட்டார். அப்போதான் அந்த Uncle சொன்னார், ஒவ்வொரு மரத்திற்கும் தேவன் ஒரு காலத்தை வைத்திருக்கிறார். அந்த காலங்களில் தான் அது கனிதரும். அதுவரை பொறுமையோடு காத்திருக்கணும். இதை கேட்ட அந்த நபர், தேவன் எதை எவ்வாறு படைத்தாலும், அது நேர்த்தியானதாகத்தான் இருக்கும். நமக்கு தான் பொறுமை வேண்டும் என்று தேவனின் படைப்புகளை நினைத்து துதித்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றார்.

 

என்ன குட்டி தங்கங்களே! நீங்க என்ன நினைக்கிறீங்க? நான் ஆசைபட்ட எதுவும் கிடைக்கல, என் ஜெபத்திற்கு பதில் வரவில்லை, நான் நினைத்தது நடக்கவில்லை, என் குடும்பத்தை இயேசப்பா ஆசீர்வதிக்கவில்லை என்று சோர்ந்து போய் இருக்கீங்களா குட்டீஸ்! உங்களை உயர்த்த, உங்களுக்கு உதவி செய்ய ஒரு காலத்தை வைத்திருக்கிறார். அவருடைய சித்தத்திற்கு நம்மை ஒப்புக்கொடுத்து, ஏற்ற காலம் வரும் வரை பொறுமையோடு இருப்போமானால், இயேசப்பாகிட்ட இருந்து Blessings ஐ பெற்றுக்கொள்ளலாம். O.K All the Best.

- Sis. தெபொராள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking perabet casibom holiganbet galabet casibom perabet perabet giriş padişahbet padişahbet giriş grandpashabet kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet casinomilyon grandpashabet palacebet sonbahis wbahis grandpashabet betpuan betsalvador matbet meritking