By Village Missionary Movement
Sunday, 05-Apr-2026இன்றைய தியானம்(Tamil) 05.04.2026
கல்லறையின் இரகசியம்
“..நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;” - யோவான் 11:25
வாரத்தின் முதல்நாள் அதிகாலை நேரத்தில் சூரியன் உதயமாகிற போது, பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கும் குட்டீஸ். இன்றைக்கு என்ன day தெரியுமா? ஓ…... ஈஸ்டர் அதாவது இயேசு உயிர்த்தெழுந்ததை நினைத்து கொண்டாடுகின்ற நாள். o.k அந்த நாளில் என்ன நடந்தது என்று பார்ப்போமா?
மரியாள் அக்காவும் அவங்க friendsம் பேசிக் கொண்டே நடந்து போனாங்க. நமக்காக யார் கல்லை புரட்டுவாங்க. கல் மிகவும் பெரியதாய் இருக்கிறதே. என்ன செய்வது? இயேசுவின் உடலை பார்க்கவேண்டுமே, அவரின் உடலுக்கு சுகந்தவர்க்கமிட வேண்டுமே என்ற ஆசையில் அவர்களுக்கு நடந்த தூரமே தெரியவில்லை. கல்லறையை கண்டவுடன் ரொம்ப சந்தோஷம். எல்லாரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். ஏ மரியாள், இங்க பாரு கல்லறை திறந்திருக்கிறது என்றார்கள். மரியாள் கல்லறைக்குள் போய் இயேசுவை காணவில்லையே என்று அழுது கொண்டிருந்தாள். என்ன குட்டீஸ், நீங்க கல்லறையை பார்த்தா என்ன நினைப்பீங்க அங்க போகக் கூடாதுன்னு தானே. அதுவும் எல்லா கல்லறைகளும் மூடியிருக்கும். ஆனா JESUS கல்லறை மட்டும் திறந்திருக்கிறது பார்த்தீங்களா? சரி, அடுத்து மரியாள் அக்கா என்ன செய்தாங்கன்னு பார்க்கலாமா?
அழுது கொண்டிருந்த மரியாளையும், அவங்க தோழிகளையும் பார்த்து பயப்படாதிருங்கள் அப்படின்னு ஒருத்தர் சொன்னார். யார்னு திரும்பி பார்த்தா Bright-ஆ, உயரமா, மின்னலை போல தேவதூதன் அழகாக இருந்தாங்க. பார்த்ததும் பிரமித்துப்போய் அப்படியே பொம்மை மாதிரி நின்னுட்டாங்க தெரியுமா? Angel ஐ பார்த்தா எப்படி இருக்கும்னு ஆசையா இருக்குதா? ம்..ம்.. Heaven ல போய் பார்க்கலாம். அடுத்து தேவதூதன் என்ன சொன்னார் தெரியுமா? இயேசு இங்கே இல்லை. தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார். இந்த செய்தியை சீஷர்களுக்கு சொல்லுங்கள் என்றார். பயத்தோடும், நடுக்கத்தோடும் கல்லறையை விட்டு போனாங்க. நடந்து போய் கொண்டிருக்கும்போதே வழியில் இயேசு அவர்களை சந்தித்து வாழ்க! என்று வாழ்த்தினார். மரியாள் அக்காவும், அவங்க friends ம் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. இயேசு உயிர்த்தெழுந்த பிறகு முதன் முதலில், தன்னை தேடி வந்த மரியாளுக்கு காட்சியளித்தார். இன்றைக்கும் இயேசப்பாவை உண்மையாய் தேடுகின்ற யாவருக்கும் அவர் பக்கத்திலிருக்கிறார். குட்டீஸ், அவர் கல்லறையின் இரகசியம் என்ன தெரியுமா? இயேசு உயிர்த்தெழுந்தார். இன்றும் உயிரோடிருக்கிறார். சதா காலமும் ஜீவிக்கிறவர். தினமும் காலையில் இயேசுவை தேட மறந்து விடாதீங்க குட்டி செல்லங்களே!Happy Easter
- Mrs. ஜீவா விஜய்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864