Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 27.01.2026
Share:

By Village Missionary Movement

Tuesday, 27-Jan-2026

இன்றைய தியானம்(Tamil) 27.01.2026

 

சொற்களின் மிகுதி           

 

"சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது;..." - நீதி. 10:19

 

சில சமயங்களில் ஒரு மனிதர் மேல் நமக்கு மதிப்பு வருவது அவருடைய பேச்சு, நடத்தையை வைத்து தான். ஆம், நாவின் வார்த்தைகளால் ஒரு மனிதனை உயர்ந்தவனாகவும் காட்டக்கூடும், அதே சிறிய நாவு நம் சரீரத்தை மட்டுமல்ல நம் ஆவி, ஆத்துமாவையும் கூட சேர்த்துக் கறைபடுத்திவிடும்.

 

Believers Church ஸ்தாபகர் கே.பி. யோகன்னன் ஐயா ஒரு முறை ஊழியர் ஒருவரின் தவறைச் சுட்டிக் காண்பிக்கும்போது, தன் பெயரைச் சொல்லி, தான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்றார். வீணான வார்த்தைகளை அவர் பயன்படுத்தவில்லை. அநேக நேரங்களில் ஒருவரின் குறைகளை பிறரிடம் சொல்லி, நம்மை நல்லவர்கள் போல் காட்டிக்கொள்ள முற்படுகிறோம்.

 

வேதத்தில் இதை உணர்த்தும் வகையில் ஒரு முத்தான சத்தியத்தையும் பரிசுத்த ஆவியானவர் நமக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார் 1 கொரி.1:10-12 வரை உள்ள வசனங்களில், விசுவாசிகளிடம் பிரிவினை வாக்குவாதம் காணப்பட்டபோது பவுல், "என் சகோதரரே, உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் வீட்டாரால் உங்களைக்குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது" என்றார். இந்த வீட்டார், அவதூறான வார்த்தைகளை திரித்துக் கூறாமல், பிரச்சனையை தெளிவாக தன் பெயரால் பவுலுக்கு தைரியமாகச் சொல்லுகிறார்கள். ஆம், வீணாக மற்றவர்களிடம் சென்று அவதூறு சொல்லாமல் தலைமையாக இருக்கும் பவுலிடம் காரியத்தைச் சொல்லக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

 

நாம் மற்றவர்களை குறித்து குறை கூறுகிறவர்களாய் இருக்கிறோமா? நம் வார்த்தைகளைக் குறித்து நாம் நிச்சயமாக கணக்கு ஒப்புவிக்க வேண்டும். சொற்களின் மிகுதியால் பாவம் இல்லாமல் போகாது. நடந்தவற்றை மிகைப்படுத்தி, பிறரைக் குற்றப்படுத்தி பேசி, நம்மை நாமே கறைப்படுத்திக் கொள்ளாமல், எல்லாவற்றையும் குறித்து தாழ்மையான இருதயத்தோடும், மிகுந்த பயபக்தியோடும் தேவனிடம் சொல்ல பழகுவோம். நாம் நீதிமான்களல்ல, குறைவுள்ளவர்கள் தான். வேத வசனத்தின் அடிப்படையில் நம்மைக் காத்துக்கொள்வோம். வேத வசனத்தினால் நம் இருதயத்தை நிரப்புவோம்.

- Sis. எஸ்தர் செல்வி

 

ஜெபக்குறிப்பு:-

பள்ளி ஊழியங்களில் வசனத்தைக் கேட்ட சிறுவர்கள் கர்த்தருக்குள் நிலைத்திருக்க

ஜெபியுங்கள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking perabet casibom holiganbet galabet casibom perabet perabet giriş padişahbet padişahbet giriş grandpashabet kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet casinomilyon jojobet palacebet sonbahis tambet grandpashabet betgit mercurecasino matbet