Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 11.03.2026
Share:

By Village Missionary Movement

Wednesday, 11-Mar-2026

இன்றைய தியானம்(Tamil) 11.03.2026

 

மோசேயின் கோல்    

 

"கர்த்தர் அவனை (மோசே) நோக்கி: உன் கையிலிருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான்” - யாத்.4:2

          

 இஸ்ரவேல் ஜனங்களின் கூக்குரலை கேட்டு, ஆளோட்டிகளின் நிமித்தம் அவர்கள் படும் பாடுகளை பார்த்து தேவன் அவர்களை விடுவிக்கும்படி மோசே என்ற ரட்சகனைத் தெரிந்து கொண்டார். அப்பொழுது மோசே ஆண்டவரிடம் நீர்தான் என்னை அனுப்பினீர் என்று ஜனங்கள் என்னை எப்படி நம்புவார்கள் என்று கேட்டார். அப்பொழுது ஆண்டவர் மோசேயிடம், உன் கையில் என்ன இருக்கிறது என்று கேட்டார். அதற்கு மோசே கோல் என்று சொன்னார். அதைத் தரையிலே போடு என்றார்; அவன் அதைத் தரையிலே போட்ட போது, அது சர்ப்பமாயிற்று; அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: உன் கையை நீட்டி, அதின் வாலைப் பிடி என்றார். அவன் அதைப் பிடித்த போது, அது அவன் கையிலே கோலாயிற்று. ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்குத் தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார். அவர் கையிலிருந்த கோலைக் கொண்டு பார்வோனின் முன்பாகவும், எகிப்தின் ஜனங்கள் முன்பாகவும், இஸ்ரவேல் ஜனங்களின் கண்களுக்கு முன்பாகவும் பல அற்புதங்களை தேவன் செய்தார். ஆம், மோசேயின் கையில் இருந்ததைக் கொண்டு தேவன் செயல்பட்டார். 

          

அதே போல இளைஞன் தாவீது, கோலியாத்தை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் போது, அவன் கையில் பட்டயம் இல்லாதிருந்தது என்று வேதம் சொல்லுகிறது. ஆனால் தாவீதின் கையில் அவனுக்கே உரிய கவணும், கல்லும் இருந்தது. தேவன் அதை கொண்டு பெரிய கோலியாத்தை வீழ்த்தினார் பாருங்கள்! தேவனுக்கு நம் கையில் உள்ளதை கொண்டு நம் பங்களிப்பை கொடுத்தால் போதும். இல்லாத ஒன்றையோ, நாம் பெற்றுக் கொள்ளாத ஒன்றையோ எண்ணி இது எனக்கு இல்லையே என்று கவலைப்பட்டு, அது இருந்தால் என்னால் பெரிய காரியங்களை தேவனுக்காக செய்ய முடியுமே என்று சோர்ந்து போக வேண்டியதில்லை. மோசேயின் கையிலிருந்த கோலைப் போல, தாவீதின் கையிலிருந்த கவணைப் போல, நம் ஒவ்வொருவரிடமும் ஆண்டவர் ஏதோ ஒன்றைக் கொடுத்து, அவருடைய நாமத்தின் மகிமைக்காக பயன்படுத்த விரும்புகிறார். என்னிடம் ஒன்றும் இல்லை என்று எவரும் சொல்ல முடியாது. தாலந்து பெறாதவர்கள் இவ்வுலகில் யாரும் இல்லை.

 

ஆகவே நம் கையில் இருப்பதைக் கொண்டு தேவனுக்காக நமது பங்களிப்பை கொடுத்து தேவ ராஜ்யம் கட்டப்பட, உலகம் சுவிசேஷமயமாக்கப்பட இயன்றதை செய்வோம். தேவன் மகிமைப்படுவார்.

- Mrs. ஷீலா ஜான்

 

ஜெபக்குறிப்பு:-

ஒடிசாவில் Mission Action Centre க்கான இடம் கிடைக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet holiganbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom meritking perabet casibom holiganbet galabet casibom padişahbet padişahbet giriş grandpashabet ibizabet tambet grandpashabet jojobet nesinecasino betbey betgit grandpashabet betpuan cashwin matbet meritking perabet perabet giriş instagram ban service betsilin betsilin giris pashagaming pashagaming giris gorabet gorabet giris kralbet holiganbet grandpashabet grandpashabet giriş holiganbet giriş çarkbet çarkbet giriş