Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 24.05.2026 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 24-May-2026

இன்றைய தியானம்(Tamil) 24.05.2026 (Kids Special)

 

நவியா – காவியா

 

"உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயது சென்றவளாகும் போது அவளை அசட்டைபண்ணாதே" - நீதி. 23:22

 

அம்மா... காவியாவை பாருங்க. என்கிட்ட வம்பு இழுத்துக்கிட்டே இருக்கா. அப்புறம் நான் அடிச்சிடுவேன். நீங்க என்னை எதுவும் சொல்லக்கூடாது என்று கத்திக்கொண்டே Kitchen ல இருக்கும் அம்மாவிடம் சென்றாள் நவியா. அம்மா கையில் கரண்டியோடு உங்க ரெண்டு பேருக்கும் என்னதான் பிரச்சனை. எப்பப் பார்த்தாலும் சண்டை போட்டுக்கிட்டே இருக்கிறீங்க. இரண்டு பேரும் நான் வேலையை முடிச்சிட்டு வரும் வரையிலும் முழங்காலிலேயே நில்லுங்கன்னு சொல்லிவிட்டு கோபமாக போய்விட்டார்கள். நவியாவும், காவியாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து முறைத்தபடியே முழங்காலில் நின்றார்கள். இவர்கள் இருவரும் அம்மா என்ன வேலை சொன்னாலும் செய்ய மாட்டாங்க. உன்ன தான் சொன்னாங்க என்று மாறி மாறி சொல்லிக் கொண்டே இருப்பாங்க. அம்மாவுக்கு தலைவலியை வர வச்சுருவாங்க.

            

ஒரு நாள் இவர்கள் இரண்டு பேரும் பக்கத்து தெருவில் உள்ள தங்களது தோழி வீட்டிற்குச் சென்றார்கள். அங்கேயும் இவர்களைப் போலவே இரண்டு பிள்ளைகள் ப்ரீத்தி மற்றும் பிருந்தா. அந்த வீட்டில் நிறைய பேர் சோகத்துடன் உட்கார்ந்திருந்தார்கள். தோழிகள் இருவரும் அழுது கொண்டு இருந்தார்கள். தோழியின் அம்மா மிகவும் வியாதிப்பட்டு, எழும்ப முடியாமல் படுத்த படுக்கையாய் கிடந்தார்கள். Doctor அவர்களை பரிசோதித்து விட்டு, கடுமையான மன உளைச்சலுக்குள்ளாகி இவர்களின் சரீரம் மிகவும் பலவீனமாகி விட்டது. இவர்களால் இனிமேல் எழும்ப முடியாது, ஒரு வேலையும் செய்ய முடியாது என்றார். ப்ரீத்தி மற்றும் பிருந்தாவை பார்த்து உங்கள் அம்மா பயங்கர stress ஆகி இப்படி பலவீனமாகி விட்டார்கள். அம்மா பேச்சை கேட்டு, சண்டை போடாமல் அவங்களுக்கு உதவியா இருந்திருந்தால் அவங்களுக்கு இந்த நிலைமை வந்திருக்காது என்று சொல்லி விட்டு அந்த family doctor கிளம்பினார். இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த நவியா மற்றும் காவியாவுக்கு பயம் வந்தது. ஐய்யய்யோ நம்ம இரண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டு அம்மாவை எவ்வளவு கஷ்டப்படுத்தி இருக்கிறோம். அம்மாவும் அந்த aunty ஐ போல ஆகிட்டாங்கன்னா நம்ம என்ன செய்யுறது. இனிமேல் இரண்டு பேரும் சண்டையே போடக்கூடாது. சமாதானமா அம்மா சொல்றத எல்லாம் கேட்டு வேலையை share பண்ணி செய்யணும்னு முடிவு செய்தாங்க.

 

என்ன குட்டீஸ், நீங்க எப்படி? அம்மாவை கஷ்டப்படுத்த போறீங்களா இல்ல அவங்களுக்கு help பண்ணி அவங்கள சந்தோஷப்படுத்த போறீங்களா? எல்லாருமே உங்க பெற்றோருக்கு help பண்ணணும் O.K வா. 

- Mrs. சாராள் சுபாஷ்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al betpas bahiscasino imajbet imajbet imajbet casibom casibom giriş jojobet jojobet giriş