Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 13.02.2026
Share:

By Village Missionary Movement

Friday, 13-Feb-2026

இன்றைய தியானம்(Tamil) 13.02.2026

 

இளமை பருவம் - இனிய பருவம்

 

"நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை;..." - பிரசங்கி 12:1

 

அமெரிக்காவைச் சேர்ந்த ராக்பெல்லர் என்பவர் உலகின் மிகப்பெரிய பணக்காரரில் ஒருவர். அவர் ஒரு முறை நடைப்பயிற்சி சென்றபோது, ஒரு நல்ல திடகார்த்தமான, அழகான வாலிபன் தற்கொலை செய்ய முயன்று கொண்டிருந்தான். அவனைத் தடுத்த ராக்பெல்லர் காரணம் கேட்டார். நான் மிக உயர்ந்த கல்வி கற்றும், அதற்கேற்ற ஊதியமோ, வேலையோ எனக்கு கிடைக்கவில்லை. மிகுந்த வறுமை நிலையிலுள்ள என் வாழ்வில் மகிழ்ச்சி என்பதே துளியுமில்லை. எனவே தான் இந்த முடிவை எடுத்தேன். நீங்கள் யார்? என்றான். அப்போது தான் மிகப்பெரிய செல்வந்தர் என்று ராக்பெல்லர் தன்னை அறிமுகம் செய்தார்.

 

உடனே அந்த வாலிபன் ஐயா, நீங்கள் எல்லா வசதிகளுடனும் சந்தோஷமாக, சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் செல்வத்தின் ஒரு பகுதியைத் தந்தால் கூட நானும் மகிழ்ச்சியாக வாழ்வேனே என்றார். ராக்பெல்லர் ஒரு பகுதி என்ன, என் செல்வம் அனைத்தையும் தந்து விடுகிறேன். ஆனால் நீ எனக்கு ஒன்று தர வேண்டும் என்றார். நானோ பரம ஏழை, என்னால் உங்களுக்கு என்ன தர இயலும்? என்றான். விலை மதிக்க முடியாத உன் இளமையை எனக்குத் தர வேண்டும் தருவாயா? என்றார். எத்தனை செல்வங்கள் இருந்தாலும் இளமைக்கு ஈடாகாது என்பதை புரிந்து கொண்ட அந்த வாலிபன் உழைத்து முன்னேற தீர்மானித்தான். ஆம், துடிப்பான துள்ளலான இளமைப் பருவமே விலைமதிப்பில்லாத சொத்து. அதை நம்மில் பலரும் உணர்ந்து கொள்வதில்லை. 

 

சமூக வலைத்தளம் உன்னை கவிழ்க்க, அழிக்க உன்னோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. சினிமா மோகம், கவர்ச்சி, போதை வஸ்துக்களின் ஈர்ப்பு, பாலியல் இச்சைகள்.... இன்னும் ஏராளம் ஏராளம். உன் விலை மதிப்பில்லாத இந்த வாலிபத்தை இவ்வுலக சிற்றின்பங்களுக்கு இடம் கொடுத்து இழந்து போகாதே. இளமையில் நீ செய்யும் தவறுகள் முதுமை வரை இரகசியமாக உன்னைத் தொடர்ந்து, உன்னை அவமானத்தில் கொண்டு நிறுத்தும்.

 

எனக்கன்பான வாலிப செல்வங்களே, விழிப்பாயிரு! மனம் திரும்பு! வாலிபப்பிராயத்தில் உன் சிருஷ்டிகரை நினை. அவர் கரங்களில் உன்னை ஒப்புக் கொடு. தேவன் உன்னை பாதுகாப்பார், ஆசீர்வதிப்பார்.

- Mrs. சரோஜா மோகன்தாஸ்

 

ஜெபக்குறிப்பு:-

மிஷனெரி பயிற்சி கட்டிடம் கட்டுவதற்கான பணத் தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet matbet giriş holiganbet holiganbet güncel holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet grandpashabet holiganbet grandpashabet grandpashabet grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet meritking meritking giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş