By Village Missionary Movement
Wednesday, 20-May-2026இன்றைய தியானம்(Tamil) 20.05.2026
கற்றுக்கொள்ளுங்கள்
"நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்." - சங்கீதம் 119:71
கிறிஸ்தவ சீர்திருத்தவாதி மார்ட்டின் லூத்தர் கிங்-ன் மனைவி இவ்வாறு கூறினார், ‘என் வாழ்க்கையில் தேவன் சில வேதனைகளைக் கொண்டு வராதிருந்தால் சங்கீத புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ள சில வரிகளின் பொருளை நான் அறியாதிருந்திருப்பேன்’ என்று!உபத்திரவம், நெருக்கம் வரும்போது, நாம் நமக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என கவலைப்படுகிறோம், மற்றவர்களிடம் புலம்புகிறோம். ஆனால் அவைகள் தேவனின் சித்தம் நம்மில் நிறைவேற, நம்மை உருவாக்க ஏதுவாயிருக்கிறது. உபத்திரவத்தின் பாதையில் கடந்து செல்லும்போது தான், நாம் கர்த்தரின் வல்லமையைக் காண முடியும். நெருக்கங்களின் பாதையில் தான் நாம் சில பாடங்களை கற்றுக் கொள்ள முடியும். பாடுகள், கஷ்டங்கள், உபத்திரவங்கள் வராதிருந்தால் நாம் நமக்கு இருக்கும் சொந்த பெலனையே நம்புவோம். யோசேப்பு ஒரு பெரிய அதிபதியாய் உயர்த்தப்படுவது தேவனின் திட்டம். அதற்கு அவர் அடிமையாய் செல்ல வேண்டியிருந்தது. போத்திபாரின் வீட்டு காரியங்கள் எல்லாவற்றையும் பார்த்து விசாரிக்க வேண்டியிருந்தது. பின் சிறையில் அடைக்கப்பட வேண்டியிருந்தது. அப்போது தான் சொப்பனத்திற்கான விளக்கத்தை சொல்லும் கிருபை தனக்கு கொடுக்கப்பட்டதை அறிந்தார்.
அதே போல் தான் பிரியமானவர்களே, நம்மையும் தேவன் பெரிய திட்டத்தோடு உண்டாக்கியுள்ளார். அந்த திட்டம் நிறைவேறவே தேவன் இப்படிப்பட்டதான பாதையில் அழைத்துச் செல்கிறார். அப்படி நாம் செல்லும்போது தேவனே, நான் கற்றுக்கொள்ள வேண்டியவற்றை கற்றுக்கொண்டு நீர் விரும்புகிற விதமாய் உருவாக எனக்கு உதவி செய்யும் என ஜெபித்துக் கடப்போம். தேவன் தாமே நம்மை பெலப்படுத்துவாராக. ஆமென்.
- Mrs. ஜோதி ஆனந்த்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864