Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 06-06-2021 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 06-Jun-2021

இன்றைய தியானம்(Tamil) 06-06-2021 (Kids Special)

 

அழகா? அன்பா?

 

“…மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.” – மத்தேயு 5:16

 

Hello, குட்டி செல்லங்களே! Birds உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்தானே. நீங்க என்னென்ன பறவைகள் எல்லாம் பார்த்திருக்கிறீங்க, சொல்லுங்க பார்க்கலாம். மயில், கிளி, கழுகு, காக்கா, கொக்கு, சிட்டுக்குருவி… புறா, வாத்து ஓ…. விட்டா சொல்லிக்கொண்டேயிருப்பீங்கதானே! ஆமா கிளி, வாத்து, புறா இதெல்லாம் வீட்டில செல்லமா வளருமல்லவா? அதுகூட விளையாடுவீங்க இல்லையா? இன்றைக்கும் இரண்டு பறவைகளுக்கிருந்த நட்பைப் பற்றி கதை கேட்கப் போறோம், ரெடியா? 

 

ஒரு காட்டில் நிறைய மரங்கள் பூத்துக் குலுங்கி, பார்ப்பதற்கு அழகான பச்சை நிறத்தோடு காட்சியளித்தது. அந்த காட்டில் நிறைய பறவைகள் வாழ்ந்து வந்தது. ஒவ்வொரு பறவை இனமும் கூடு கட்டி சந்தோஷமாக இருந்தது. அந்த காட்டில் நீல நிறமுள்ள அழகான பறவை ஒன்று வாழ்ந்து வந்தது. அது தன் அழகைக் குறித்து எப்போதும் பெருமைப்பட்டுக் கொள்ளும். என்னைப்போல கலரா, அழகா யாருமே இல்லை என்று நினைத்துக்கொள்ளும். அடிக்கடி தன் அழகை கண்ணாடியில் பார்த்து நான் எவ்வளவு அழகாயிருக்கிறேன் என்று மெச்சிக் கொள்ளும். தன்னைப் போல் அழகான பறவைகளோடு மட்டுமே நட்பு வைத்துக்கொண்டு சந்தோஷமாக இருக்கும். ஒருநாள் காகம் வந்து நானும், நீயும் நண்பர்களாக இருப்போம் என்றது. உடனே அழகான பறவைக்கு வந்தது பாரு கோபம், உன்னை நீ என்றைக்காவது கண்ணாடியில் பார்த்திருக்கிறாயா? நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன். உன்னோடு எப்படி friend-ஆக இருக்க முடியும் என்று திட்டி விட்டது. மிகுந்த கவலையோடு சென்று விட்டது காகம்.

 

சில நாட்களுக்குப் பிறகு அந்த அழகான பறவை உடல் பெலவீனமடைந்து, இறகுகளெல்லாம் உதிர்ந்து பார்ப்பதற்கு அசிங்கமாக இருந்தது. அதனால் பறந்து போய் உணவு தேட முடியவில்லை. தனக்கு நண்பர்களாய் இருந்த எல்லாரிடமும் உதவி கேட்டது. ஒரு பறவை கூட உதவி செய்யவில்லை. காகம் வந்து பார்த்தது, அழகான பறவையின் நிலைமையை புரிந்து கொண்டது. அதற்குத் தேவையான உணவை தேடிக்கொண்டு வந்து கொடுத்தது. அந்த பறவை நினைத்தது, “யாரை அழகு இல்லை, நீ எனக்கு friend ஆக இருக்க தகுதியில்லை என்று துரத்திவிட்டேனோ அந்த காகம் தான் எனக்கு எல்லா உதவியும் செய்து என்னை நேசித்தது. அழகு முக்கியமல்ல, அன்பு தான் சிறந்தது” என்பதை பறவை புரிந்து கொண்டது.

 

அன்பான தம்பி, தங்கச்சி! கதையை கேட்டீங்கள்ல. நீங்களும் அழகைப் பார்த்து, வசதியைப் பார்த்து friends -ஐ செலக்ட் பண்ணக்கூடாது. எந்த பாகுபாடும், வித்தியாசமும் பார்க்காம எல்லாரையும் நேசித்து, இயேசப்பாவின் அன்பை உன் மூலமா மற்றவர்கள் அறிந்து கொள்ள வழிகாட்டியாக இருக்கணும். Ok, டபுள் ok வா. Very good. Super.

- Mrs. ஜாஸ்மின்பால் பாண்டித்துரை  

 

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள

Whats app: 

தமிழில் பெற - +91 94440 11864

ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002

ஹிந்தியில் பெற - +91 93858 10496

தெலுங்கில் பெற - +91 94424 93250

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş matbet giriş matbet matbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet jojobet jojobet jojobet jojobet betgit radissonbet grandpashabet romabet nesinecasino grandpashabet casibom