Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 25.10.2025
Share:

By Village Missionary Movement

Saturday, 25-Oct-2025

இன்றைய தியானம்(Tamil) 25.10.2025

 

இழக்காத ஒன்று 

 

"...என் மீட்பர் உயிரோடிருக்கிறார்...” - யோபு 19:25

 

தேவபக்தியாய் வாழ்ந்த ஒருவர் திடீரென தன்னுடைய நல்ல வியாபாரத்தை இழந்தார். அதன் விளைவாக பல நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருந்த வேளையில், தன்னுடைய மனைவியையும் நோயினால் இழக்க நேரிட்டது. இவ்விதமாய் பல இழப்புகளின் நடுவாக கடந்து செல்ல நேரிட்ட போதும் தேவன் மீதுள்ள விசுவாசத்தையோ, நம்பிக்கையையோ அவர் இழந்து போகவில்லை. சோர்வுகளின் நடுவிலும் திடனிழந்து போகாத அவருடைய நிலை பலரை ஆச்சரியமடையச் செய்தது.

 

இத்தனை இழப்புகள் ஏற்பட்டும் மனதைரியத்தையும், நம்பிக்கையையும் இழக்காமல் இருந்ததற்கு அவர் சொன்ன காரணம் வித்தியாசமானது. என் சந்தோஷத்திற்கு சாதகமாய் இருந்த பல காரியங்களை நான் இழக்க நேரிட்ட போதிலும், நான் தேவனிடம் உள்ள உறவையோ, நம்பிக்கையையோ இழக்கவில்லை. தேவ உறவினால் வரும் சமாதானமும் ஆறுதலும் என்னை விட்டுப் போகவில்லை என்றார்.

 

உறவுகள், நட்புகள், ஆஸ்தி, அந்தஸ்துகள், நன்மதிப்புகள், மேன்மைகள் யாவற்றையும் நாம் எவ்வளவுதான் தக்கவைக்க முயற்சித்தாலும் சில சூழ்நிலைகளில் அவற்றை இழக்க நேரிடும். யோபுவுக்கு ஏராளமான செல்வம், நல்ல உறவுகள், பலவிதமான மேன்மைகள், நல்ல நட்புகள் என பல சாதகமான விஷயங்கள் இருந்தன. ஆயினும் கண் இமைக்கும் நேரத்தில் அவைகள் யாவற்றையும் இழந்தார். நல்ல பக்தியான வாழ்வு வாழ்ந்த போதிலும் அவற்றை கட்டி காத்து தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.

 

ஆயினும் இழந்து போகாத ஒன்று அவரோடு இருந்தது. அதுதான் தேவ உறவு சார்ந்த நம்பிக்கை. அந்த நம்பிக்கை தந்த பலத்தினால் தான் என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று கூறினார். அதுதான் அவரை நிலைகுலைந்து போகாமல் நிற்க வைத்தது. செல்வங்கள், உறவுகள், நட்புகள், அந்தஸ்துகள் யாவும் காணாமல் போன பின்பும் அந்த தேவ உறவு சார்ந்த விசுவாசம் தான் இருளின் நடுவில் ஒரு விளக்கு போல வெளிச்சம் தந்து தாங்கியது.

 

தேவபிள்ளைகளே! தேவ உறவை நாமாக இழக்காத வரையில், அந்த உறவினால் வரும் நம்பிக்கையையும், மன அமைதியையும், ஆறுதலையும், சந்தோஷத்தையும் நாம் இழந்து போவதில்லை. எந்த ஒரு இழப்பினையும் தாங்கும் சக்தி, தேவ உறவை இழக்காமல் பற்றி கொண்டிருப்பதினாலேயே வருகிறது.

            தேவனுக்காக எதையும் இழக்கலாம், ஆனால் 

            எதற்காகவும் தேவ உறவை இழந்துவிடக்கூடாது.

 

- Bro. எட்வின் சார்லஸ்

 

ஜெபக்குறிப்பு:-

50,000 கிராமங்களுக்கு சுவிசேஷம் அறிவிக்க, செல்லும் இடங்களில் தேவன் திறந்த வாசலை கட்டளையிட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş meritking meritking giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet holiganbet grandpashabet grandpashabet