Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 10.05.2026 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 10-May-2026

இன்றைய தியானம்(Tamil) 10.05.2026 (Kids Special)

 

மாதிரியாய் இரு

 

“நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.” - யோவான் 13:15

 

ஹாய் குட்டீஸ், விளையாட்டு என்றால் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் அல்லவா! லீவு விட்டால் போதும் கையில் பிடிக்கவே முடியாது அப்படித்தானே! நீங்கள் என்ன விளையாட்டு விரும்பி விளையாடுவீர்கள் என்று கேட்டால் உங்களில் அநேகர் சொல்வது கிரிக்கெட்டாகத் தான் இருக்கும். உங்களை போலத்தான் குமாரும் கிரிக்கெட்டில் பைத்தியமாய் இருந்தான். அது மாத்திரமல்ல படிப்பிலும், ஆலயத்திற்குச் செல்வதிலும், ஜெபிப்பதிலும் சிறந்து விளங்கினான். 

 

ஒரு லீவு நாளன்று குமார் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்றான். சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருக்கும் போது 'டமார்' என்ற ஒரு பெருஞ்சத்தம். திரும்பி பார்த்தால் இவர்கள் அடித்த பந்து பக்கத்து வீட்டு ஜன்னலில் பட்டு, ஜன்னல் கண்ணாடி உடைந்து விட்டது. விளையாடிக் கொண்டிருந்த அனைவரும் குமார்தான் ஜன்னலை உடைத்தான் என்று அவன் மேல் பழியை போட்டுவிட்டு வீட்டிற்கு போய்விட்டார்கள். இவனோ தனிமையாய் அழுதுகொண்டே அந்த வீட்டை நோக்கி நடந்தான். அந்த வீட்டு வாசலில் குண்டான, உயரமான ஒருவர் நின்று கொண்டிருந்தார். இவனுக்கு அவரைப் பார்க்கவே பயமாக இருந்தது. ஆனாலும் அழுது கொண்டே அவரிடம் சென்று sorry Uncle, நாங்கள் தான் உங்கள் வீட்டு ஜன்னலை உடைத்துவிட்டோம். எங்களை மன்னித்து விடுங்கள் என்று கெஞ்சினான். ஜன்னலுக்கு ஆகும் செலவை என் அப்பாவிடம் சொல்லி உங்களுக்கு கொடுத்து விடுகிறேன் என்றான். அந்த uncle குமாரைப் பார்த்து அழாதே தம்பி! உன்னுடன் வந்த எல்லோரும் தாங்கள் செய்த தவறை உணராமல் தப்பிக்க வகை தேடினார்கள். ஆனால் நீ மட்டும் தான் செய்த தவறுக்காய் வருந்தி மன்னிப்பு கேட்க வந்திருக்கிறாய். உன்னுடைய நல்ல குணத்தை நான் பாராட்டுகிறேன் என்று சொல்லி வீட்டிற்குள் சென்று ஒரு பெரிய சாக்லேட்டை எடுத்து வந்து அவன் கையில் கொடுத்து அனுப்பினார். இவனும் சந்தோஷமாய் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தான். அப்பொழுது நடந்த எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெரியவர் குமாரை அழைத்து, நீ யார்? உன் பெயர் என்ன? உனக்குள் இப்படிப்பட்ட நல்ல குணங்கள் எப்படி வந்தது? என்று விசாரித்தார். இவன் நான் ஒரு கிறிஸ்தவ பையன் என்று சொல்லி கிறிஸ்துவின் அன்பையும் எடுத்துக் கூறினான். அதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த பெரியவரின் உள்ளத்தில், தான் இத்தனை ஆண்டுகளாய் கிறிஸ்தவனாக இருந்தும் தன்னிடத்தில் இப்படிப்பட்ட நல்ல குணநலன்கள் இல்லையே என மனம் வருந்தினார்.

 

அன்பான தம்பி தங்கச்சி, நீங்கள் எப்படி? இந்த குமாரைப் போல செய்த தவறை மறைக்காமல், மன்னிப்பு கேட்டு முன்மாதிரியாய் நடந்து மற்றவர்களை கிறிஸ்துவண்டை வழிநடத்துவீர்களா?

இயேசுவை போல Model லா இரு.

- Mrs. ஜீவா விஜயகுமார்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al padişahbet padişahbet giriş