By Village Missionary Movement
Tuesday, 19-May-2026இன்றைய தியானம்(Tamil) 19.05.2026
காத்திருக்குதல்
“நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்.” - நீதி.13:12
பெதஸ்தா குளம் வித்தியாசமானது. சில சமயங்களிலே தேவதூதன் இறங்கி குளத்திலுள்ள தண்ணீரைக் கலக்குவான். அப்போது முதலில் இறங்குபவர்கள் எப்பேர்பட்ட வியாதியுள்ளவர்களாயிருந்தாலும் சுகம் பெறுவர். ஆகவே அக்குளத்தைச் சுற்றியுள்ள ஐந்து மண்டபங்களில் பலவிதமான வியாதியுள்ளவர்கள் இருப்பார்கள். அதில் முப்பத்தெட்டு வருஷம் வியாதி கொண்டிருந்த ஒருவர் இருந்தார். இயேசு அங்கு சென்று அவரை சொஸ்தமாக்கினார்.
அந்த மனிதனை மட்டும் தேடி செல்லக் காரணம் அவர் முப்பத்தெட்டு வருடங்களாக அதே இடத்தில் நம்பிக்கையோடு காத்திருந்தார். இயேசு சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டதும் தன் விசுவாசத்தை அறிக்கை செய்கிறார். குளத்திலுள்ள தண்ணீர் கலக்கப்படும் போது, கொண்டுபோய் விட ஒருவருமில்லை என்கிறார். விட்டால் சுகமாவேன் என நம்புகிறார். அந்த விசுவாசம், காத்திருக்குதல் இவற்றைப் பார்த்து இயேசுவே அவனை தேடி சென்றார். எனக்கு சுகமெல்லாம் கிடைக்காது, என்னால் போக முடியாது, நான் இங்கிருந்து பயனில்லை என எண்ணாமல் காத்திருந்தார். அதனால் மனிதர் உதவிசெய்யாவிட்டாலும் தேவன் தேடி சென்று சுகம் கொடுத்தார்.
பிரியமானவர்களே, நீங்களும் கூட ஜெபத்தைக் கேட்கிறவரிடத்தில் ஜெபித்தும் பலனில்லை என எண்ணுகிறீர்களா? முப்பத்தெட்டு வருடமாய் காத்திருந்த அவரை நினைத்துக் கொள்ளுங்கள். எனவே விண்ணப்பத்திற்கு பதில் கிடைக்கும் வரை விசுவாசத்தோடு ஜெபியுங்கள். தேவனே தேடி வந்து உங்களுக்கு அற்புதம் செய்வார். விசுவாசத்தோடு காத்திருங்கள். அற்புதத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
- Sis. லதா
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864