Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 21.11.2025
Share:

By Village Missionary Movement

Friday, 21-Nov-2025

இன்றைய தியானம்(Tamil) 21.11.2025

 

விவசாயி

 

"சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமானம்; நீதிமானுடைய வழியோ ராஜபாதை." - நீதி. 15:19

 

ஒரு விவசாயிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். அந்த விவசாயி தன் இரண்டு மகன்களுக்கும் தனித்தனியே வயல்களையும், அதிலே விளையத்தக்க விதைகளையும் கொடுத்து அதை விதைக்கச் சொன்னார். தந்தையின் சொற்படி அந்த இரண்டு மகன்களும் விதைத்தார்கள். ஒரு மகன் அதற்கு தவறாமல் தண்ணீர் பாய்ச்சி, உரமிட்டு, வேலியடைத்து பாதுகாத்து வந்தான். மற்றொரு மகனோ விதைத்ததோடு சரி, அந்த வயிலின் பக்கம் போகவே வில்லை. மாதங்கள் சென்றன, மூத்த மகனின் வயலில் செடிகள் வளர்ந்து, பூத்து, காய்த்து, கனிகளைக் கொடுத்திருந்தது. இளையமகனின் வயலிலோ களைகளும் தேவையற்ற செடிகளும் வளர்ந்திருந்தது.  

 

ஒரு நாள் தகப்பனார் தன் இருமகன்களின் வயல்களையும் பார்க்கச் சென்றார். மூத்த மகனின் வயலைப் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டார். முட்காடாய் இருந்த இளைய மகனின் வயலைப் பார்த்து மிகவும் விசனமடைந்த தகப்பனார், இளையவனைப் பார்த்து சோம்பேறியே, உனக்கு கொடுத்த விதையை என்ன செய்தாய் என்று கேட்டார். அதற்கு அவன் அப்பா, நீங்கள் கொடுத்த விதைகளை விதைத்து விட்டு, பின்பு நான் அந்த வயலை பராமரிக்கவில்லை என்றான். கோபமடைந்த தகப்பன் பண்படுத்தாத பராமரிக்கப்படாத எந்த நிலமும் பலனைத் தராது என்றார்.

 

வேதத்தில் கூட மத்தேயு 25:15-18 வரை உள்ள வசனங்களில், பரலோகராஜ்யம் புறதேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன் தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது. ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒரு வனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்துமாகக் கொடுக்கப்பட்டது. ஐந்து தாலந்தை வாங்கினவன், வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தான். இரண்டு தாலந்தை வாங்கினவனும், வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான். ஒரு தாலந்தை வாங்கினவனோ, அதை நிலத்தில் புதைத்து வைத்தான். எஜமான் திரும்பி வந்தபோது, ஐந்து தாலந்தை வாங்கினவனும், இரண்டு தாலந்தை வாங்கினவனும் தாங்கள் சம்பாதித்திருந்ததை காண்பித்தனர். ஆனால் ஒரு தாலந்தை வாங்கினவனோ அதை புதைத்து வைத்ததை அவர் அறிந்து, அவனிடத்திலிருந்த ஒன்றை எடுத்து, பத்துத் தாலந்துள்ளவனுக்குக் கொடுத்து, பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார்.

 

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் நமக்கு அநேக தாலந்துகளையும், திறமைகளையும் தந்திருக்கிறார். தாலந்து இல்லாதவர்கள் எவருமில்லை. அவைகளை மறைத்து வைக்காமல், சோம்பேறியாய் இருந்து விடாமல், அந்த தாலந்துகளை ஆண்டவருக்காக பயன்படுத்துவோம். அப்பொழுது நமது எஜமானாகிய இயேசுவின் உள்ளம் சந்தோஷப்படும்.

- B. சுபாஷ்   

 

ஜெபக்குறிப்பு:-

எழுப்புதல் வாலிபர் முகாமில் ஊழியத்திகென்று அர்ப்பணித்த பிள்ளைகள் அர்ப்பணிப்பில் நிலைத்து நிற்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al deneme bonusu deneme bonusu veren siteler online casino online casino perabet perabet giriş perabet perabet giriş perabet perabet giriş perabet güncel giriş jojobet jojobet giriş jojobet güncel giriş Holiganbet Holiganbet Giriş Holiganbet Güncel Giriş Superbetin Superbetin Giriş Superbetin Güncel Giriş pashagaming pashagaming giriş pashagaming güncel giriş betcio Betcio Giriş betcio güncel giriş atlasbet atlasbet giriş atlasbet güncel giriş Piabet Piabet Giriş Ngsbahis Ngsbahis Giriş İnterbahis İnterbahis Giriş Klasbahis Klasbahis Giriş Coinbar Coinbar Giriş Limanbet Limanbet Giriş İmajbet İmajbet Giriş Restbet Restbet Giriş Matbet Matbet Giriş Jasminbet Jasminbet Giriş Belugabahis Belugabahis Giriş Online casino nz Best payout online casino nz matbet jojobet jojobet giriş jojobet güncel giriş bahsegel bahsegel bahsegel matbet romabet lunabet