By Village Missionary Movement
Sunday, 16-Nov-2025இன்றைய தியானம்(Tamil) 16.11.2025 (Kids Special)
விலகி ஓடு
"தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்" - நீதி. 8:13
Hello குட்டீஸ், டைனோசர் பற்றி உங்களுக்கு தெரியுமா? உங்க பாட்டி, தாத்தா இந்த டைனோசர் பற்றி கதையெல்லாம் சொல்லியிருக்காங்களா? ஆமா, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி வாழ்ந்து வந்தது தான் இந்த டைனோசர். இது வாழ்ந்த காலத்தில் தான் மற்றுமொரு விலங்கு இனமும் வாழ்ந்து வந்துச்சு. அந்த விலங்கை பார்க்க குட்டி கரடி போலத்தான் இருக்கும். அந்த மிருகம் பெயர் தான் நாசிடோன். அந்த நாசிடோன்கள் குடும்பம் குடும்பமாக, மலைகளிலும், குகைகளிலும் வாழ்ந்து வந்துச்சு.
இதில் ஒரு குடும்பம் தனது இரண்டு குட்டிகளுடன் சந்தோஷமாய் வாழ்ந்து வந்துச்சு. இவைகள் எப்போதுமே தான் வசிக்கும் இடத்தை ரொம்ப சுத்தமாக வைத்திருக்கும். இந்த நாசிடோன்கள் காலையில் எழுந்ததும் தனது இரண்டு குட்டிகளையும் கூட்டிக்கொண்டு வெளியில் சென்று, தாவரங்களை சாப்பிட்டு விட்டு இரவில் தனது குகைக்கு திரும்பி விடும். இப்படியே அனுதினமும் செய்து வரும். இதை அநேக நாட்களாக கவனித்துக்கொண்டிருந்த ஒரு ஓநாய், எப்படியாவது இந்த நான்கு பேரையும் அடித்துக் கொன்று சாப்பிட வேண்டும் என்று திட்டம் போட்டது. ஒரு நாள் இரவு, இந்த நாசிடோன்கள் தங்கள் குகைக்கு வருவதற்குள், அந்த ஓநாய் குப்பைகள், அழுகிபோன விலங்குகள், பறவைகளின் உடல் எல்லாவற்றையும் கொண்டு வந்து அந்த குகைக்குள் போட்டு விட்டது. இந்த நாசிடோன்கள் திரும்பி வந்த போது, தங்களது குகைக்குள் இருந்த அசுத்தத்தை கண்டு மிகவும் அதிர்ந்து போயின. எனவே உள்ளே போக மனதில்லாமல், தங்களை கறைபடுத்திக்கொள்ள விரும்பாமல், குகையின் வெளியே நான்கும் படுத்து உறங்கின. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஓநாய்கள் வந்து அவைகளைக் கொன்று சாப்பிட்டது. சிறிது நேரத்திற்குள் இந்த நாசிடோன் குடும்பமே அழிந்து போனது.
குட்டீஸ் பார்த்தீங்களா! எப்படி இந்த நாசிடோன்களை அழிக்க ஓநாய் தந்திரமாய் செயல்பட்டதோ, அது போலத்தான், இயேசப்பாவிடம் இருந்து உன்னை பிரிக்க பிசாசு பல வழிகளில் திட்டம் போடுவான். உன்னை பொய் பேச வைப்பான், அப்பா, அம்மாவை எதிர்த்து பேச வைப்பான், அதிக நேரம் phoneஐ பார்க்க வைப்பான், பிறரிடம் சண்டை போட வைப்பான், திருட வைப்பான். இப்படியெல்லாம் செய்து உன்னை இயேசப்பாவிடம் இருந்து பிரிக்கப் பார்பான். ஆனால் நீ அதுக்கெல்லாம் இடம் கொடுத்துவிடவேக் கூடாது. எப்படித் தங்களை அசுத்தங்களால் கறைபடுத்திக்கொள்ள மனதில்லாமல் இந்த நாசிடோன்கள் இருந்ததோ, அது போலத்தான், நீயும் இந்த உலக பாவங்களால் கறைபடாத படி உன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் o.k வா.
- Mrs. பாத்திமா செல்வராஜ்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864