Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 21.10.2025
Share:

By Village Missionary Movement

Tuesday, 21-Oct-2025

இன்றைய தியானம்(Tamil) 21.10.2025

 

எளிய உண்மை 

 

"...கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்..." - அப். 16:31

 

ஒருவர் தான் சைக்கிள் ஓட்டும் போது எவ்வளவு மைல்கள் ஓட்டுகிறோம் என்பதை அறிய விரும்பினார். எனவே தூரத்தை அளக்கும் கருவி ஒன்றை வாங்கினார். ஆனால் அதனை சைக்கிளில் இணைப்பது சிக்கலாக இருந்தது. எனவே அதை வாங்கின கடைக்கே திரும்பவும் அதை கொண்டு சென்றார். கடைக்காரர் அந்த கருவியை சிறிது நேரத்திலேயே அவர் சைக்கிளில் இணைத்து அதை வேலை செய்ய வைத்துவிட்டார். அப்போது தான் செய்ய வேண்டிய வேலையை அதற்குரியவர்கள் செய்தால் கடினமான வேலை என்று நினைத்தது கடினம் அல்ல என்பதை உணர்ந்தார்.   

 

நாமும் கூட நமது பாவத்திலிருந்து விடுதலையாகி, தேவனின் பிள்ளையாக மாறுவது கடினம் என நினைக்கிறோம். ஆனால் அப். 16:31 ல் "கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்" என்று கூறுகிறது. இது எவ்வளவு எளிய உண்மை?.   

 

நாம் எல்லாரும் பாவம் செய்து, தேவனுடைய உறவிலிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் நம்மை உண்டாக்கின தேவன், "இயேசு" என்ற பெயரில் இந்த பூமிக்கு வந்தார். (மத்தேயு 1:21) அவர் நம் பாவங்களை நீக்கி நம்மை இரட்சிப்பார் என்று கூறுகிறது. அவர் நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்து தீர்த்தார் என்றும், மரித்தோரிலிருந்து எழுந்தார் என்றும் வேதம் கூறுகிறது. இவ்வாறாக இயேசு கிறிஸ்து நமக்காகச் செய்ததை நாம் விசுவாசிப்பதின் மூலம், நாம் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடைய அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

        

 பிரியமானவர்களே! நாம் இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பது எவ்வளவு எளிது என்று யோசித்துப் பாருங்கள். நம்மில் அன்பு கூர்ந்து, தமது இரத்தத்தினாலே பாவங்கள் நீங்க நம்மை கழுவி, நம்மை ராஜாக்களாக, ராஜாத்திகளாக மாற்றின இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி சொல்வோமா? எனவே நாம் இவ்வாறாக அறிக்கையிடுவோம். தேவனே, நான் ஒரு பாவி என்று உணர்கிறேன். உமது பார்வையில் தவறான காரியங்களைச் செய்கிறேன். என் பாவங்களுக்காக சிலுவையில் மரிக்க இயேசுவை பூமிக்கு அனுப்பினீர் என்பதை நம்புகிறேன். அவரால் மட்டுமே என் பாவங்கள் மன்னிக்கப்பட முடியும் என்று விசுவாசிக்கிறேன்! என்று நம் பாவங்களை அறிக்கையிடும் போது இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரித்து விடும். நாம் பாவத்தினின்று விடுதலையாகி இரட்சிப்பின் சந்தோஷத்தை பெற்றுக்கொள்வோம். ஆமென்.

- A. பியூலா

 

ஜெபக்குறிப்பு:-

நான்கு நாட்கள் தங்கி ஊழியம் செய்வதற்கு தங்கள் இல்லங்களை மற்றும் சபைகளைத் திறந்து கொடுப்போர் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al Elexbet matbet giriş matbet instagram unban x unban twitter unban palacebet setrabet