Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 08.03.2026 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 08-Mar-2026

இன்றைய தியானம்(Tamil) 08.03.2026 (Kids Special)

 

டேனியின் School Bag எங்கே?

 

 "...மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்." - கலாத்தியர் 6:7

      

பசுமையான புல்வெளிகளும், அழகான நீரோடைகளும் நிறைந்த கிராமம்தான் டேனியின் கிராமம். இவன் பயங்கர சுட்டி பையன், வாயாடியும் கூட. இந்த டேனி யாரையும் ஈசியாக ஏமாற்றி விடுவான். ஒவ்வொரு நாளும் School போவதற்கு வீட்டை விட்டு சீக்கிரமாகவே கிளம்பி விடுவான். கொஞ்சம் late ஆனாலும் அவங்க அம்மாவை பயங்கரமாக திட்டுவான். அவனுக்கு பயந்து டேனியின் அம்மா சீக்கிரம் சமைத்து கொடுத்து விடுவார்கள். மற்றொரு பக்கம் அவனின் இந்த நல்ல ஒழுக்கத்தை கண்டு சந்தோஷமும் அடைந்தார்கள். வீட்டை விட்டு சீக்கிரமாக கிளம்பிய டேனி போகும் வழியில் தனது friend வீடு, மாமா வீடு என்று அரட்டை அடித்து விட்டு late ஆக தான் school க்கு செல்வான். அங்கு சென்று நண்பர்களோடு அரட்டை அடிப்பான். ஆசிரியர்கள் அவனை பலமுறை கண்டித்தும் அவன் பொருட்படுத்தவே இல்லை. ஆனால் வீட்டில் மட்டும் நல்ல பிள்ளை போல் நடித்து விடுவான்.

      

 ஒருநாள் டேனியின் வகுப்பு ஆசிரியர் அவன் வீட்டிற்குச் சென்று அவன் அம்மாவிடம் இவனது ஒழுங்கீனத்தை சொல்லி எச்சரித்தார். ஆசிரியர் சொன்ன எதையும் அவன் அம்மா நம்பவில்லை. என் மகன் நல்ல பிள்ளை என்று சொல்லி ஆசிரியரை அனுப்பிவிட்டார்கள். ஆசிரியர் ஏமாற்றத்துடன் போனது டேனிக்கு பயங்கர சந்தோஷம். மறுநாள் வழக்கம் போல சீக்கிரமாகவே எழுந்து கிளம்பி டேனி school க்கு late ஆக சென்றான். school முடிந்தவுடன் அவனது நண்பர்களை அழைத்துக்கொண்டு, அவர்கள் ஊர் அருகில் உள்ள ஆற்றண்டைக்கு சென்று அங்கே விளையாடினார்கள். விளையாடிக்கொண்டிருக்கும் போதே டேனி நைசாக வந்து மரத்தடியில் வைத்திருந்த அவனது நண்பர்களின் bag களில் ஒன்றை எடுத்து ஒளித்து வைத்துவிட்டு, ஒன்றுமே தெரியாதது போல் மீண்டும் அவர்களுடன் விளையாடினான். விளையாடி முடித்து எல்லோரும் வந்து bag ஐ எடுத்தார்கள். அதில் ஒருவன் bag மட்டும் காணவில்லை. அவன் அழத்தொடங்கினான். அதை பார்த்து டேனி மனதிற்குள் சிரித்துக் கொண்டே, அவனுடைய bag ஐ எடுக்க போனான். அதையும் காணவில்லை. பதற்றத்துடன் அங்கும் இங்கும் தேடினான். பார்த்தால் அவன் புத்தக பேப்பர் காற்றில் பறந்து கொண்டிருந்தது. மரத்து மேலே பார்த்த டேனி அதிர்ந்து போனான். ஏனெனில் டேனியின் bag ஐ குரங்கு எடுத்துக்கொண்டு போய் மரத்தின் மேல் வைத்து ஒவ்வொரு பக்கமாய் கிழித்துக்கொண்டிருந்தது. அப்பொழுதுதான் டேனிக்கு புத்தி வந்தது. மற்றவர்களை ஏமாற்ற நினைத்தோம். இப்பொழுது நாமே ஏமாந்து விட்டோம் என்று.

      

தம்பி தங்கச்சி, பார்த்தீர்களா டேனி மற்றவர்களை ஏமாற்ற நினைத்தான். கடைசியில் அவனே ஏமாந்து போய்விட்டான் எப்போதுமே மற்றவர்களை ஏமாற்றியே வாழ முடியாது.

- Mrs. சாராள் சுபாஷ்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş holiganbet güncel holiganbet giriş holiganbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom meritking perabet casibom holiganbet galabet casibom padişahbet padişahbet giriş grandpashabet ibizabet tambet grandpashabet jojobet nesinecasino betbey betgit grandpashabet betpuan cashwin matbet meritking perabet perabet giriş instagram ban service betsilin betsilin giris pashagaming pashagaming giris gorabet gorabet giris kralbet holiganbet grandpashabet grandpashabet giriş holiganbet giriş çarkbet çarkbet giriş deneme bonusu