Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 28.03.2026
Share:

By Village Missionary Movement

Saturday, 28-Mar-2026

இன்றைய தியானம்(Tamil) 28.03.2026

 

நேரத்தின் பங்களிப்பு                      

 

“...மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்து கொண்டாள் என்றார்” - லூக்கா 10:42

 

அமெரிக்காவின் 16 வது ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கனைப் பற்றி எல்லோரும் அறிந்திருப்பீர்கள். அவர் ஜனாதிபதியாக இருந்த அந்நாட்களில், ஒருநாள் அதிகாலையில் மூத்த அரசு அலுவலர்கள் சிலர் அவரைப் பார்த்து ஆலோசனையை பெறும்படி ஏற்கனவே appointment பெற்றதால் அவரிடம் சென்றனர். அவரது அறையின் அருகில் வந்த போது, அவர் யாருடனோ பேசிக் கொண்டிருந்தது போல் சத்தம் கேட்டது. இவர்களுக்கு ஒரே ஆச்சரியம். நமக்கு முன் யாருக்கு appointment கொடுத்திருப்பார் என காத்திருந்தனர். வெளியே வந்த ஆபிரகாம் லிங்கனிடம் ஐயா, நாங்கள் காலை ஐந்து மணிக்கே வந்து விட்டோம். நீங்கள் யாருடனோ பேசிக் கொண்டிருந்தீர்கள். அதற்கு ஆபிரகாம் லிங்கன் வேறு யாரும் இல்லை, நான் ஆண்டவரோடுதான் பேசிக்கொண்டிருந்தேன். எந்த மனிதரிடமும் பேசும் முன்பாக ஆண்டவரிடம் பேசுவதையே பழக்கமாக வைத்துள்ளேன் என்றார். அவர்களுக்கெல்லாம் பெரிய ஆச்சரியம். இப்படியாக ஆபிரகாம் லிங்கனின் வெற்றியுள்ள அரசாட்சியின் இரகசியம், அவர் மிகப்பெரிய பொறுப்பில் இருந்தாலும் தேவனிடம் தனிப்பட்ட முறையில் நேரத்தை செலவிட்டதே. இயேசுவானவர் பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே அவரை மார்த்தாள், மரியாள் என்ற சகோதரிகள் தங்கள் வீட்டிலேயே ஏற்றுக் கொண்டார்கள். மரியாள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக் கொண்டிருந்தாள். மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறதைக் குறித்து உமக்கு கவலையில்லையா? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள். ஆனால் மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்து கொண்டாள். மரியாள் தன்னுடைய நேரத்தை கர்த்தருக்குக் கொடுத்தாள் என நாம் வாசிக்கிறோம்.

 

இதை வாசிக்கின்றதான பிரியமானவர்களே, நம்முடைய நேரத்தை நாம் தேவனுக்கு கொடுக்கிறோமா? தேவன் நமக்கு கிருபையாக ஒவ்வொரு நாளும் 24 மணி நேரத்தை கொடுத்திருக்கிறார். நாம் அதில் எவ்வளவு நேரத்தை தேவனுக்கென்று கொடுக்கிறோம்? நாம் நம்முடைய நேரத்தை தேவையற்ற காரியங்களில் செலவிடுவதை முற்றிலும் தவிர்ப்போம். இன்று பெரும்பாலானவர்களுடைய நேரத்தை cell phone எடுத்துக் கொள்கிறது. ஆனால் அதை கண்டுபிடித்தவர் கூறும் போது, என்னுடைய நேரத்தில் 5% மட்டுமே cell phone னுக்கென்று செலவிடுகிறேன் என்றார். நாம் நேரத்தை எப்படி செலவழிக்கிறோம் என்று சிந்திப்போம். நம்முடைய நேரத்தை தேவனோடு, தேவனுக்காக, தேவ ராஜ்யம் கட்டப்பட செலவிடுவோமென்றால் அதுவே மிகப்பெரிய ஆசீர்வாதம். தேவ பாதத்தில் செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் நம்மை பெலவானாக மாற்றும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

- Mrs. சக்தி சங்கர்

 

ஜெபக்குறிப்பு:-

child care child திட்டத்தில் இணைந்துள்ள சிறுவர்கள் குடும்பத்திற்கு ஆசீர்வாதமாயிருக்க ஜெபியுங்கள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al Elexbet matbet giriş matbet instagram unban x unban twitter unban palacebet setrabet