Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 15.08.2025
Share:

By Village Missionary Movement

Friday, 15-Aug-2025

இன்றைய தியானம்(Tamil) 15.08.2025

 

விடுதலை

 

"...நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான் களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்தேன்" - லேவி. 20:26

 

கிறிஸ்துவுக்குள் பிரியமான நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் விடுதலைத் திருநாள் நல்வாழ்த்துக்கள். இன்றைய நாளிலும் நம்முடைய தேசத்தின் மக்கள் அனைவரும் எல்லா வளங்களையும், எல்லா நலன்களையும் பெற ஆண்டவர் அருள் புரிவாராக. இன்றைய நாளில் நம்முடைய தேசத்தில் மூவர்ண கொடி ஆங்காங்கே ஏற்றப்படுகிறது. பிரதமர், முதலமைச்சர் போன்ற முக்கிய தலைவர்கள் உட்பட பல தலைவர்கள், ஆசிரியர் பெருமக்கள் தேசியக் கொடியை ஏற்றி மிகப்பெரிய கொண்டாட்டமாக இந்திய விடுதலைத் திருநாளை கொண்டாடுகிறோம். பல்வேறு சமய, இன, மொழி பேசும் மக்கள் என நாம் அனைவரும் இணைந்து வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நமது நாட்டின் சிறப்பு அம்சமாகும். நமது தேசியக் கொடியில் காவி நிறம் தியாகத்தை பிரதிபலிக்கிறது. வெள்ளை நிறம் பரிசுத்தத்தையும், பச்சை நிறம் செழிப்பையும் குறிப்பதாக கூறுவர். உண்மையிலேயே ஒவ்வொரு வாலிப பிள்ளைகளும் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.

        

 நாம் பரிசுத்த வாழ்வு வாழ சில காரியங்களை, உலக சிற்றின்பங்களை தியாகம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் செழிப்பான வாழ்வை நாம் பெற இயலும். எல்லாரிடத்திலும் அன்பு காட்ட, எல்லாருக்கும் உதவ, நமக்கு தியாக சிந்தனை தேவைப்படுகிறது. தங்களை தாங்களே தியாகம் செய்து, நம்மை பாதுகாக்கும் பல்லாயிரக்கணக்கான போர் வீரர்கள், அவர்தம் குடும்பத்தினருக்காக நாம் இன்றைய நாளில் நம் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம். அவர்களுடைய தியாகத்தினால் நாம் பாதுகாப்பாய் நிம்மதியாய் வாழ்கிறோம். அது போல நாம் உலக சிற்றின்பங்களை தவிர்த்து கிறிஸ்துவுக்காய் நிற்கும் போது பரிசுத்தம் பாதுகாக்கப்படுகிறது. நாம் பரிசுத்தமான வாழ்வு வாழ தியாகம் தேவைப்படுகிறது. தியாகம் உள்ள வாழ்க்கையின் மூலம் நமக்கு கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கிறது. இதனால் நாம் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து பசுமையான வாழ்வை பெறுவோம். "நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது" ( 1 தெசலோ. 4:3).

          

இன்றைய நாளிலும் கூட திருச்சியில் வைத்து 1,20,000 வாலிபர்கள் பங்கு பெறும் வாலிபர் கூடுகை நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ளும் வாலிபர்கள் பாவத்திலிருந்து விடுதலை பெற்று மீட்படைய ஜெபியுங்கள். இம்முகாம் மூலம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகட்டும். மேலும் எழுப்புதல் துவங்கும் நாளாக இன்றைய நாள் இருக்க ஜெபியுங்கள். இம்முகாமில் கலந்து கொள்ளும் வாலிபர்களை தேவன் எழுப்புதல் வீரர்களாக மாற்றட்டும்! ஆமென். 

- Rev. எலிசபெத்

 

ஜெபக்குறிப்பு:-

முகாம் முடிந்ததும் கொடுக்கப்படும் உணவு குறைவில்லாமல் மீதி எடுக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al Elexbet matbet giriş matbet instagram unban x unban twitter unban palacebet setrabet