By Village Missionary Movement
Sunday, 29-Mar-2026இன்றைய தியானம்(Tamil) 29.03.2026 (Kids Special)
கழுதைக்குட்டி
"...நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்" - யோசுவா 1:9
செல்லப் பிள்ளைகளே! இன்றைக்கு என்ன ஞாயிறு என்று தெரியுமா? குருத்தோலை ஞாயிறு, ஓசன்னா ஞாயிறுன்னு சொல்லுவாங்க. குருத்தோலைகளை பிடித்துக்கொண்டு பவனியாக ஆலயத்தைச் சுற்றி வருவாங்க. இந்த நாளில் நடந்ததை தான் உங்களுக்குச் சொல்லப் போறேன்.
இயேசப்பா இந்த பூமியில் வாழ்ந்த போது எருசலேம் என்ற பட்டணத்துக்கு போனாங்க. சீஷர்கள் இரண்டு பேரிடம், எதிரே இருக்கிற கிராமத்துக்கு போங்க. அங்கே, ஒருவரும் ஒருக்காலும் ஏறாத கழுதைக்குட்டி கட்டி இருக்கும். அதை அவிழ்த்துக் கொண்டு வாங்கன்னு சொன்னாரு. யார் என்றே தெரியாத இடத்தில் போய் எப்படி... என மனதில் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, JESUS சொன்னாங்க யாராவது ஒருவர், ஏன் கழுதைக்குட்டியை அவிழ்க்கிறீங்கன்னு கேட்டா, இது ஆண்டவருக்கு தேவைன்னு சொல்லுங்க. யாரும் ஒண்ணுமே சொல்ல மாட்டாங்க என்று சொன்னார். பார்த்தீங்களா குட்டீஸ், மனதில் நினைப்பதைக் கூட அறிந்து பதில் கொடுக்கின்ற தெய்வம் தான் நம் இயேசு. சீஷர்கள் கிராமத்துக்கு போய் JESUS சொன்னபடியே செய்தார்கள். கழுதைக்குட்டியை அவிழ்த்துக் கொண்டு வந்தாங்க. கழுதைக்குட்டி மேல் சால்வையை போட்டாங்க. JESUS அதில் ஏறி போனார். அநேகர் வழியிலே தங்கள் வஸ்திரங்களை விரித்தாங்க. மரக்கிளைகளை பரப்பி போட்டாங்க.
அப்பப்பா... JESUS மேல இருந்ததால் கழுதைக் குட்டிக்கு என்னவொரு மதிப்பு, மரியாதை! முன்னாடி நடப்போர், பின்னாடி நடக்கிறவர்கள் எல்லாரும், "கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர் உன்னதத்திலே ஓசன்னா" என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள், பாடல்களை பாடினாங்க, சந்தோஷமா இருந்தாங்க. JESUS விரும்புகின்றது என்ன தெரியுமா குட்டிஸ்! நீங்களும் இயேசுவை சுமக்கின்ற கழுதைகளாய் மாறணும். உலகத்தில் பாவம், சாபம், வியாதி இப்படி பல பிரச்சனைகளில் கட்டப்பட்ட சிறுவர்கள் அநேகர் இருக்காங்க. அவங்கள JESUS கிட்ட அழைத்துக் கொண்டு வர நீங்க தான் இயேசப்பாவுக்கு தேவை குட்டீஸ்.
நான் சின்ன பிள்ளை என்னால் எதுவும் பண்ண முடியாது என்று நினைக்காதீங்க. உங்களைக் கொண்டு தான் பெரிய பெரிய அற்புதங்களை செய்யப் போறாங்க JESUS. நான் இருக்கிறேன் உங்களை சுமக்க இப்படிச் சொல்லிப் பாருங்களேன். இயேசப்பா ரொம்ப சந்தோஷப்படுவாங்க. சரிதானே குட்டீஸ்!
- Rev. S. ஜோதி நாயகம்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864