Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 31.03.2026
Share:

By Village Missionary Movement

Tuesday, 31-Mar-2026

இன்றைய தியானம்(Tamil) 31.03.2026

 

தேவ ஈவு                      

 

"...நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்" – 1 பேதுரு 4:10

 

தேவன் நம் ஒவ்வொருவரையும் தனித்துவமாகப் படைத்துள்ளார். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான தாலந்துகளையும், திறமைகளையும் கொடுத்துள்ளார். அதாவது நம்மிடம் உள்ள அறிவு, பேச்சுத்திறன், நிர்வாகத்திறன், மற்றவர்களுக்கு உதவும் குணம் என்று எதுவாக இருந்தாலும், அது நமது சொந்த முயற்சியால் வந்தது அல்ல. அது தேவன் நமக்குக் கொடுத்த ஈவு ஆகும். நமது திறமைகளை நாம் தேவ ராஜ்யத்திற்காக பயன்படுத்தாமல் இருப்பது, அதைக் கொடுத்த தேவனை அவமதிப்பதற்குச் சமம். கைவிடப்பட்ட இரும்பு துருப்பிடிக்கும் என்பது போல, பயன்படுத்தப்படாத திறமை மங்கிப் போகும். அற்பமான காரியமோ, பெரிய காரியமோ அதை உண்மையுடன் செய்யும் போது தேவன் அதை ஆசீர்வதிக்கிறார்.

 

வேதத்தில் கூட யாத். 31:1-6 ல் பெசலெயேல் என்பவரை ஆசரிப்புக் கூடாரத்தை உருவாக்குவதற்காக தேவன் தெரிந்தெடுத்தார். ஆம், அவருக்கு கொடுக்கப்பட்ட ஞானத்தைப் பயன்படுத்தி திறமையாக பொன், வெள்ளி, வெண்கலம் ஆகியவற்றில் வேலை செய்யவும், இரத்தினங்களை வெட்டிப் பதிக்கவும், மரவேலை செய்யவும் தொடங்கினார். அது போலவே நமக்கு நியமிக்கப்பட்ட வேலை எதுவாக இருந்தாலும் அதை தேவனுக்கென்று அர்ப்பணிப்போடு செய்யும்போது தேவன் அதை ஆசீர்வதிப்பார்.

 

அது போலவே தாவீது ஆடு மேய்க்கும் சிறுவனாக இருந்த போது, யாழ் வாசிப்பதில் வல்லவராக இருந்தார். சவுல் ராஜா பொல்லாத ஆவியினால் அலைக்கழிக்கப்பட்டபோது, தாவீது யாழை மீட்டி அவருக்கு அமைதியை உண்டாக்கினார். மேலும் பற்பல சங்கீதங்களை எழுதி இன்றும் நம்மை துதிக்க செய்கிறார்.

 

ஆம், பிரியமானவர்களே! நமது திறமை மற்றவர்களை தேவனிடம் சேர்ப்பதற்கு கருவியாக இருக்க வேண்டும். "செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய் ;... " (பிரசங்கி 9:10) என்ற வசனத்தின்படி தேவன் உங்களுக்கு கொடுத்திருக்கும் திறமை எதுவானாலும், அதை தேவன் கொடுத்த 'விதை' என்று எண்ணி மற்றவர்களின் ஆசீர்வாதத்திற்காகப் பயன்படுத்தும் போது, தேவன் அதை அநேகருக்குப் பிரயோஜனமாக மாற்றுவார். ஆமென்.

- Mrs. திவ்யா அலெக்ஸ்

 

ஜெபக்குறிப்பு:-

எல்லா தாலுகாவிலும் Mission Action Centres அமைக்கப்பட ஜெபியுங்கள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking perabet casibom holiganbet galabet casibom perabet perabet giriş padişahbet padişahbet giriş grandpashabet kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet casinomilyon jojobet palacebet sonbahis tambet grandpashabet betgit mercurecasino matbet