Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 13.05.2026
Share:

By Village Missionary Movement

Wednesday, 13-May-2026

இன்றைய தியானம்(Tamil) 13.05.2026

 

“என் தாசனாகிய மோசேயோ... என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்” - எண் 12:7   

 

“தேவன் உன்னை தமது ஊழியக்காரனாக அழைப்பாரானால், நீ ராஜாவாகும்படி உன் தரத்தை தாழ்த்தாதே” என்று C.H. ஸ்பர்ஜன் என்ற தேவ மனிதர் கூறுகிறார். இவர் ஒரு புகழ்பெற்ற ஆங்கில பாப்டிஸ்ட் போதகர் ஆவார். அவர் “பிரசங்கிகளின் இளவரசன்” என்று பரவலாக அறியப்படுகிறார். அவரது பிரசங்கங்கள் மற்றும் எழுத்துக்கள் இன்றளவும் மிகவும் பிரபலமாக உள்ளன. தேவனுடைய அழைப்பானது இவ்வுலக ராஜ மேன்மையை விட பன்மடங்கு சிறந்தது. ராஜ மேன்மையை ஒரு வேளை நம் உழைப்பால் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் உன்னத தேவனின் அழைப்பு அதைவிட மேலானது. அந்த அழைப்பின் உண்மையான மகத்துவம், பூமிக்குரிய வாழ்வில் நமக்கு கிடைக்கும் உயர்வில் அல்ல; தேவனுடைய தரிசனத்திற்கு கீழ்ப்படிந்து அதற்கு உண்மையாய் இருப்பதில் தான் உள்ளது.

 

மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்த குணமுள்ளவனாயிருந்தான். மோசேயை அழைத்தவர் உண்மையுள்ளவர். கர்த்தர் மோசேயை குறித்து கூறுகையில், என் தாசனாகிய மோசேயோ என் வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன். நான் அவனுடன் மறைபொருளாக அல்ல, முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன். அவன் கர்த்தரின் சாயலைக் காண்கிறான் என்றார். அதனால் மோசே அரிய பெரிய காரியங்களை தேவனுடைய உதவியோடு செய்தார். உண்மையாய் இருப்பது அவ்வளவு சுலபம் அல்ல. பல அவமானங்கள், நிந்தைகள் மற்றும் பரிகாசங்களைச் சுமக்க வேண்டியதாயிருக்கும். ஆனால் வேதத்தில் எழுதப்பட்டுள்ளபடி உண்மையுள்ள மனுஷன் நிச்சயமாகவேப் பரிபூரண ஆசீர்வாதங்களை எல்லா எல்லைகளிலும் பெறுவான். அதை எதுவும் தடுத்து நிறுத்த இயலாது. கர்த்தர் விரும்புகிற சுபாவங்களில் மிக முக்கியமானது உண்மை மற்றும் உத்தமம்.

 

தேவன் டேவிட் கணேசன் அண்ணன் அவர்களை அழைத்து, புதிய ஜீவனை கொடுத்து தன்னுடைய அழைப்பில் உண்மையுள்ளவராயிருப்பார் என்று கிராம மிஷனெரி இயக்கத்தை கொடுத்திருக்கிறார். ஏழாயிரம் மிஷனெரிகள், ஒரு லட்சம் கிராமங்கள் என்ற திட்டத்தை நிறைவேற்ற, ஆண்டவருடைய கண்ணீரைத் துடைக்க, ஒத்த தரிசனம் உடைய முழுநேர ஊழியர்களை பலவிதமான சூழ்நிலைகளிலிருந்து கொண்டு வந்து ஊழியத்தில் இணைத்துள்ளார்.

 

ஆண்டவரின் அழைப்பை முழுமனதாய் ஏற்று, உண்மையுள்ளவர்களாய் ஊழியம் செய்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவது இலகுவாயிருக்கும். எனவே நாம் உண்மையாய் அவரை சார்ந்து கொண்டு உலகமெங்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட நமது பங்களிப்பைக் கொடுப்போம். பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவோம்.

- Bro. I. ஜெயபால்

ஜெபக்குறிப்பு:

VBS ஊழியத்திற்காக ஜெபிக்கும் ஜெபக்குழுக்கள் எழும்ப ஜெபியுங்கள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş meritking meritking giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet jojobet jojobet esbet sonbahis tambet grandpashabet betgit mercurecasino