Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 14.05.2026
Share:

By Village Missionary Movement

Thursday, 14-May-2026

இன்றைய தியானம்(Tamil) 14.05.2026

 

உயிர்த்தெழுந்தார்

 

“தேவபக்தியோடே...அன்பையும் கூட்டி வழங்குங்கள்.” - 2 பேதுரு 1:7

 

ஹிட்லர் ரஷ்யாவைக் கைப்பற்றின போது அங்கிருந்த எல்லா தேவாலயங்களும் இடிக்கப்பட்டு தரைமட்டம் ஆக்கப்பட்டன. ஆனால் எப்படியோ ஒரே ஒரு தேவாலயம் மட்டும் தப்பினது. அதே நேரத்தில் இயேசு உயிர்த்தெழுந்த பண்டிகையும் வந்தது. பண்டிகை அன்று அந்த ஆலயத்திலே மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. உற்சாகமாய் பிரசங்கித்துக் கொண்டிருந்த போதகர் அந்த அதிகாலை வேளையில் கைது செய்யப்பட்டார். போலீசார் அவரை அழைத்துச் செல்லும் முன்பு தன் சபையாரிடம் மூன்று வார்த்தைகள் மட்டும் பேச வேண்டுமென அனுமதி கேட்டார். மூன்று வார்த்தைகளுக்கு மேல் பேசக் கூடாதென்ற நிபந்தனையோடு அனுமதி வழங்கப்பட்டது. போதகர் தன் சபையாரைப் பார்த்து, தன் சத்தத்தை உயர்த்தி, தன் முழு பெலத்தோடு, “இயேசு உயிரோடிருக்கிறார், அல்லேலூயா” என மகிழ்ச்சியோடு முழங்கினார். இந்த வார்த்தைகள் தீப்பொறியாய், வெடிமருந்தாய் விசுவாசிகள் உள்ளத்தை ஊடுருவிச் சென்றன. அதனால் ஒவ்வொரு விசுவாசியின் இருதயத்திலிருந்தும் பயம் புறம்பே தள்ளப்பட்டு, தைரியத்தின் ஆவியால் நிரம்பினார்கள். “இயேசு உயிரோடிருக்கிறார், அல்லேலூயா” என்று முழங்க ஆரம்பித்து விட்டனர். கிறிஸ்தவத்தை அழிக்க நினைத்த அந்த தேசத்தை இந்த மூன்று வார்த்தைகள் அதிர வைத்தன. இந்த வாசகத்தைக் கேட்ட ஒவ்வொருவருடைய இருதயமும் கர்த்தருக்காய் கொழுந்து விட்டு எரிந்தது. ஒரு தாலந்தைப் பெற்றவன் பயத்தினாலே அதைப் புதைத்து வைத்தான். பயம் தேவையுள்ளது என்றாலும் சில சமயம் அது தேவனுக்காக நாம் செயல்படுவதைத் தடுத்துவிடும். பயத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த அரிமத்தியா யோசேப்புக்கு ஒரு அசாத்தியமான துணிவும், தைரியமும் வந்து பிலாத்துவிடம் சென்று இயேசுவின் சரீரத்தைக் கேட்டார். இந்த தைரியம், துணிவு எப்படி வந்தது ? இயேசுவின் மேல் வைத்த அன்பே. இவர் தனக்கென வைத்திருந்த தன் புதிய கல்லறையை இயேசுவுக்குக் கொடுத்தார். பிரதிபலன் பாராமல், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தன் கல்லறையை இயேசுவுக்குக் கொடுத்த அரிமத்தியா யோசேப்புக்கு இயேசு உயிர்த்தெழுந்த பின் கல்லறை அவரிடமே வந்தது. நாமும் நமக்கானதைக் கர்த்தருக்குக் கொடுப்போம்.

 

இதை வாசிக்கும் தேவப்பிள்ளையே! தேவன் நமக்குள்ளே எத்தனையோ தாலந்துகளையும், திறமைகளையும் கொடுத்துள்ளார். அவைகளை நாம் எப்படி பயன்படுத்துகிறோம்? நமக்கு அருமையானதை முழுமையாகவும் முழு மனதோடும் தேவனுக்குக் கொடுப்போம். பிறர் நம்மை புகழவேண்டும் என்றோ, பிறருடைய கட்டாயத்தின் பேரிலோ கொடுப்போமென்றால் அதில் பிரயோஜனமில்லை. அது தேவனுடைய கணக்கில் சேராது. அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன். உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.

- Mrs. பிரிசில்லா தியோபிலஸ்

 

ஜெபக்குறிப்பு: 

VBS ஊழியத்திற்காக ஜெபிக்கும், கொடுக்கும், வீட்டைத் திறந்து கொடுக்கும் நபர்களின் எல்லைகளை தேவன் விரிவாக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom meritking perabet casibom holiganbet galabet casibom padişahbet padişahbet giriş grandpashabet jojobet cashwin grandpashabet radissonbet palacebet amgbahis cratosroyalbet grandpashabet betpuan betsalvador matbet meritking perabet perabet giriş instagram ban service betsilin betsilin giris pashagaming pashagaming giris gorabet gorabet giris kralbet holiganbet