Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 18.05.2026
Share:

By Village Missionary Movement

Monday, 18-May-2026

இன்றைய தியானம்(Tamil) 18.05.2026

 

ஜெபியுங்கள்     

 

“ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்” - சங்கீதம் 65:2

 

தன் ஒரு வயது மகனை கூட்டிக்கொண்டு சுந்தர் தன்னுடைய வேலை ஸ்தலத்திற்குச் சென்றார். அங்கு அவனை பலரும் தூக்கி சந்தோஷமாக விளையாடி மகிழ்ந்தனர். அவனுக்கு தண்ணீர் தாகம் எடுத்ததும், தன் தந்தையிடம் ஓடி சென்று தண்ணீர் கேட்டான். தனக்கு பசி எடுத்ததும் தன் தந்தையிடம் சென்று பிஸ்கட் வாங்கி சாப்பிட்டான்.

 

கிறிஸ்தவர்களாகிய நாமும் கூட நமக்கான தேவைகள் எதுவாக இருந்தாலும், நம் பரம தந்தையை நோக்கிப் பார்த்து கேட்க வேண்டும். ஒரு தாய் துக்கத்தோடு ஒரு மகனைப் பெற்றதால் அவனுக்கு யாபேஸ் எனப் பெயரிட்டார்கள். ஆனால் யாபேஸ் வளரும் போது, என் தாய்க்கு வந்த துக்கம் என் வாழ்வில் வரக்கூடாது என நினைத்து, தேவனிடத்தில் தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என ஜெபிக்கிறார். அவர் ஜெபித்தபடியே தேவன் அவருக்கு அருளினார். நம் உலகப் பிரகாரமான மற்றும் ஆவிக்குரிய தேவைகள் எதுவானாலும் அதற்காக தேவனிடம் ஜெபிக்க வேண்டும். ஜெபிக்கும் போது அவர் நம் ஜெபத்தைக் கேட்டுப் பதில் தருவார்.

 

நம் இயலாமையை, குறைச்சலை சொல்லியே மனிதர்கள் நம்மை அழைக்கலாம். ஆனால் தேவனிடம் ஜெபிக்கும் போது தேவன் நம் ஜெபத்தைக் கேட்டு நம் நிலையை மாற்றி விடுகிறார். ஆனால் நாம் அவரிடம் வர வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். அப்படி செல்லும்போது நம் விருப்பத்தை நிறைவேற்றுகிறார்.

- Mrs. ஷீலா ஜான்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al padişahbet padişahbet giriş