Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 21.12.2025 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 21-Dec-2025

இன்றைய தியானம்(Tamil) 21.12.2025 (Kids Special)

 

மானிடனாய் பிறந்த இயேசு

 

“...இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்” - லூக். 2:10

 

ஹலோ குட்டீஸ், நீங்க ரொம்ப ஆசையோடு எதிர்பார்க்கிற கிறிஸ்துமஸ் ரொம்ப பக்கத்தில் வந்து விட்டதல்லவா? Jolly தானே!

 

அன்னைக்கு டிசம்பர் 24 ஆம் தேதி நாலாம் வகுப்பு படிக்கும் ஏஞ்சலுக்கு ஒரு பெரிய சந்தேகம் வந்தது. "இயேசப்பா ஏன் மனுஷ ரூபம் எடுத்து இந்த உலகத்துல பிறக்கணும்? அவர் கடவுளாகவே இருந்து மனிதர்களிடத்தில் பேசலாமே!” என்று பல கேள்விகள் இருந்தது. அப்படி யோசிச்சிட்டு ஜன்னல் பக்கம் போன போது, டிசம்பர் மாதம் பனி விழும் காலமாக இருந்தபடியால் அங்கு ஒரு மரத்தில் ஒரு குட்டி குருவி குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது. அதை பார்த்து ஏஞ்சல் அந்த குருவிக்கு உதவி செய்ய நினைத்தாள். ஓடி சென்று கார் செட் கதவை திறந்து விட்டு, அந்த குருவியை உள்ளே வந்து குளிர் காயுமாறு அழைத்தாள். இவள் எவ்வளவோ கூப்பிட்டும் அந்த குட்டி குருவி உள்ளே வரவே இல்லை. ஏஞ்சலுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த நேரத்தில் இன்னொரு குருவி அந்த மரக்கிளையில் வந்து அமர்ந்தது. அதுவும் குளிர் தாங்க முடியாமல் சுற்றும் முற்றும் பார்த்து திறந்திருந்த கார் செட்டை கண்டதும் பறந்து உள்ளே வந்தது. அதை கண்ட குட்டி குருவி தானும் அதை பின்தொடர்ந்து கார் செட்டுக்குள் வந்து அங்குள்ள விளக்குக்கு அருகில் அமர்ந்து குளிர் காய ஆரம்பித்தது.

 

இதை பார்த்துக் கொண்டிருந்த எஞ்சலுக்கு அப்பொழுதுதான் புரிய ஆரம்பித்தது. இயேசு மனுஷகுமாரனாக இந்த உலகத்தில் பிறந்து நாம் எவ்வாறு

வாழ வேண்டும், எவ்வாறு பரலோகம் சேர்வது என்று நமக்கு மாதிரி வைத்துப் போய் இருக்கிறார் என்று. அப்படி என்ன மாதிரி வைத்துப்போனார் என்று நினைக்கிறீர்களா? இயேசு கிறிஸ்து, தன் தாயாகிய மரியாளுக்கும், யோசேப்பிற்கும் கீழ்ப்படிந்து நடந்ததினிமித்தம், நாம் பெற்றோருக்கு கீழ்ப்படிய கற்றுக் கொடுத்திருக்கிறார். அவர் கடவுளாய் பரலோகத்திலிருந்து "பெற்றோருக்கு கீழ்ப்படி" என்று சொன்னால், நாம் என்ன சொல்லி இருப்போம்? அது எவ்வளவு கஷ்டம் என்பது கடவுளுக்கு தெரியுமா என்று கூட சொல்லியிருப்போமல்லவா ? இப்படி நமக்கு ஒரு மாதிரியாக வாழவே இந்த பூமிக்கு மனிதனா பிறந்தாரு. இந்த செய்தியை சந்தோஷமாய் friends க்கு சொல்ல ஏஞ்சல் முடிவு எடுத்தாள்! என்ன குட்டீஸ், நீங்களும் உங்களுக்கு தெரிஞ்சவங்க, உங்க friends எல்லாருக்கும் இயேசு மனுஷ குமாரனாக பிறந்த ரகசியத்தை சொல்லுவீங்களா? அப்ப இயேசப்பா உங்களை பார்த்து ரொம்ப சந்தோஷப்படுவாங்க O.K வா.

- Mrs. ஐடா கிங் டேவிட்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş matbet giriş matbet matbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet jojobet jojobet jojobet jojobet betgit radissonbet grandpashabet romabet nesinecasino grandpashabet casibom