Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 10.04.2026
Share:

By Village Missionary Movement

Friday, 10-Apr-2026

இன்றைய தியானம்(Tamil) 10.04.2026

 

அசதியாயிராதே  

 

"...தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைப் பற்றி அசதியாயிராதே" - 1 தீமோ. 4:14

 

ஒரு தாத்தா தன்னுடைய பேரனைப் பார்த்து ஒவ்வொரு நாளும் இப்படியாக கூறுவார். தம்பி, நீ நன்றாய் படித்து, எதிர்காலத்தில் IPS ஆக, உயர்ந்த அதிகாரியாக வர வேண்டும். உன்னால் நிச்சயம் சாதிக்க முடியும் என்று எப்போதும் கூறுவார். அவனைப் பார்ப்பவர்களும், நீ அப்படியே police மாதிரியே இருக்கிறாய் என்று சொல்லும்போது, அவனுடைய உள்ளம் பூரிப்பாகும், மனதில் துணிச்சல் உண்டாகும். ஆனால் தன்னுடைய பாடுகள் நிறைந்த வாழ்க்கையைப் பார்க்கும்போது, இதுவெல்லாம் நடப்பதற்கு வாய்ப்பே இல்லையே என்று சொல்லி நம்பிக்கையிழந்து சோர்ந்து போவான். அவனுக்கு IPS ஆக தகுதி இருந்தும் இருதயத்தில் குடி கொண்ட சோர்வு, இது நடக்காது என்று அவனை அசதியுள்ளவனாக்கியது. 

         

 வேதத்திலும் "மூப்பராகிய சங்கத்தார் உன்மேல் கைகளை வைத்தபோது, தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைப் பற்றி அசதியாயிராதே என்று 1 தீமோ. 4:14 ல் எழுதப்பட்டுள்ளது. இப்படித்தான், ஊழியர்கள் நம் மேல் கைகளை வைத்து ஜெபம் பண்ணும் போது, தேவனுடைய ஆவியினால் நிரப்பப்பட்டு, நமக்கு தீர்க்கதரிசனமான வார்த்தைகளை சொல்லுவார்கள். ஆனால் நாமோ அதை உற்சாகமாய் கேட்போம். பின்பு நம்முடைய சூழ்நிலையைப் பார்த்து அதுவெல்லாம் நடக்க சாத்தியம் இல்லை என்று மறந்து விடுவோம். அதை குறித்து சற்றும் கூட யோசிக்காமல், அசதியாயிருப்போம். எண்.23 : 19 ல் "பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா" என்று கூறுகிறது.

            

இதை வாசிக்கும் அன்பரே, நாமும் தேவன் நமக்கு கொடுத்த வாக்குத்தத்த வார்த்தைகளைக் குறித்தும், வரத்தைக் குறித்தும் அசதியாயிராமல், அதை வைத்து உண்மையாய், கருத்தாய் தினமும் ஜெபம் பண்ண வேண்டும். நிச்சயமாய் தேவன் நம்முடைய வாழ்வில் ஏற்ற காலத்தில் அதை நமக்கு வாய்க்கப் பண்ணுவார். ஆகவே, வசனத்தை உறுதியாய் பிடித்து நம்முடைய வாழ்வில் இயேசுவுக்காய் பெரிய காரியம் செய்து அவருக்காய் வைராக்கியமாய் வாழ முன் வருவோம்.  

- R. தர்ஷன்

 

ஜெபக்குறிப்பு:-

மிஷினெரி பயிற்சிக் கட்டிடம் கட்டுவதற்கான அரசாங்க அனுமதிகள் கிடைக்க ஜெபியுங்கள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al Elexbet matbet giriş matbet instagram unban x unban twitter unban palacebet setrabet