Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 30.08.2025
Share:

By Village Missionary Movement

Saturday, 30-Aug-2025

இன்றைய தியானம்(Tamil) 30.08.2025

 

BATTERY LOW

 

"என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது" - சங்கீதம் 94:19

 

இப்போது எல்லோருக்கும் நெருங்கிய, இரகசிய உறவாய் இருந்து ஒத்துழைப்பது செல்போன். வீட்டில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி தட்டு, டம்ளர் போல் செல்போனும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே வைத்திருக்கின்றனர். இதனை தினமும் சார்ஜ் போட்டு பேட்டரி Low ஆகாமல் பார்த்துக் கொள்கிறோம். எதற்காக Battery Low ஆகி விட்டால் விரைவில் switch off ஆகி விடும். அதனைப் பயன்படுத்த முடியாது. அடிக்கடி Battery Low ஆகி switch off ஆகி charge போட்டால் Battery சீக்கிரத்தில் பாழாகிவிடும்.

 

இப்படி சில ஆயிரங்கள் கொடுத்து கடைகளில் வாங்கக் கூடிய இந்த போனுக்கு அல்லது பேட்டரிக்கு இவ்வளவு கவனம் கொடுக்கிறோம். ஆனால் கடைகளில் பெறமுடியாத, விலையேறப்பெற்ற ஒன்றிற்கு தினமும் charge போட மறந்து விடுகிறோம். அது எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட ஒன்று. அது என்ன என்கிறீர்களா? அதுதான் ஆத்துமா! அதையும் தினமும் charge பண்ண வேண்டும். இல்லாவிட்டால் ஆத்துமா பலவீனப்பட்டு சிறுகாரியத்திலும் சோர்ந்து வீழ்ந்து விடும். வாழ்வு இருளாகி விடும். இதனை charge செய்ய தினமும் வேதம் வாசிக்க வேண்டும். ஜெபிக்க வேண்டும். போனுக்கு charge போட கரண்ட், charger போல வேதவாசிப்பும், ஜெபமும் இல்லாவிட்டால் சின்ன, சின்ன கவலைகள், கஷ்டங்கள் கூட நம்மை பெலவீனப்படுத்தி வீழ்த்தி விடும். ஜெபிக்கும் போது அவர் உதவிக்காக கெஞ்சுகிறோம். நம்மை அவருக்கு ஒப்படைக்கிறோம், அவரோடு நெருங்குகிறோம், ஆத்துமா பெலனடைகிறது. கவலைகள், சோர்வுகள் வரும்போது மட்டுமல்ல, தினசரி வழக்கமாகவும் ஜெபத்தைக் கைக்கொண்டால் நம் ஆத்தும பெலன் தேவனுக்கும், அவர் நிமித்தமாய் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக நம் வாழ்வைக் காத்துக்கொள்ளும். போனில் எப்போதெல்லாம் Battery Low ஆகிறதோ அப்போதெல்லாம் charge போடுகிறது போல் ஆத்துமாவுக்கும் charge தேவை. இஸ்ரவேலர் ஆத்துமா சிறுசிறு காரியத்தினால் சோர்ந்து முறுமுறுத்து கானானை இழந்தனர். ஆனால் காலேப், யோசுவா இதுவரை தேவன் செய்த காரியங்களை நினைத்து தங்களை charge பண்ணியதால் விசுவாச அறிக்கை செய்து கானானை சுதந்தரித்தனர்.

 

இதை வாசிக்கும் அன்பரே! ஆத்துமா மிகவும் விலையேறப்பெற்றது. அதனை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். கவலை, சோர்வு சிறிதளவில் வரும்போதே கவனியுங்கள். இல்லாவிட்டால் Battery Low ஆகி வாழ்வு இருளாகிவிடும். பின் கண்ணீர், கவலை மேற்கொள்ளும். இதற்கு எளிய வழி தினமும் காலையில் எழுந்ததும் ஜெபித்து, வேதம் வாசித்து charge போட்டு விடுவோம். charge போட்டும் இடையில் கவலைகள், சோர்வுகள் வந்தால் மீண்டும் ஜெபித்து அவர் கரத்தில் கொடுத்து charge போட்டுக்கொள்வோம். அப்போது நம் வாழ்வில் ஒரு வெளிச்சம் கிடைக்கும்.

- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்

 

ஜெபக்குறிப்பு:-

"கண்மணியே கேள்" நிகழ்ச்சி மூலம் வாலிப பெண்கள் கிறிஸ்துவின் போராயுதங்களாய் மாற ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş meritking meritking giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet holiganbet grandpashabet grandpashabet