Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 08.11.2025 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 09-Nov-2025

இன்றைய தியானம்(Tamil) 08.11.2025 (Kids Special)

 

உண்மை தரும் ஆசீர்வாதம்

 

"...கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்;..." - மத்தேயு 25:23

 

Hello குட்டிச் செல்லங்களே! Leave போடாம ஒழுங்கா School க்கு போறீங்களா? Super. செல்ல குட்டிகளே, எப்பவும் சும்மாவே இருக்கக் கூடாது. சோம்பேறியா இருந்தா நம்ம உள்ளம் பிசாசு தங்கும் இடமாய் மாறி விடும். Daily home work எழுத, ஜாலியா விளையாட, அம்மாவுக்கு help பண்ண, இப்படி உன்னை busy யா வைத்துக் கொள்ளணும் O.K வா. Cellphone, T.V பார்த்துக்கிட்டே இருந்தா அது உன்னை அடிமைப்படுத்திவிடும். உன் கண்ணும் பாதிக்கப்பட்டுவிடும். நமக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தில் கூட "JESUS" க்கு உண்மையா இருக்கணும். O.K story கேட்கலாமா?

 

ஒரு சின்ன குடும்பம் ஒன்று கிராமத்தில் சந்தோஷமாய் வாழ்ந்து வந்தது. அப்பா, அம்மா விவசாய வேலை பார்த்ததால் எப்பவுமே busy ஆக இருப்பாங்க. காய்கறி தோட்டத்தில் கிடைத்த வருமானத்தில் தான் குடும்பத்தை நடத்தி வந்தாங்க. ஏழாம் வகுப்பு படிக்கின்ற ரோஷன் கடினமாய் உழைக்கின்ற தன் பெற்றோருக்கு அவனால் முடிந்த உதவியை செய்து வந்தான்.

 

திடீரென்று அவனுடைய அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அம்மா தோட்டத்திற்கு போய், காய்கறிகளைப் பறித்து கொண்டு வருவார்கள். அதையெல்லாம் ரோஷன் தன் சைக்கிள்ல வைத்து மார்க்கெட்டுக்கு கொண்டு போய் விற்பான். ஆள் வராத நேரம் book ஐ எடுத்து homework பண்ணுவான். ஒரு நாள் அந்த மார்க்கெட்டுக்கு கலெக்டர் வந்தாங்க. படிக்கின்ற வயதில் ஏன் வியாபாரம் செய்கிறாய் என்று ரோஷனிடம் கேட்ட அவர், அவன் வீட்டின் சூழ்நிலையைத் தெரிந்து கொண்டார். உன் படிப்பிற்கு தேவையான எல்லா உதவிகளையும் நான் செய்கின்றேன் என்று சொல்லி, ரோஷனை "சபாஷ்" என்று கைகுலுக்கி பாராட்டிவிட்டுச் சென்றார். வீட்டிற்கு வந்த ரோஷன் நடந்த எல்லாவற்றையும் தன் பெற்றோரிடம் கூறினான். நீ வீட்டின் வேலைகளிலும், படிப்பிலும் உண்மையுள்ளவனாய் இருந்ததினால் இது உனக்கு கிடைத்த பரிசு தங்கமே! என்று சொல்லி அப்பா சந்தோஷப்பட்டாங்க. தொடர்ந்து ரோஷன் நன்றாக படித்தான். அந்த கலெக்டரும் அவனுக்கு உதவி செய்து கொண்டே இருந்தார். ஏன் தெரியுமா? அவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, கஷ்டப்பட்டு படித்து முன்னேறி வந்ததால் அப்படிப்பட்டவர்களுக்கு உதவி செய்து வந்தார். ரோஷனும் நன்றாகப் படித்து உயர்ந்த அரசு பணிக்கு சென்றான்.

 

அன்பு கண்மணி பிள்ளைகளே! எந்த கஷ்டமான சூழ்நிலையிலும் உண்மையா, சுறுசுறுப்பா இருந்தா போதும். அதை பார்க்கும் ஆண்டவர் உன்னை உயர்த்தி விடுவார்.

- Mrs.தெபோராள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet matbet giriş holiganbet holiganbet güncel holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet grandpashabet holiganbet grandpashabet grandpashabet grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş grandpashabet grandpashabet grandpashabet casinolevant grandpashabet meritking meritking giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş