Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 07.09.2025
Share:

By Village Missionary Movement

Sunday, 07-Sep-2025

இன்றைய தியானம்(Tamil) 07.09.2025

 

மைக்ரோஸ்கோப் (Kids Special)

 

"நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்." - சங்கீதம் 119:11

 

ஹலோ! செல்லங்களே, எப்படி இருக்கீங்க? இப்பொழுதுதான் school ஆரம்பித்தது போல் இருந்தது. காலாண்டு தேர்வு வந்துவிட்டது. Exam க்கு ரெடியா? Daily படிச்சிட்டீங்கனா exam easy யா எழுதிடலாம் o.k வா குட்டீஸ். o.k story கேட்கலாமா?

 

ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி வேலை பார்த்து விட்டு வீடு திரும்பும் போது ரொம்ப களைப்பாகி விட்டார். ஆத்துல ஓடுற தண்ணீரை தாகம் தீர குடித்துவிட்டு நடக்க ஆரம்பித்தார். இதை ஒரு ஆராய்ச்சியாளர் பார்த்தார். உடனே அய்யய்யோ, இந்த தண்ணீரை எதுக்கு குடித்தீர்கள்? இதில் எவ்வளவு கிருமி இருக்கிறது என்று தெரியுமா? இது உடம்புக்கு ரொம்ப கெடுதல் உண்டாக்கும். நீங்க என் கூட வாங்க நான் உங்களுக்கு இந்த தண்ணீரில் எவ்வளவு கிருமி இருக்கிறது என்று காட்டுகிறேன் என்று சொல்லி அவரை lab க்கு அழைத்துச் சென்றார்.  

 

அந்த தண்ணீரை மைக்ரோஸ்கோப் வைத்து பார்த்தால், அதில் புழுக்கள் நெழிகின்றன, பார்ப்பதற்கு அருவருப்பாக இருந்தது. விவசாயிக்கோ கடும் கோபம் வந்துவிட்டது. நான் குடித்த தண்ணீரில் இப்படி புழுவாக காட்டுதேன்னு நினைத்து கல்லை எடுத்துக் கொண்டு வந்து 'டம்மு' ன்னு அந்த மைக்ரோஸ்கோப் மீது போட்டு உடைத்து விட்டார். அச்சச்சோ என்ன இப்படி பண்ணிட்டீங்க விலை உயர்ந்த பொருளை உடைச்சிட்டீங்களே... என்றார். விவசாயிக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாததால், தான் குடிக்கின்ற தண்ணீரில் அருவருப்பான புழுவா காட்டுதுன்னு சொன்னதும், அவர் அறியாமையை அறிந்து, அவருக்கு புரியும்படி எடுத்துச் சொன்னார் அந்த ஆராய்ச்சியாளர். இங்க பாருங்க இந்த மைக்ரோஸ்கோப், தண்ணீரில் என்ன இருக்கிறதோ அதை மட்டும் தான் காட்டும். இப்படி அசுத்தமான தண்ணீரை குடித்தால் வியாதி வந்து விடும் என்று விளக்கமாய் சொன்னவுடன் அவரும் அதை புரிந்து கொண்டார்.

  

என்ன குட்டீஸ், மைக்ரோஸ்கோப் பற்றி நல்ல பாடத்தை சொல்லிக் கொடுத்து விட்டார் அந்த ஆராய்ச்சியாளர். கிருமிகளை கண்டு பிடிக்க மைக்ரோஸ்கோப் உதவி செய்வதை போல நமக்குள் இருக்கும் பாவங்களை கண்டு பிடித்து காட்டும் கண்ணாடி என்ன தெரியுமா? அது தான் "வேதம்". வேத வசனம் நம் பாவத்தை உணர்த்தி, நல் வழியில் நடக்க நமக்கு உதவி செய்யும் உண்மையான கண்ணாடி. Daily வேதத்தை வாசிங்க, ஒரு வசனத்தை மனனம் செய்யுங்க. அப்போதான் "பாவம்" என்ற கொடிய நோயிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும். இயேசுவின் இரத்தம் நம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் குட்டீஸ்.

- Sis. தெபோராள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al Elexbet matbet giriş matbet instagram unban x unban twitter unban holiganbet setrabet marsbahis giriş vaycasino giriş