Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 10.03.2026
Share:

By Village Missionary Movement

Tuesday, 10-Mar-2026

இன்றைய தியானம்(Tamil) 10.03.2026

 

பங்களிக்கும் சிருஷ்டிகள்            

 

"...அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே,... கர்த்தரைத் துதியுங்கள்" - சங்கீதம் 148:8-12

     

சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து சிருஷ்டிகளும் அவர் சொல்லுக்கு கீழ்ப்படிந்து, அவருக்கு தங்கள் பங்களிப்பை அளிக்கிறது. கடலைப்பார்த்து இரையாதே அமைதலாயிரு என்றவுடன், கீழ்ப்படிந்து அமைதலானது. செங்கடல் அவருக்கு கீழ்ப்படிந்து, இஸ்ரவேலருக்கு பாதையை கொடுத்து இஸ்ரவேலர் கானானுக்குச் செல்ல தனது பங்களிப்பை அளித்தது. இப்படி சிருஷ்டிப்புகள் சிருஷ்டிகளுக்கு கீழ்ப்படிந்து செய்ததை வேதம் முழுவதும் பார்க்க முடியும். ஒரு தனிமனிதனின் வாழ்வில் தேவன் அற்புதம் செய்ய காலசூழ்நிலைகள் கீழ்ப்படிந்த ஒரு சம்பவத்தைக் காண்போம்.

     

அமெரிக்காவில் கேன்சருக்கான மருந்து ஆராய்ச்சிக்காக Dr. Mark என்பவருக்கு ஒரு விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் சென்ற விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரை இறக்கப்பட்டது. அடுத்த விமானம் 10 மணி நேரம் கழித்து தான் என்றவுடன், குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல வாடகை கார் ஒன்றை எடுத்து புறப்பட்டார். அப்பொழுது அதிக பனி பொழிவின் காரணமாக தவறான பாதையில் வந்து விட்டதை உணர்ந்தார். சோர்ந்து போனநிலையில் அங்கு ஒரு வீடு தென்பட்டது. அங்கு சென்று போன் செய்து தெரிந்தவர்களிடம் உதவி கேட்கலாம் என்று கதவைத் தட்டினார். அங்கு ஒரு இளம் பெண் அவரை வரவேற்றாள். எங்கள் வீட்டில் போன் இல்லை, எனவே சிறிது நேரம் இளைப்பாறி செல்லுங்கள் என்று அவருக்கு டீயும், பிஸ்கட்டும் கொடுத்தாள். அது அவளுடைய ஜெப நேரமாக இருந்ததால் தாங்களும் கலந்து கொள்ளலாமே என்றாள். அதற்கு அவர் கடவுள் மேல் நம்பிக்கை இல்லை. என் உழைப்பின் மேலேயே என் நம்பிக்கை உள்ளது என்றார். அவளும் குழந்தையின் தொட்டில் அருகில் முழங்கால் படியிட்டு உருக்கமாக ஜெபித்ததைப் பார்த்த Dr. Mark அவர்களுக்கு ஏதோ ஒரு தேவை இருப்பதை உணர்ந்தார். நீ எதற்காக ஜெபித்துக் கொண்டிருந்தாய் என்று கேட்டார். தனது சிறிய மகனுக்கு அரிய வகை கேன்சர் என்றும், Dr. Mark என்பவரால் மட்டுமே குணப்படுத்த முடியும். ஆனால் அவரிடம் செல்ல தங்களுக்கு பண வசதி இல்லை என்றும், தன் ஜெபத்தைக் கேட்டு நிச்சயம் ஒரு நாள் தேவன் வழி திறப்பார் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன் என்றாள். இதைக் கேட்ட வியப்படைந்த Dr. Mark அவரின் கண்களில் கண்ணீர் வழிந்தது. நான் பெற இருந்த விருதினை விட இந்த குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதை பாக்கியமாக நினைக்கிறேன் என்றார். தாயின் ஜெபத்தைக் கேட்டு, கர்த்தர் இயற்கைக்கு கட்டளையிட்டு, பயணத்தை தடை செய்து Dr. Mark ஐ அழைத்து வந்தார். ஆம், நம் தேவன் ஒரு பெருங்கூட்ட இஸ்ரவேல் ஜனங்களுக்கு மாத்திரமல்ல, ஒரு மனிதனுக்காகவும் இயற்கையை கீழ்ப்படியச் செய்கிறார். தேவன் வனாந்தரத்தில் வழியையும் அவாந்திர வெளியில் ஆறுகளையும் உண்டாக்குவார் விசுவாசியுங்கள். இவ்வாறாக உங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் அற்புதத்தைச் செய்வார். அதே வேளையில் இயற்கையே தேவனின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, தன் பங்களிப்பை தேவனுக்குக் கொடுக்கும்போது, நாம் எவ்வளவாய் அவரது வார்த்தைக்கு கீழ்ப்படிந்து தேவ சித்தத்தை நிறைவேற்றுவதின் அவசியத்தை உணர்வோம். ஆமென்.   

- Mrs. பாத்திமா செல்வராஜ்

 

ஜெபக்குறிப்பு :-

ஒடிசாவில் பாத்கர்காண்டியில் கட்டப்படும் ஆலய கட்டுமான பணிக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet holiganbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom meritking perabet casibom holiganbet galabet casibom padişahbet padişahbet giriş grandpashabet ibizabet tambet grandpashabet jojobet nesinecasino betbey betgit grandpashabet betpuan cashwin matbet meritking perabet perabet giriş instagram ban service betsilin betsilin giris pashagaming pashagaming giris gorabet gorabet giris kralbet holiganbet grandpashabet grandpashabet giriş holiganbet giriş çarkbet çarkbet giriş