Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 21.01.2026
Share:

By Village Missionary Movement

Wednesday, 21-Jan-2026

இன்றைய தியானம்(Tamil) 21.01.2026

 

பறந்த பஞ்சு                           

 

"உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்" - மத்தேயு 5:37

 

ஒரு பெண் தனது சபை ஆயரை குறித்து துர்ச் செய்தி ஒன்றை யாவருக்கும் பரப்பினாள். சில நாட்களுக்கு பிறகு அது வதந்தி என்று அறிந்து, மிகவும் மனம் வருந்தினாள். எனவே என்ன செய்வது என்று யோசித்து ஒரு முடிவாக தான் செய்த தவறுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆயரிடம் சென்றாள். ஆயர் அவளைப் பார்த்து உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார். அவளோ அழுத வண்ணமாக என்னை மன்னித்து விடுங்கள் ஐயா என்றாள்.  

 

ஆயர், அவளை மேல் மாடிக்கு அழைத்துச் சென்றார். மேல் மாடிக்கு போகும் போது ஒரு தலையணையை தன் கையில் எடுத்துச் சென்று, அந்த தலையணையை பிரித்து அதிலிருந்த பஞ்சுகள் அனைத்தையும் நாலா பக்கங்களிலும் சிதறி எறிந்து பறக்க விட்டார். பின்பு அவளை அழைத்து மகளே, நீ போய் எல்லா பஞ்சுகளையும் மீண்டும் சேகரித்து வா என்றார். உன்னால் முடியுமா? முடியாது அல்லவா ஏன்? பஞ்சு காற்றில் பல பகுதிகளுக்குப் போயிருக்கும். அது எங்கே போயிருக்கும் என்று தெரியுமா என்றார். அப்போது அவள், தான் செய்த தவறு எவ்வளவு பெரிதானது என்பதை உணர்ந்து தலை குனிந்து நின்றாள்.

 

நாம் பேசுகிற ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்று பரிசுத்த வேதாகமத்தில் எழுதியுள்ளது. ஆதலால் வீண் வார்த்தைகளுக்கு நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். "வார்த்தையை கொட்டி விட்டால் அதை திரும்ப அள்ள முடியாது" என்பார்கள். நாம் பேசுகிற அனைத்து வார்த்தைகளும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவற்றை நாம் திரும்ப பெற முடியாது.

 

பிரியமான தேவ பிள்ளைகளே! முதலாவது நாம் பேசப்போவது நலமானதா? பயனுள்ளதா? இல்லை பயனில்லாததா என்று பார்க்க வேண்டும். அதுவும் மற்றவர்களை குறித்து பேசவே கூடாது. அப்படி பேசும்போது நாம் தான் பெரிய குற்றங்களை செய்தவர்களாக காணப்படுவோம். நாம் வீண் வார்த்தைகளை வெறுத்து, பக்தி விருத்திக்கு ஏதுவான நலமான வார்த்தைகளை பேசுவோம். அப்படி பேசுவதே தேவனுக்கும் பிரியமானது, நமக்கும் நலமானது. வார்த்தைகளுக்கு எச்சரிக்கையாயிருப்போமாக! ஆமென்! 

- Mrs. எப்சிபா இம்மானுவேல் 

 

ஜெபக்குறிப்பு:-

ஓடிசாவிலுள்ள நம் ஊழியர்களைத் தேவன் வல்லமையாய் பயன்படுத்த 

ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş meritking meritking giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet holiganbet grandpashabet grandpashabet